வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வந்த அணுவாயுத சோதனைகளால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே இந்த ஏவுகணைச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வடகொரியாவால் இன்று மேற்கொள்ளப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ளது. மேற்குறித்த தகவலை தென்கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
பையென்கொன் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணை, சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியதாகவும் அது வடகொரியாவின் எல்லையைக் கூட தாண்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகணை எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
வடகொரியாவால் கடந்த மார்ச் மாதம் முதல் மேற்கொண்ட ஏவுகணை சோதனை நடவடிக்கைகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையுடன் சேர்த்து மொத்தமாக நான்கு ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments