Advertisement

Responsive Advertisement

இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து - 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம்

 


எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10 திகதி நாட்டை முடக்கி வைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. 

இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு எரிபொருள் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறை

இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து - 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம் | Sri Lanka Will Be Completely Lockdown

இன்று நள்ளிரவு முதல் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, துறைமுகம் சுகாதார பிரிவு, விவசாயம் போன்ற அச்சியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை நகர்புற பாடசாலைகள் இயங்காது. ஏனைய அனைத்து சேவைகளும் இயங்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் இடைநிறுத்தி வைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Post a Comment

0 Comments