7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல்
LIOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளிடம் இருந்தும் எரிபொருளை பெற்று கொள்ளவது பற்றிய பேச்சு வார்த்தைகளும், உலக நாடுகளுக்கான பயனங்களும் அதிகரித்துள்ளன.
இருந்தும் எவரிடம் இருந்தும் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் ரஷ்ய அரச தலைவர் புடினுடன் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு எரிபொருள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
10ம் திகதி வரை எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள்
இந்நிலையில், ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சரி செய்ய யூலை 10 ம் திகதி வரை எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் என்றவாறு விநியோக சேவை மட்டுப்படுத்தபட்டாலும் கூட தற்சமயம் அரசின் அத்தியவசிய சேவைகளுக்கே வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு வார காலத்திற்கு மாத்திரம் பயன்பாடும் அளவே எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அதற்குள் எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் 15 மணித்தியாலங்களாக மின்துண்டிப்பு அதிகரிக்கும் என மின்சார சபை எச்சரித்துள்ளது.
எரிபொருள் பெறுவதற்கான வேலைத்திட்டம்
சகல அத்தியவசிய சேவைகளும் முடங்குவதை தவிக்கும் முகமாக அரசு பல வழிகளில் எரிபொருள் பெறுவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இலங்கையில் இருப்பதாக அகழ்வாராச்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போதய நெருக்கடி நிலைமையை தற்காலிகமாக சமாளிக்கும் பொருட்டு லங்கா IOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்தாகவும் அதற்கான பணப்பரிமாற்றமும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments: