Advertisement

Responsive Advertisement

அலரி விதை உட்கொண்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்

நேற்றிரவு 7.30 மணியளவில் அலரி விதை உட்கொண்ட பிரஸ்தாப பெண் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவரது கணவனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணுக்கு அவசர தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் மரணமடைந்துள்ளார்.சரசாலை தெற்கு சாவகச்சேரியை சேர்ந்த சசிதரன் பகிரதி (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே மரணமடைந்தவராவார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த பெண் அலரி விதையை உட்கொண்டு மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments