Thursday, June 30, 2022
கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமானங்கள் திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரப்பி வருவதனால் விமானங்களில் ஏற்றப்படும் சரக்குகளின் அளவு குறைவடைகின்றன. அத்துடன் இடையில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வேறு நாடுளில் விமானங்களை தரையிறக்க வேண்டியுள்ளமையினால் செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்த விமானங்களின் சரக்கு மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், செலவுகளை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது எனவும் விமான சேவைகள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பெரிய விமானம் அதிக எரிபொருளை சேமித்து வைத்து பறக்கும் என்பதனால் எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற இலங்கைக்கு அடிக்கடி செல்லும் விமானங்கள் எரிபொருளுடன் திரும்பும் என எதிர்பார்க்கலாம்.
எனினும் தற்போது தமது பயணங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் இலங்கைக்கு 42 விமான சேவைகள் வருகின்ற நிலையில், நீண்ட தூர பயணங்களின் போது திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரப்பி செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
சராசரியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏறக்குறைய 8 மில்லியன் லீட்டர் விமான எரிபொருளை சேமித்து வைக்க முடியும், ஆனால் தற்போதைய வெளிநாட்டு இருப்பு நெருக்கடி காரணமாக விமான எரிபொருள் இருப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் விநியோகத்தை தனி நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
LIOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளிடம் இருந்தும் எரிபொருளை பெற்று கொள்ளவது பற்றிய பேச்சு வார்த்தைகளும், உலக நாடுகளுக்கான பயனங்களும் அதிகரித்துள்ளன.
இருந்தும் எவரிடம் இருந்தும் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் ரஷ்ய அரச தலைவர் புடினுடன் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு எரிபொருள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சரி செய்ய யூலை 10 ம் திகதி வரை எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் என்றவாறு விநியோக சேவை மட்டுப்படுத்தபட்டாலும் கூட தற்சமயம் அரசின் அத்தியவசிய சேவைகளுக்கே வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு வார காலத்திற்கு மாத்திரம் பயன்பாடும் அளவே எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அதற்குள் எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் 15 மணித்தியாலங்களாக மின்துண்டிப்பு அதிகரிக்கும் என மின்சார சபை எச்சரித்துள்ளது.
சகல அத்தியவசிய சேவைகளும் முடங்குவதை தவிக்கும் முகமாக அரசு பல வழிகளில் எரிபொருள் பெறுவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இலங்கையில் இருப்பதாக அகழ்வாராச்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போதய நெருக்கடி நிலைமையை தற்காலிகமாக சமாளிக்கும் பொருட்டு லங்கா IOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்தாகவும் அதற்கான பணப்பரிமாற்றமும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமகால எ
பொலன்னறுவை - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு தடுப்பு முகாமில் இருந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் முகாமுக்குள் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றியிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கைதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இன்று காலை சுமார் 500-600 கைதிகள் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
பாடசாலைகளை நடத்துவதில் சிக்கல்
01. ”மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாடசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல்.
02. வருகைதர முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல்.
03. அதிபர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை.
04. சீரற்ற எரிபொருள் விநியோகம்.
05. இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு.
06. எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல்.
இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும்வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை.
ஒரு சில பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.
இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும்” இவ்வாறு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பாடசாலைகளை நடத்துவது தொடர்பான விசேட அமைச்சரவை தீர்மானங்களை இன்று அறிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் மற்ற பகுதிகளிலும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் அறிவித்துள்ளார்.
இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு எரிபொருள் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, துறைமுகம் சுகாதார பிரிவு, விவசாயம் போன்ற அச்சியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை நகர்புற பாடசாலைகள் இயங்காது. ஏனைய அனைத்து சேவைகளும் இயங்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் இடைநிறுத்தி வைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்க எச்சரித்தது போன்று பல்வேறு நெருக்கடியில் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது இலங்கை. எரிபொருள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த நெருக்கடி நிலைமை நாளடைவில் மிக மோசமானதாக உருவாகி மீள முடியாத நிலையை எட்டிவிட்டது என உலக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலியாக நாளுக்கு நாள் மின்வெட்டு நேரம் உயர்வடைவதுடன், பொருட்களின் விலையும் வானளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எரிவாயுவும், எரிபொருட்களும் இன்றி மக்கள் நடுத் தெருவிற்கு வந்து நின்றும், கிடைக்காமல் கடும் விரக்தியில் இருக்கிறார்கள்.
நாட்கணக்கில் மக்கள் வரிசைகளில் நின்றும் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு கையிருப்பு அற்ற தன்மையும் கறுப்புசந்தையின் ஆதிக்கமும் செல்வாக்கு செலுத்து வருகின்றன.
பாரிய அளவு மோசடி இடம் பெறும் கறுப்புசந்தையை பல்வேறு கட்ட முயற்சிகளினால் அரசு கட்டுபடுத்தி வருகின்றமை ஆங்காங்கே நடைபெறுகின்ற கைது நடவடிக்கைகள் மூலமாக காண முடிகிறது.
எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அரசாங்கம் எரிபொருள் விநியோகத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் கூட எரிபொருளுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது அரசின் இயலாமை என சுட்டிக் காட்டத்தக்கது.
பல்வேறு நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அரச இயந்திரம் முனைப்புக்காட்டி வந்தாலும், பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வு இல்லை என்கின்றன எதிர்கட்சிகள்.
இதுவொருபுறமிருக்க, இன்றைய எரிபொருள் இருப்பானது, 9000 மெற்றிக் தொன் டீசல் , 6000 மெற்றிக் தொன் பெட்ரோலுமே கையிருப்பில் உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடிகளையும் அதனால் உண்டாகப்போகும் விளைவுகளையும் முற்கூட்டியே சரி செய்வதற்காய் சர்வதேசங்கள் நோக்கி இலங்கையின் முக்கியஸ்தர்கள் பயனப்படுகின்றார்கள்
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேச்சுவார்த்தை
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று திங்கட்கிழமை கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர 2 இலங்கைப் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே, இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவராக இருந்த கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ரஷ்யா செல்லவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு அறிவிறுத்தியதுடன், காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தில் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் அக்கறை காட்டவில்லை என்பதுடன், இருவேறு நிலைப்பாட்டிலும் இருந்தது.
ஆனாலும், நெருக்கடி நிலை நீடிக்க, அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டது, அதனையடுத்து இலங்கையின் பொருளாதாரம் படுகுழிக்குள் வீழ்ந்ததையடுத்து மேலும் மக்களின் அன்றாட தேவைகளுக்கும், அத்தியவசிய பொருட்களின் கொள்வனவிற்கும் பெரும் சிக்கல் நிலை உருவாக, மக்கள் கிளர்ந்து எழுந்தனர்.
இதற்கிடையில், அன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தை எச்சரித்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எனினும், அவர் ஆட்சியேற்றும் கூட வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மட்டுமல்ல உடனடித் தேவைகளை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி, அரசின் பிரச்சினைகளை அறிவிக்கும் அறிவிப்பாளராக மாத்திரமே ரணில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், பொருளாதாரத்தை தீர்த்து வைக்கும் சிறந்த திட்டம் அவரிடமும் இல்லை என்கிறது எதிர்கட்சி.
மக்கள் தற்போது வரிசை யுகத்திற்கு முடிவு கட்டுமாறே வலியுறுத்தி கேட்கிறார்கள். ஆனால், அவற்றை சீர் செய்ய முடியாமல் அரசாங்கம் திணறுகின்றது என்பதை காண முடிகிறது.
இந்த நிலையிலேயே தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் சிக்கல்களை தீர்க்க அமைச்சர்கள் வெளிநாடு பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் இந்தப் பயணம் வெற்றியளிக்குமா? எரிபொருள் வரிசைக்கு முடிவு கட்டுவார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்