மட்டக்களப்பு காத்தான்குடியில் நவீன முறையிலான ஐஸ்போதைப்பொருட்களுடன் மூவர் கைது

Wednesday, October 31, 2018


மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் முதன்தடவையாக “ஐஸ்” எனப்படும் புதிய ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி பொடி பண்டார தெரிவித்தார்.

பாசிக்குடா ஹோட்டல் ஒன்றிலிருந்து நவீன கார் ஒன்றிலே சூட்சுமமான முறையில் பதுக்கிவைத்தும்,பாதுகாப்புடன் குறித்த ஐஸ் போதைப்பொருளைக் கடத்திவந்த நிலையில் காத்தான்குடி குட்வின சந்தியில் வைத்து, மூன்று இளைஞர்களை செவ்வாய்க்கிழமை (30) காலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


போதைப்பொருளை கடத்தி வந்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், மட்டக்களப்பையும், பாசிக்குடாவையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசுக் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் போதைப்பொருள் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்களுக்கும்,ஏனையோருக்கும் போதைப்பொருளை ஊட்டி எப்படியோ சமுதாயத்தை அழிக்கும் நோக்கில் பல பணம்படைத்தவர்கள் ஆடம்பர வாகனங்களுடன் நடமாடுவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.இவ்வாறானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் உழைத்து வந்து இவ்வாறான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சந்தேகநபர்கள் மூவரையும், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் தெரிவித்த காத்தான்குடி பதில்-பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இச்சம்பவதுடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

விசேட செய்தி: நாடாளுமன்றம் அதிரடியாக கூட்டப்படவுள்ளதா? வெளியாகிவரும் புதிய தகவல்கள்!

சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு இணங்காவிட்டால் விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜெயசூரிய எடுப்பார் என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என விடுத்துள்ள கோரிக்கையை தான் செவிமடுத்தே ஆகவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் மாலை ஐந்து மணிக்கு ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணான விடயம் எனவும் ஜனாதிபதி உடனடியாக சபா நாயகரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்றை மீளக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் கூறிவரும் நிலையில் இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி நாடாளுமன்றைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில் நாடாளுமன்றைக் கூட்டும் அதிகாரம் சபா நாயகருக்கு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
READ MORE | comments

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பம்; பெரும் மகிழ்ச்சியில் ரணில்: என்ன செய்யப்போகிறார் மஹிந்த?!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
அலரி மாளிகையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான, மனோ கணேசன், திகாம்பரம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், வேலுகுமார் மற்றும் அரவிந்தகுமார் ஆகியோர் இவ்வாறு தமது ஆதரவினை ஐ.தே.கவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
READ MORE | comments

தொடரும் பதற்றம் - இராணுவத்தின் இரண்டு ஹெலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டன?

ஆப்கானிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியதால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஃபரா மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான நாசர் மெஹ்ரி கூறுகையில், இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து ஹெராத் மாகாணத்திற்கு அருகே விழுந்துள்ளதாக தெரிவித்தார்.
இறந்தவர்களில் மேற்கு ஆப்கானிஸ்தானின் துணை இராணுவப் படைத் தளபதியும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.
ஹெராத் மாகாணத்திற்கு செல்லும் பாதையில் மோசமான வானிலை நிலவியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த உலங்கு வானூர்த்திகள் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வேறு செய்திகள் கூறுகின்றன.
READ MORE | comments

அலரிமாளிகை ஊழியர்களுக்கு இடமாற்றம்!


புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நானே தொடர்ந்தும் பிரதமர் என தெரிவித்து ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
READ MORE | comments

ஆட்டோ கட்டணங்களை குறைக்க தீர்மானம்


ஆட்டோ கட்டணங்களை குறைப்பதற்கு அகில இலங்கை சுய தொழிலாளர்கள் முச்சக்கர வண்டி சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நாளை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்கும் போது இரண்டாவது கிலோ மீற்றரிலிருந்து அதிகரிக்கப்பட்ட 5 ரூபா கட்டணத்தை மீண்டும் குறைப்பதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளார். -(3)
READ MORE | comments

மைத்திரிக்கு தொடரும் அழுத்தங்கள்; பிரித்தானிய நாடாளுமன்றில் காரசாரம்!

இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிகோ ஸ்வைர் நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார்.
அத்துடன் சர்வதேச சமூகம், ரணில் விக்கிரமசிங்கவின் வெளியேற்றல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஸ்வைர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய வெளியுறவு செயலர் ஜெரமி ஹன்ட்டிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவு செயலர் ஜெரமி ஹன்ட், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரியுடன் பேசி இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளதாக தெரிவித்தார்.
READ MORE | comments

கொழும்பில் இன்று நடந்த மிக மோசமான சம்பவம்; விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!

சிறிலங்கவில் ஏற்பட்டிருக்கும் அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஒக்டோபர் 31ஆம் திகதியான இன்றைய தினம் புதன் கிழமை கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமானது முதல் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர் வீழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.
எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததையடுத்து ஏற்படுத்தபட்டிருந்த அரசியற் குழப்பத்துக்கு மத்தியிலும் நேற்று முந்தினம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகம் அபரிமிதமான உயர்வை காண்பித்திருந்தது.
இந்த திடீர் உயர்வு மைத்திரி மகிந்த அரசாங்கத்துக்குச் சார்பான முதலீட்டாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ள பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தற்போது அவர்களால் தொடர்ந்தும் இதனைச் செய்யமுடியாததாலேயே உண்மையான நிலைமையை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கியதை அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம்வசம் இருக்கும் பங்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விற்றுவருவதாகவும் கொழும்பு பங்குச் சந்தை முகவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.
இதேவேளை, சிறிலங்கா அரசியலில் ஏற்பட்டிருக்கிற குழப்பகரமான நிலைமை வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருப்பதாக பங்குச் சந்தை தர நிருணய அமைப்புக்களாக கருதப்படும் மூடி மற்றும் பிச் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.
பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியமை சிறிலங்காவின் பொருளாதாரத்திலும் வெளிநாட்டு முதலீடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருபதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்புக்கள் இந்த நிலைமையை கூடிய விரைவில் மாற்றிக்கொள்ளாவிட்டால் மேலும் மோசமடையலாம் எனவும் எச்சரித்துள்ளன.
இந்த நிலையிலேயே கொழும்பு பங்குச் சந்தை அனைத்துப் பங்குகளின் சுட்டெண் 0.34 வீதத்தால் வீழ்ச்சியைப் பதிவுசெய்திருக்கிறது.
இதேவேளை, சிறிலங்கா ரூபாவின் பெறுமதியும் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 175ஆக பதிவாகியிருக்கிறது.
READ MORE | comments

சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் இராசரெத்தினம் தவராசா அவர்கள் கல்வி துறையில் 33 வருடங்களைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்றார்

Tuesday, October 30, 2018


பட்டிருப்பு கல்வி வலய சமூகவிஞ்ஞான பாடத்துறைக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் இராசரெத்தினம் தவராசா அவர்கள் கல்விச் துறையில் 33 வருடங்கள் சேவையை நிறைவு செய்து  இன்று  ஓய்வு பெறுகின்றார். 


களுவாஞ்சிகுடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்திலும் தரம் 6 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை பட்டிருப்பு மத்தியமாகா வித்தியாலயத்தியலும் கல்வி கற்றார். உயர்தரத்தில் கலைப்பிரிவில் கற்று சித்தியடைந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி கலைப்பட்டதாரியாக வெளியேறினார்.



பட்டப்படிப்பினை முடித்துக் கொண்டு வெளியேறிய இவர்  ரெட்பாணா, வீதி அபிவிருத்தி அதிகார சாபை போன்றவற்றில் சேவையாற்றி 1985 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தை பெற்று வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் மூன்று வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றி அதன் பின்னர்  தான் கற்ற பாடசாலையான பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு 1988 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று வந்து அப்பாடசாலையில் ஆசிரியராகவும், உப அதிபராகவும் பத்து வருடங்கள் கடமையாற்றினார். இக்கால கட்டத்தில் திறந்த பல்கலைக்கழததில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் பொற்றுக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் அவர் பாடரீதியாக கொண்டிருந்த பாண்டித்தீயம் காரணமாக 1998 ஆம் ஆண்டு பட்டிருப்பு கல்வி வலயத்தின் சமூகவிஞ்ஞான பாட துறைக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் க.பொ.த சாதாரண தரம், க.பொ.த. உயர்தரம் போன்ற பொதுப்பரீட்சைகளில் மாணவர்கள் சமூகவிஞ்ஞான துiறாசர்ந்த வரலாறு,புவியியல்,குடியுரிமைக்கல்வி ஆகிய பாடங்களில் கூடிய சித்தி வீதத்தினை பெறுவதற்கும் மாணவர்கள்  சமூகவிஞ்ஞான போட்டிகளில் தேசிய ரீதியில் சாதனை படைத்து கிழக்கு மாகாணத்தில் தொடர்சியாக பட்டிருப்பு வலயம் முதலாவது இடத்தனை பெறுமளவிற்கு இவரது சேவை இன்றியமையாதாக இருந்தது.
  
அது மாத்தரமின்றி இவர் ஆசிரிய ஆலோசகராக சேவையாற்றிய காலத்தில் அனைத்து தரங்களிற்கும் வரலாறு, புவியல் போன்ற பாடங்களுக்கான  மாணவர்களுக்கான வினாவிடைப் பயிற்சிபுத்தங்கள், தேசப்படப் பயிற்சிபுத்தகங்கள், மற்றும் ஆசிரியர்களுக்கான கற்பித்தலை இலகுபடுத்தும்  இலகுவழிகாட்டி புத்தகங்கள் என்பனவற்றை வெளியிட்டு ஆசிரியர்,மாணவர்களின் கற்றல் கற்பித்தல் விருத்திக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார். அன்னார் ஆசிரியர்; சேவையில் 13 வருடங்களையும் ஆசிரிய ஆலோசகர் சேவையில் 20 வருடங்களையும் மொத்தமாக கல்வி துறையில் 33 வருடங்களையும் பூர்த்தி செய்து இன்று ஓய்வுபொறுகின்றார்
READ MORE | comments

தேசிய கல்விக்கல்லூரியின் புதிய பீடாதிபதியாக கே .புண்ணியமூர்த்தி கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்

மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் முன்னால் பீடாதிபதி  எஸ் .இராஜேந்திரன் ஓய்வு பெற்று செல்லும் நிலையில் கல்விக்கல்லூரியின் நான்காவது பீடாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள  புதிய பீடாதிபதி கே .புண்ணியமூர்த்தியை வரவேற்கும்  நிகழ்வு மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெற்றது


ஓய்வுபெற்று செல்லும் முன்னால் பீடாதிபதி எஸ் .இராஜேந்தின தமது பீடாதிபதியின் பொறுப்புக்களை கையளித்ததுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார் .

இதனைதொடர்ந்து உபபீடாதிபதிகள் , விரிவுரையாளர்கள் புதிய பீடாதிபதிக்கு ,ஒய்வு பெற்று செல்லும் பீடாதிபதிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்









READ MORE | comments

மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகே மாணவியின் சடலம் மீட்பு


(க. விஜயரெத்தினம்)

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி சடலமாக மீட்பு.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் உயர்தர வர்த்தப்பிரிவில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி இன்று கல்லடி பாலத்தில் மிதந்தவாறு சடலமாக இன்று(30.10.2018) காலை 9.00மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள கித்துள் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா-தேவஜானி(வயது-18)என அடையாளம் காணப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து கல்லடி விவேகானந்தா பாடசாலையில் படித்து வந்துள்ளார்



.இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) தனது சொந்தவூரான கித்துள் கிராமத்திற்கு செல்வதாக வசித்துவரும் உறவினர் வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.


பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவல்களை வைத்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் மரணமானது தற்கொலையா அல்லது கொலையா என காத்தான்குடி பொலிசார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கல்லடி பாலம் அருகே மாணவியின் சடலம் மீட்பு

Rating: 4.5
Diposkan Oleh:
Sayanolipavan Ramakirushnan
READ MORE | comments

அடுத்து என்ன நடக்கும்? ரணிலால் என்னதான் முடியும்?

இலங்கை அரசியலில் அடுத்து என்ன என்கின்ற கேள்வி அனைவர் மனங்களிலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
ரனில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்... ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையை கொண்டுவந்து அவரை பதவியில் இருந்து அகற்றுவார்.. மக்கள் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவருவார்.. இப்படி பல நம்பிக்கை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் உலவந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், யதார்த்தத்தில் இவை எதுவுமே நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை என்றே களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரனிலின் கை ஜனநாயரீதியாக சற்று ஓங்கினால்கூட, அடுத்த கனமே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துவிடலாம்.
நொவெம்பர் 16ம் திகதிவரை தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை, அதற்கு முன்னரே கலைத்துவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
ஒரு வேளை நொவெம்பர் 16ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுகின்ற போது மிரட்டல்கள், பேரம்பேசல்கள் என்று நடைபெற்று ரனிலின் பக்கம் 150 அல்ல 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் சென்றாலும் கூட,ரனில் ஆட்சி அமைக்க ஜனாதிபதி இனி அனுமதிக்கப்போவதில்லை. ஜனாதிபதிக்கிருக்கு இருக்கின்ற அதி உச்ச அதிகாரத்தைப் பாவித்து ஒரு நொடியில் அவரால் ஆட்சியைக் கலைத்துவிட முடியும். முதலில் நடாளுமன்றத்தை ஒத்திவைக்கலாம். பின்னர் கலைக்கலாம்.
மீண்டும் தேர்தல் என்றுவருகின்ற பொழுது, தென் இலங்கை மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளவர் என்று உள்ளூராட்சி சபைத் தேரதல்கள் ஊடாக நிரூபிக்கப்பட்ட மகிந்தவே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டில் ஏறுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.
ஊடகப்பரப்பில் பேசப்படுவதுபோன்று ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையை ரனில் தரப்பு கொண்டுவருவதும் இலகுவான ஒரு காரியம் இல்லை.
ஜனாதிபதியை பதவி நீக்குவதாக இருந்தால்......
1 113 பேர் கையொப்பமிட்டு பிரேரணை சமர்பிக்கப்படும் சபாநாயகரிடம்
2) சபாநாயகர் அதை ஏற்றுக் கொண்டால்
3) மீண்டும் வாக்கெடுப்பில் 150 பேர் ஆமோதிக்க வேண்டும்
4) பின்னர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொடுக்கப்படும்
5) நீதிமன்றம் குற்றம் என கண்டால்
6) அதை சபாநாயகருக்கு அறிவிக்கும்
7) சபாநாயகர் மீண்டும் வாக்கெடுப்பிற்கு விட வேண்டும்
8) அதில் 150 பேர் எதிராக வாக்களித்தால் மாத்திரமே நம்பிக்கை இல்லாப் பிரேரனை நிறைவேறும்.
தற்பொழுது உள்ள சூம்நிலையில் இதற்கு சாத்தியம் மிக மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.
மக்களை நெருவில் இறக்கி ஏதாவது செய்ய முயற்சிப்பார்களா?
ரனில் ஒரு மக்கள் தலைவன் அல்ல. மேல்தட்டு வாழ்க்கை வாழும் ரனிலால் வீதிகளில் இறங்கி மக்களைத் திரட்டும் வல்லமை இல்லை.
ஜனாதிபதியிடம் இருக்கும் அளவற்ற அதிகாரம், பாதுகாப்பு கட்டமைப்புக்களைப்; பாவித்து இலகுவாகவே கிள்ளி எறிந்துவிடுவார்கள்.
வல்லரசு தேசங்களின் பலமான அழுத்தங்கள் அல்லது நேரடித் தலையீடுகள் ஏற்படாதபட்சத்தில், இந்த இழுபறியில் ரனிலால் வெற்றிபெறுவதென்பது கடிமானதாகவே இருக்கும்.
நன்றி - குமரன்
READ MORE | comments

விசேட செய்தி: அலைமோதிக்கொண்டிருக்கிறது கொழும்பு நகரம்! (நேரலை)

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் குரல் என்ற ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
கொள்ளுப்பிட்டி லிபேட்டிக் சுற்றுவடத்திலேயே இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பை மீறும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தமையை பிரதானமாகக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கியதேசியக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் ஆயிரக்கணகான ஐக்கியதேசியக் கட்சி ஆதரவாளர்கள் அணிதிரண்டுள்ளதுடன் இன்னும் சற்று நேரத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்விடத்தில் உரையாற்றவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கென விசேட வாகனம் ஒன்றும் ரணிலுக்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை குறுத்த ஆர்ப்பாட்டத்துக்கெதிராக கறுவாத்தோட்டை பொலிஸார் நீதிமன்றில் கொண்டுவந்த தடை உத்தரவை நீதவான் நிராகரித்திருந்ததுடன் ஆர்ப்பாட்டத்துக்கு நிபந்தனையுடனான அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE | comments

ஜனாதிபதி மைத்திரியைக் கடுமையாகச் சாடிய சமந்தா!

ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குழி தோண்டிப்புதைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் சாடியுள்ளார்.
பொறுப்புகூறல் தொடர்பான உறுதி மொழியை அவர் வழங்கியிருந்த போதிலும் தற்போது யுத்தக் குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு பதில் கூற வேண்டிய முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதனை இராஜதந்திர நடவடிக்கையின் தேவையை இது உணர்த்தியுள்ளதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா ஏற்கனவே இரத்தம் தோய்ந்த சம்பவங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை நாட்டை மேலும் பின்னோக்கி செல்ல வழிவகுக்கும் என சமந்தா பவர் கூறியுள்ளார்.
READ MORE | comments

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்புக்கு வருமாறு கட்சியின் தலைவரான இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இவர்களுக்கிடையே விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது. -(3)
READ MORE | comments

தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! - பேரம் பேசும் மகிந்த தரப்பு

கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவு ஒன்றில் அவர் இதனை வெளியிட்டுள்ளார். தமக்கு ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபாவினையும், அமைச்சுப் பதவியில் இருந்தவர்களுக்கு 300 மில்லியன் ரூபாவையும் வழங்குவதாக மஹிந்த ராஜபக்ச-மைத்திரிபால சிறிசேன தரப்பு பேரம் பேசி வருகின்றது என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

எவ்வேளையிலும் பாராளுமன்றம் கூட்டப்படலாம்


பாராளுமன்றத்தை கூட்டுமாறு 126 எம்.பிக்களின் கையொப்பங்களுடன் கூடிய கடிதமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்களே இவ்வாறாக கையொப்பமிட்டு கடிதத்தை கையளிக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இதன்படி ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருந்தாலும் பெரும்பான்மைய உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக சபாநாயகரினால் பாராளுமன்றத்தை கூட்ட முடியுமென்ற கருத்துக்கள் நிலவுகின்றன. -(3)
READ MORE | comments

அரசியல் கைதிகளைத் தேடிச் சென்ற நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று வெலிக்கடை மற்றும் மகசின் ஆகிய சிறைச்சாலைகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர்.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நேற்றைய தினம் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
READ MORE | comments

புதிய பிரதமரை சந்தித்தார் சம்பந்தன்


புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார்.

கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் சம்பந்தன் அவரை இன்று காலை சந்தித்துள்ளார். -(3)
READ MORE | comments

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை 29.10.2018 அன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டத்தில், சுமார் 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது அவர்கள் சம்பள உயர்வை கோரும் வகையான பல வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும், இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட மாணவர்கள் தாம் இப்போராட்டத்தை முன்னெடுத்ததற்கான நோக்கம் குறித்து கூறுகையில்,
எமது தாய், தந்தையர்கள் தோட்டத்தில் பணிபுரிந்து அவர்கள் பெரும் சம்பளத்தின் ஊடாகவே மேல் படிப்பினை நாம் கற்று வருகின்றோம். இந்த நிலையில் எமது தாய், தந்தையினர் சம்பள உயர்வாக ஆயிரம் ரூபாவை கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவும், எங்கள் கல்வியில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தோம்.1 2 6 7
READ MORE | comments

இலங்கைக்காண அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது


ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐ.தே. க இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இன்று நண்பகல் 12 மணியின் பின்னர் அமெரிக்க தூதரகமும் அமெரிக்க நிலையமும் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .(15)
READ MORE | comments

மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் வீட்டுக்குச் செல்வர்! - ஐதேக எச்சரிக்கை

மைத்திரி - மஹிந்த கூட்டிணைந்து அமைத்து வரும் சட்டவிரோத ஊழல் ஆட்சியை விட்டு , கூடிய விரைவில் வீடு திரும்ப வேண்டி நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டத்தை கையில் எடுத்து எவரும் சர்வாதிகாரிகளாக செயற்படுவீர்களானால் குறுகிய காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அமைக்கவிருக்கும் எவருடைய தலையீடுகளற்ற உறுதியான ஜனநாயக ஆட்சிக்கு பதிலளிக்கவும் இழப்பீட்டினை வழங்கவும் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
READ MORE | comments

உடனடியாக நாடாளுமன்றதை கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு அழுத்தம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்திற்குள்ளாகியுள்ளதாக எச்சரித்துள்ள ஐரோப்பா ஒன்றியம் உடனடியாக நாடாளுமன்றதை கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
ஐரோப்பா ஒன்றியத்தின் தூதுவர் உட்பட ஏனைய சர்வதேச பங்காளர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாட்டின் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து தீர்வு ஒன்றை உடனடியாக கண்டுபிடிப்பதற்கு அவசியமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் ஐரோப்பா ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மக்களின் நன்மை கருதி நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். அதற்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என ஐரோப்பா ஒன்றியம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

மட்/சிவாநந்த தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள்

Monday, October 29, 2018

இந்நிகழ்வானது மட்/சிவாநந்த தேசிய பாடசாலையின்  கல்லூரி அதிபர் திரு.த.யசோதரன் அவர்கள் தலைமையில் சுமாமி நடராஜா ஞாபகார்த்த ஒன்றுகூடல் மண்டபத்தில் 29.10.2018 திங்கட்கிழமை  பி.ப 12.10 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக ஸ்ரீமத் தக்ஜானந்தஜீ மகராஜ், பொது மேலாளர், இராமகிருஸ்ணமிஷன், மட்டக்களப்பு அவர்களும், பிரதம அதிதியாக திரு.ஆர்.ஜே.பிரபாகரன், உதவிக்கல்விப் பணிப்பாளர், (தமிழ்) வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு அவர்களும்,
விசேட கௌரவிப்பு திரு.சோ.குகன் விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்கப் பல்கலைக்கழகம், கௌரவ அதிதிகள் திரு.எஸ்.சரவணபவன் முகாமையாளர், மக்கள் வங்கி, மட்டக்களப்பு, திரு.கே.இராஜேந்திரா, முகாமையாளர் செலான் வங்கி, மட்டக்களப்பு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது வரவேற்பு நடனம் மற்றும் பாடல்கள், அதிதிகளின் உரைகள், பல்வேறுவகையான போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரீசில்களும் வழங்கப்பட்டன.








READ MORE | comments

க.பொ.த. (சா.த.) பரீட்சை நேர அட்டவணை - 2018 பதிவிறக்கம்

க.பொ.த. (சா.த.) பரீட்சை நேர அட்டவணை - 2018  பதிவிறக்கம்



G.C.E O/L Time Table - 2018  Click Here




READ MORE | comments

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நூலகர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலக ஆளனியினருக்கான முழாய பயிற்சிக் கருத்தரங்கானது இன்று (29.10.2018) மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் நூலகக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக்கருத்தரங்கினை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உள்ளூராட்சி ஆணையாளர் சி.பிரகாஸ், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்செயன், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் சியாஹுல் ஹக், மாநகர நூலகக் குழுவின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான வே.தவராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர். 

இக் கருத்தரங்கின் விரிவுரைகளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட நூலகரும், இலத்திரனியல் நூலகத் திட்டத்தின் வளவாளருமான எம்.என்.ரவிக்குமார் நடாத்தினார்.

தற்காலத் தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நூலகங்களிடையே நூலக மென்பொருள் பாவனையை நிறுவுவதோடு, அவற்றை இலத்திரணியல் நூலகங்களாக வடிவமைத்து வாசகர்களின் நூலகப் பயன்பாட்டினையும், வாசிப்பு பழக்கத்தினையும் அதிகரிக்கும் நோக்கோடு இந்த பயிறசிக் கருத்தரங்கு அமைந்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் நூலகங்களில் பணியாற்றும் 50 இற்கும் அதிகமான நூலகர்கள் இந்தப் பயிற்சிக் கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தனர்.






READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |