Advertisement

Responsive Advertisement

உயர்தரம் கற்கவிருக்கின்ற மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் கருத்தரங்கு



 கடந்த  நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தியடைந்த க.பொ.த (உ/தர) கற்கவிருக்கின்ற மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் கருத்தரங்கு புதன்கிழமை(13) அன்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அஷ்ரப் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. குறித்த பாடசாலையின் அதிபர் ஐ.உபைதுல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவின் டீகன் பல்கலைக்கழகத்தின் கட்டுமான முகாமைத்துவம் விஞ்ஞான,பொறியியல் ,கட்டுமான துறையின் பேராசிரியர் இம்றியாஸ் கமர்த்தீன் அவர்கள் கலந்துகொண்டு விரிவுரையாற்றினார். இம்ரியாஸ் கமர்தீன் டீகன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் பில்ட் சுற்றுச்சூழலின் பள்ளியில் கட்டுமான நிர்வாகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவராக உள்ளார்


மருதமுனையை சேர்ந்த இவர் கல்வி மற்றும் தொழில்துறையில் விரிவான அனுபவங்களைக் கொண்ட ஒரு ஆற்றல்மிக்க கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார், மேலும் முன்னணி கல்வித் திட்டங்கள், ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் குழுக்களில் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் மென்மையான திறன்கள். ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் சிறப்பிற்காக எட்டு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் குறித்த வருகையின்போது க.பொ.த உயர்தர முதலாமாண்டு பொறியியல்துறை மாணவனான அப்துல் ரஹீம் முகம்மட் அக்மல் என்பவரால் கண்டுபிடித்து விரைவில் வெளியிட இருக்கும் ராடர் கருவியையும் பார்வையிட்டு அதற்கான வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கியதோடு பாடசாலையின் விஞ்ஞான பொறியல் பகுதியையும் சென்று பார்வையிட்டார். குறித்த நிகழ்வில் மருதமுனையின் அனைத்துப் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments