Advertisement

Responsive Advertisement

பதுக்கிய பெற்றோலில் எரிந்து பலியான பெண் - திருகோணமலையில் சம்பவம்

 


பைஷல் இஸ்மாயில்)


திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ள்ள சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

வீட்டின் சுவாமி அறையில் நேற்றுக் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீக்குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments