Advertisement

Responsive Advertisement

இது லொக் டவுன் அல்ல, ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் – ஹரின்

 


ஜூலை 10 வரை முடிந்தளவு வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.நேற்று நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இதை ஒரு பொது முடக்க சூழ்நிலையாகக் கருத வேண்டாம், எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு இது ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறையாகும், அதன் பிறகு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

கடைகள், மருந்தகங்கள் பல்பொருள் அங்காடிகள் போன்றவை. சாதாரண நாட்கள் போல் செயல்பட வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments