அம்பாறை, திருக்கோவில் குடிநிலம் சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தைச் சேர்ந்த இருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இழக்கான நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளில் சனிக்கிழமை (29) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி கிராமத்தை சேர்ந்த சதாசிவம் வரதராஜா (வயது 54) மற்றும் சின்னத்தம்பி சாந்தி (வயது 34) ஆகிய இருவரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இன்று காலை இழக்காகியுள்ளனர்.
குறித்த இருவரும் அருகில் இருந்த முத்தத்தோடை பாலத்தடியில் விறகு எடுப்பதற்காக சென்றிருந்தபோது பற்றை புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை இவர்களை தாக்கியுள்ளது.
இவர்களில் ஒருவர் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை 28ஆம் திகதி இரவு குடிநிலக் கிராமத்திற்கு யானைகள் நுளைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments