சிவானந்தா பழைய மானவர் சங்கத்தின் அவுஸ்த்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதி மாணவர்களின் கல்வியை மேற்படுத்தும் நோக்கில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டின் ஒரு கட்டமாக இன்று (28-03-2014) பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட திருக்கொன்றை முன்மாரி விவேகானந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பட்டிருப்பு வலய பிரதிகல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.எம்.உலகேஸ்வரம், போரதீவு பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.பாலச்சந்திரன், உதவிக்கல்விப்பணிப்பாளர் (ஆரம்பகல்வி )பா.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாடசாலை அதிபர் திரு.க.கணேசரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
சிவானந்தா பழைய மாணவர் திரு.அ.அழகுராஜா அவர்களின் ஏற்பட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
0 Comments