மட்டக்களப்பு கல்குடா பகுதியில் குழந்தையொன்று விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தை எண்ணாயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு கல்குடா கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண் ஒருவரே தமது மூன்றாவது குழந்தையை விற்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில குழந்தையின் தாய், குழந்தையை வாங்கிய பெண் மற்றும் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு துணைபுரிந்த பெண் ஆகியோர் கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரான் முருகன் கோயில் கோரகல்லிமடு பகுதியிலிருந்து குழந்தை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது
வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த குறித்த பெண் வெளிநாடு செல்வதற்கு பணத்தை திரட்டுவதற்காக குழந்தையை விற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments