கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Sunday, December 31, 2023

 


இதன்படி, 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர கேட்டுக்கொள்கின்றார்.

பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கு பரீட்சை நுழைவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் விடுத்த செய்தி

Friday, December 29, 2023

29-12-2023.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சை ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயர் தரப்பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகள் என்பனவற்றை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.


🌐💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திடுங்கள்📱* 

 *https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA* 

*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*


*🌐குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்து எம்மை தொடர்பு கொள்ளவும்.*


*https://wa.me/+94773418460*


*https://wa.me/+94760346948*

READ MORE | comments

செய்திகள் அனுப்புவது தொடர்பான அறிவித்தல்

 


சில நேரம் வீடுகள் , தாழ்நிலங்கள் , வெள்ளத்தில் மூழ்கிய நிலை காணப்படும் அது தொடர்பான வீடியோக்களை 02 நிமிடம் வரை அனுப்பி வையுங்கள்.

உங்கள் பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளநிலைமை , அதிகரித்த மழைவீழ்ச்சி , அனர்த்தங்கள் , வீதிவிபத்துக்களை Lansquare வடிவில் வீடியோ எடுத்து எனக்கு அவசரமாக அனுப்பி வையுங்கள்.

கையடக்க தொலைபேசியில் காணொளிகளை பதிவு செய்யும்போது  தொலைபேசியை கிடையாக (Landscape) வைத்துப் பதிவு செய்யவும்

Puvilosan26@gmail.com


READ MORE | comments

பிரதேச மட்ட திருமண நல்லிணக்க சபை அமைத்தல் மற்றும் சேவை வழங்குனர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு பாறுக் ஷிஹான்

 



பிரதேச மட்ட திருமண நல்லிணக்க சபை அமைத்தலும் சேவை வழங்குனர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வும் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வினை மனித எழுச்சி அமைப்பும் (HEO)  அம்பாறை மாவட்ட செயலகமும் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன.

இதன் போது  நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் நெறிப்படுத்தலில்  கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சிரேஸ்ட சட்டத்தரணியும் கல்முனை காதி நீதிபதியுமான எம்.டபிள்யு.ஆர்.ஏ.எப். இன் சட்ட ஆலோசகருமான எப்.எம்.ஏ அன்சார் மௌலானா, நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் இணைப்பாளரும் (PARL) மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குநருமான கே. நிஹால் அஹமட் ,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல், கலந்துகொண்டனர்.

மேலும் குடும்ப வாழ்வில் பாதிப்புற்று நலிவுறும் பெண்கள் குழந்தைகளைப் பாதுகாத்தலுக்கும்,  காதி நீதிமன்றங்களின்  கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கான சமூகத்தின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் திட்டம் குறித்து இங்கு வளவாளராக கலந்து கொண்ட  அஷ்ஷெய்க் கலாநிதி றவூப் ஸெய்ன் குறிப்பிட்டார்.

இது தவிர  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய கடந்த 14.12.2023 அன்று மாவட்ட ரீதியாக ஒன்று கூடலில் எடுக்கப்பட்ட பிரதேச ரீதியான சபை அமைத்தலும் பிரதேச மட்டத்தில் சேவை வழங்குனர்களாக உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வினை தொடர்ச்சியாக நடாத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் காதி நீதிமன்றங்கள் அமைந்துள்ள 8 பிரதேசங்களிலும் மேற்குறித்த நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட  நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் இணைப்பாளரும் (PARL), மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குநருமான கே. நிஹால் அஹமட் தற்போது அமைக்கப்படவுள்ள பிரதேச மட்ட சபைக்கு பிரதேச செயலாளர் தலைவராகவும் மற்றும் காதி நீதிபதி ஆலோசகராகவும் இருந்து தலைமைத்துவத்தை வழங்குவதுடன் பொருத்தமானவர்கள் இச்சபைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். மேலும் இச்சபையினூடாக பிரதேசத்தில்  தீர்க்க முடியுமான குடும்ப பிரச்சினைகளைத் தீர்த்து விட்டு அதன் பிறகு தீர்க்க முடியாத பிரச்சினைகளை காதிநீதிமன்றத்திற்கு எடுத்து செல்லல், காதி நீதிபதிகளுக்கு நிருவாக ஆளணியைக் கூட்டி கட்டமைப்பை வலுப்படுத்த பிரதேச செயலகங்களில் உள்ள பொருத்தமான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை காதி நீதிமன்றத்தில் அலுவலகக்கட்டமைப்பை ஏற்படுத்தி காதி நீதிபதிகளுடைய செயற்பாடுகளை இலகுபடுத்தி கொடுத்தல்  தொடர்பில் ஆராய்தல் ஊடாக எதிர்காலத்தில் சமூகம் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ளும் என தனதுரையில் குறிப்பிட்டார்.
 
குறித்த செயலமர்வில் பிரதேச திருமண பதிவாளர்கள், உலமாக்கள், பெண்கள் சிறுவர்கள் சார்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் ,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

READ MORE | comments

மௌலவிக்கும் தனக்கும் என்ன தொடர்பு- 3 பிள்ளைக்கு தாயான பெண் வாக்குமூலம்

Wednesday, December 20, 2023

 


சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம்


ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்-மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை

நேர்காணல்-ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து  புனித இஸ்லாம் மதத்தை தழுவி 3 பிள்ளைக்கு தாயான பெண் தனது பிள்ளைகளின் மத்ரஸா கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறுகின்றார்.

இந்நிலையில் மௌலவியை சந்தித்து அப்பெண் உதவி கோருகின்றார்.இந்நிலையில் மௌலவி அப்பெண்ணிற்கு குறித்த மத்ரஸாவில் மாணவர்களை கண்கானிப்பதற்கான பதவி ஒன்றிறை வழங்கியதாக தனது வாக்குமூலத்தில் அப்பெண் உறுதிப்படுத்துகின்றார்.

இந் நிலையில் சம்­பவ தின­த்­த­ன்று  என்ன நடந்­தது என அம் மத்­ர­சாவில்   கட­மை­யாற்­றிய கண்காணிப்பாளரான  பெண்மணி 9வயது-34) என்பவரை  சந்­தித்து உரை­யா­டினேன். அவ­ரது வாக்கு­­மூ­லத்தை அவ்­வாறே தரு­கி­ன்றேன்.

நான் அன்றைய தினம் இரண்டரை மணிக்கு மத்ரசாவினுள் நுழைந்­த போது மரணித்த மாணவனான முஸ்­அப்பை கண்டேன். சாப்பிட்டுவிட்டு  வந்து கொண்­டி­ருந்­­தார்

பின்னர் நான்க­ரை மணியளவில் மத்­­ர­சா­வி­லி­ருந்து வீட்­டுக்கு வந்து மீண்டும் 6.30 மணி­ய­ளவில் மத்ரசாவுக்கு சென்றேன். அப்போது இந்த சம்பவம் நடந்­து முடிந்திருக்க வேண்டும்.  

நான் மேல் மாடிக்குச் சென்று எனது பேஸ் கவரை கழற்றி விட்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்ற போது மேல் மாடியில் இருக்கின்ற பிள்ளைகள் மஹ்ரிப் தொழுவதை அவதானித்தேன். அந்த நேரம் கீழ் தளத்திலே இருந்த மாணவர்கள் தொழவில்லை. அப்போதுதான் மத்ரசா அதிபரான சானாஸ் மௌலவி  ‘ஒரு ஆள அடித்து வளர்த்தாட்டி வச்சிருக்கன்’ என்றார். எனக்கு மட்டுமல்ல அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் அவர் கூறிய இந்த வார்த்தை தெளி­வாக கேட்­ட­து.

அப்போது நான்  ‘யார வளத்தாட்டி வச்சிருக்கிறீங்க’ என கேட்டேன். அதற்கு அவர்  யாரை அடித்­துள்ளேன் என்று பெயர் குறிப்பிடவில்லை.பின்னர் நான் ஓடி வந்து மதரசாவின் சி.சி.ரி.வி கமராவைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரம் ஒரு மாணவன் ஓடி வந்தான். அதன் பின்னர் இன்னும் சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். பிறகு ஏனைய மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். என்ன சுனாமியா வந்­து­விட்­டது? ஏன் மாணவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள் என்று எனக்­குள் நினைத்துக் கொண்­டேன்.

அதன் பிறகு மற்­றொரு மாண­வர் ஓடி வந்து சி.சி.ரி.வி கமராவின் சுவிட்சை ஓப் பண்ணினார். பின்னர் கமராவில் எதுவும் தெரியவில்லை.

அதற்கு பிறகு மௌலவி தொலைபேசியில் ஏதோ பேசினார். பின்னர் மூன்று பேர் வந்தார்கள். சி.சி.ரி.வி.கமராவின் வயர்களை கழற்றினார்கள். நான் அத்தோடு அங்கு ஓரி­டத்தில் அமர்ந்­துவிட்டேன். கேர்ட்டின் சீலையை இழுத்து மறைத்துவிட்டார்கள். பின்னர் பிள்­ளை­க­ளி­டம் பாடத்தை கேளுங்கள் என்று கூறிவிட்டு மௌலவி அங்­கி­ருந்து சென்றுவிட்­டார்.

ஏதோ ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் மர­ணித்த மாணவன் யார் என்று விசாரித்தேன்.  அப்போதுதான் முஸ்அப் என்று சொன்னார்கள். கண் கலங்கி பீதியடைந்தேன். அதிர்ச்­சியில் உறைந்து போனேன். நான் பகல் தானே முஸ்அப்பை கண்டேன் என்று கூறி அழுதேன்’’ என்­றார்.

இச் சம்­பவம் தற்­கொ­லைதான் என கதை பரப்பி குறித்த மெள­லவி தப்­பிக்க முனைந்த போதிலும் இதனைக் கொலை என நிரூ­பிப்­ப­தற்குத் தேவை­யான ஆதா­ரங்­களும் சாட்­சியங்­­களும் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் பொலிசார் தெரி­விக்­கின்­ற­னர்.

முஸ்லிம் சமூ­கத்தை பேர­திர்ச்­சிக்­குள்­ளாக்­கிய இச் சம்­பவம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட மெள­லவி கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் இச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை அம்­பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் வழி­காட்­டலில் சாய்ந்­த­ம­ரு­­து பொலி­சார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.
READ MORE | comments

லிட்ரோ சமையல் எரிவாயு அதிரிக்கும்.. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூட அரசு தயார்

Thursday, December 14, 2023


 எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2024 முதல், எரிவாயு மீது 18% VAT சேர்த்து விலை குறைக்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

வரி அதிகரிப்புடன் தயக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது ரூ.3565 ஆக இருக்கும் 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 18% அதாவது ரூ.640 ஆக உயரும்.

இந்நிலையில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

எண்ணாயிரம் மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் மற்றும் சுமார் எண்பது இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம் மூலம் நிறுவனம் நான்கரை பில்லியன் இலாபம் ஈட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம், அரசுத் துறையின் மதிப்புமிக்க நிறுவனங்களை மூடி, தனியார் வர்த்தகர்களுக்கு வழங்க, அனைத்து திட்டங்களையும் அரசு தயார் செய்துள்ளது, என்றார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

READ MORE | comments

தொலைபேசி விலைகள் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் சாத்தியம்

 


பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி அல்லது VAT நிறைவேற்றப்பட்டதன் மூலம், ஜனவரி மாதம் முதல் தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் தொலைபேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18% வரி சேர்க்கப்படும் போது, ​​அதற்கேற்ப தொலைபேசிகளின் விலையும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொவிட் காலம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக தொலைபேசிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் விலை மேலும் அதிகரிக்கலாம் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


READ MORE | comments

பாடசாலை சீருடை அணிந்து நீலப்படம் தயாரித்த பட்டதாரி தம்பதி கைது

 


பாடசாலை மாணவிகள் போல் வேடமணிந்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு திருமண விழாவும் நடைபெற உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் பட்டதாரிகள் என்பது விசேடமாகும்.

பணம் சம்பாதிப்பதற்காக ஆபாச வீடியோக்களை தயாரித்து இணையத்தில் வெளியிட்டதாக அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​ஆபாச வீடியோக்களை தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கணினி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதற்காக பயன்படுத்திய பாடசாலை சீருடைகள், டைகள் மற்றும் பிற பொருட்களையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வியாபாரத்தினை சில காலமாக மேற்கொண்டு வரும் சந்தேகநபரால் முன்னெடுக்கப்படும் இணைய கணக்கில் சுமார் 4,400 பயனாளர்கள் இருப்பதாகவும், அவர்களின் வீடியோக்கள் சுமார் 8.7 மில்லியன் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆண் சந்தேக நபர் பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தம்பதியொருவர் ஆபாசமான காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்ததாக கடுகன்னாவ பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமிந்த குணரத்ன அவர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

உயர்தரம் கற்கவிருக்கின்ற மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் கருத்தரங்கு



 கடந்த  நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தியடைந்த க.பொ.த (உ/தர) கற்கவிருக்கின்ற மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் கருத்தரங்கு புதன்கிழமை(13) அன்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அஷ்ரப் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. குறித்த பாடசாலையின் அதிபர் ஐ.உபைதுல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவின் டீகன் பல்கலைக்கழகத்தின் கட்டுமான முகாமைத்துவம் விஞ்ஞான,பொறியியல் ,கட்டுமான துறையின் பேராசிரியர் இம்றியாஸ் கமர்த்தீன் அவர்கள் கலந்துகொண்டு விரிவுரையாற்றினார். இம்ரியாஸ் கமர்தீன் டீகன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் பில்ட் சுற்றுச்சூழலின் பள்ளியில் கட்டுமான நிர்வாகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவராக உள்ளார்


மருதமுனையை சேர்ந்த இவர் கல்வி மற்றும் தொழில்துறையில் விரிவான அனுபவங்களைக் கொண்ட ஒரு ஆற்றல்மிக்க கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார், மேலும் முன்னணி கல்வித் திட்டங்கள், ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் குழுக்களில் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் மென்மையான திறன்கள். ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் சிறப்பிற்காக எட்டு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் குறித்த வருகையின்போது க.பொ.த உயர்தர முதலாமாண்டு பொறியியல்துறை மாணவனான அப்துல் ரஹீம் முகம்மட் அக்மல் என்பவரால் கண்டுபிடித்து விரைவில் வெளியிட இருக்கும் ராடர் கருவியையும் பார்வையிட்டு அதற்கான வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கியதோடு பாடசாலையின் விஞ்ஞான பொறியல் பகுதியையும் சென்று பார்வையிட்டார். குறித்த நிகழ்வில் மருதமுனையின் அனைத்துப் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபா?

Friday, December 8, 2023

 


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அது குறித்த எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவை நியமிக்கவும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்னுமொரு குழுவை நியமிக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தமக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புடன் உணவுத் தேவையும் அதிகரிக்கும் எனவும், அதற்காக இந்நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

READ MORE | comments

லஞ்ச் ஷீட் இற்கான தடை இன்னும் 06 மாதங்களில்


 இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி செயன்முறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த (05) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் கூடியது.

சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை சுங்கம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று இதற்காக அழைக்கப்பட்டது.

இலங்கையில் லஞ்ச் ஷீட் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள் குறித்தும், புற்றுநோயை உண்டாக்கும் பித்தலேட்ஸ் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்படி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மதிய உணவு தாள்களை பயன்படுத்துவதை தடை செய்ய 06 மாதங்கள் அவகாசம் வழங்கி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழு மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.

உலகில் எந்த நாட்டிலும் லஞ்ச் சீட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள், லஞ்ச் சீட்களை பயன்படுத்தாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை குழுவிடம் சுட்டிக்காட்டினர்.

சுற்றாடல் சட்ட திருத்தத்திற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தக் குழு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு பல விஷேட விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் சேகரிக்கும் பொறுப்பை, அவற்றை உற்பத்தி செய்து விநியோகம் செய்பவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, சட்டத்தில் திருத்தம் செய்து, பல்வேறு நுகர்வுத் தேவைகளுக்காக விநியோகிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மீண்டும் சேகரிக்கப்பட்டு, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி QR குறியீடுகளைப் பயன்படுத்தி மறுசுழற்சி செயல்முறையில் சேர்க்கப்படுகிறதா என்பதைக் கண்டறியும் அமைப்பு தயாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுசுழற்சி செய்வதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதை மிகவும் திறமையானதாக்க, காலி பாட்டில்களுக்கு கணிசமான அளவு வழங்கப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்து, அவற்றைப் பட்டியலிட்டு குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச மேற்பார்வைக் குழுவின் தலைவர் தற்போதைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

READ MORE | comments

மதுபான நிலையங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம்

 


மதுபான நிலையங்கள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரங்களில் நாளை (09) முதல் அமுலுக்கு வரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 32, உப பிரிவு 1 (இது 52 ஆவது அதிகார சபை) கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்கும் நேரம் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதுபான கடைகள் (FL4) - காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை

FL7 மற்றும் FL8 மதுபான உரிமங்களைக் கொண்ட சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் (3 நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்கள்) - காலை 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை

மற்ற அனைத்து ஹோட்டல்களும் - காலை 10 மணி முதல் காலை 12 மணி வரை - நிதி அமைச்சகம்.

READ MORE | comments

கதிர்காமம் ‘கபுவா’ வை கைது செய்ய உத்தரவு

 


ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் தலைவர் ‘கபுவா’ மற்றும் விகாரையின் திறைசேரிக்கு பொறுப்பான ‘கபுவா’ ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குழந்தையின் நேர்த்திக்கடனுக்கான பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி ருஹுனு கதிர்காமம் மஹா தேவாலயத்திற்கு வழங்கிய 38 பவுண்கள் எடை கொண்ட தங்க வட்டு காணாமல் போனமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கதிர்காம மகா தேவாலய கபுவா துரந்தர சோமிபால ரத்நாயக்க மற்றும் தேவாலய திறைசேரிக்கு பொறுப்பான கபுவா துரந்தர பிரதானி கபுராலாவின் பேரன் சமன் பிரியந்த அல்லது சுட்டி கபு மஹதயா ஆகியோருக்கு இந்த கைது உத்தரவு கிடைத்துள்ளது.

இந்த தங்க நெக்லஸ் காணாமல் போனமை தொடர்பில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ருஹுணு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் விக்ரமரத்ன குணசேகரவினால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் விசாரணைக்கு அதனை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கையளித்தார்.

இதன்படி, அதன் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவின் கீழ், பிரிவு இலக்கம் 1 நிலைய கட்டளைத் தளபதி இன்ஸ்பெக்டர் டி.ஜே. நிஷாந்த தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்ற B 73047/2021 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளது.

அதன்படி, சட்டமா அதிபரின் பணிப்புரை நேற்று (07) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்துள்ளது.

READ MORE | comments

தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிப்பு?

Thursday, December 7, 2023

 


அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையின் ஊடாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

READ MORE | comments

போதகர் ஜெரோமின் தடுப்புக் காவலில் 33 கைப்பேசிகள் – 35 சிம் கார்டுகள் கண்டெடுப்பு

Wednesday, December 6, 2023


 போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ வார்டு மற்றும் ‘எச்’ வார்டு ஆகிய இடங்களில் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 33 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 35 சிம் அட்டைகளை கண்டுபிடித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, அண்மையில் (01) முதல் மெகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் (02) இரவு இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சிம்கார்டுகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக உரிய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

READ MORE | comments

பாடசாலை விடுமுறைகள் குறித்து விசேட அறிவிப்பு! ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் கருத்து

Tuesday, December 5, 2023

 


அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இம்மாதம் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதன் பின்னர் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் புதிய ஆண்டுக்கான பாடசாலை தவணை பெப்ரவரி 19ஆம் திகதி முதல் தொடரும் என கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த கண்ணமுத்து நாகலிங்கம் அவர்கள் காலமானார்.

 


மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த கண்ணமுத்து நாகலிங்கம் அவர்கள் காலமானார்.

மேலும் அமர் (04-11-2023) இறைவனடி சேர்ந்தார், இறுதி தகனக் கிரியைகள் கள்ளியன்காடு இந்து மயானத்தில்   இன்று(05-11-2023) பி.ப 3.00 நடைபெறும்.
குடும்பத்தினர். ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

READ MORE | comments

பாடசாலை தரங்களை 12 ஆகக் குறைக்க முன்மொழிவு

 


பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது. சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 7 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் வடிவேல் தட்சணைமூர்த்தி அவர்கள் 02.12.2023 அன்று காலமானார்.

Sunday, December 3, 2023


மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் வடிவேல் தட்சணைமூர்த்தி அவர்கள் 02.12.2023 அன்று காலமானார். 
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் திருமதி தவராசா கிருபையம்மா 02.12.2023 அன்று காலமானார்.

 


மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் திருமதி தவராசா கிருபையம்மா 02.12.2023 அன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்

READ MORE | comments

2024 உலகக்கிண்ண தொடரில் தகுதி பெற்ற உகண்டா

Thursday, November 30, 2023


 2024 டி20 உலகக்கிண்ண தொடருக்கு உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. உகண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளமை சிறப்பம்சமாகும்.

2024 டி20 உலகக்கிண்ண மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க தகுது பெற்றுள்ள 20 அணிகளின் பட்டியல் :

மேற்கிந்திய தீவுகள்
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
இந்தியா
நெதர்லாந்து
நியூசிலாந்து
பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்கா
இலங்கை
ஆப்கானிஸ்தான்
வங்கதேசம்
அயர்லாந்து
ஸ்காட்லாந்து
பப்புவா நியூ கினியா
கனடா
நேபாளம்
ஓமன்
நமீபியா
உகண்டா.

READ MORE | comments

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலான அறிவிப்பு

 


அச்சடிக்கும் இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் குவிந்து கிடக்கும் சுமார் 9 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான மூன்று அச்சு இயந்திரங்கள் கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் 6 மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பணம் பெற்றுக்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் மோசடி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |