மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஒருங்கினைந்த திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டத்தின் கீழ் பொது மக்கள். சமூக குழுக்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இதன் பொருட்டு இன்று ஆரையம்பதி Dataget நிறுவன கணணி பயிற்சி நிலைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மண்முனைபற்று பிரதேச சபையின் கணணி பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்றது. பிரதேச சபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் அவர்களின் பணிப்பின் பெயரில் சனசமூக உத்தியோகத்தர் க.ரவிந்திரன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இச் செயலமர்வு யுனொப்ஸ் நிறுவனத்தின் சமூக வலுவூட்டாளர் வி.விமலேந்திரன் அவர்களினால் நடாத்தப்பட்டது.
இதில் திண்மக் கழிவு அகற்றல் தரம்பிரித்தல், திண்மக் கழிவு மீள் சுழற்சி உட்படுத்தல், சேதனப் பசளைகள் தயாரித்தல் போன்ற பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments