Home » » இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்

 


இலங்கைக்கு வரும் விமானங்களை அடுத்த பயணங்களுக்கான எரிபொருளை நிரப்பி வருமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச விமானங்கள் தடைப்படும் அபாயம்

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் | Are Flights From India To Sri Lanka Open

விமானங்கள் திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரப்பி வருவதனால் விமானங்களில் ஏற்றப்படும் சரக்குகளின் அளவு குறைவடைகின்றன. அத்துடன் இடையில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வேறு நாடுளில் விமானங்களை தரையிறக்க வேண்டியுள்ளமையினால் செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த விமானங்களின் சரக்கு மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், செலவுகளை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது எனவும் விமான சேவைகள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் | Are Flights From India To Sri Lanka Open

பெரிய விமானம் அதிக எரிபொருளை சேமித்து வைத்து பறக்கும் என்பதனால் எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற இலங்கைக்கு அடிக்கடி செல்லும் விமானங்கள் எரிபொருளுடன் திரும்பும் என எதிர்பார்க்கலாம்.

எனினும் தற்போது தமது பயணங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் இலங்கைக்கு 42 விமான சேவைகள் வருகின்ற நிலையில், நீண்ட தூர பயணங்களின் போது திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரப்பி செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

சராசரியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏறக்குறைய 8 மில்லியன் லீட்டர் விமான எரிபொருளை சேமித்து வைக்க முடியும், ஆனால் தற்போதைய வெளிநாட்டு இருப்பு நெருக்கடி காரணமாக விமான எரிபொருள் இருப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் விநியோகத்தை தனி நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |