அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு!

Thursday, January 31, 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் எனது அமெரிக்க குடியுரிமை நீக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராகி விட்டேன். மஹிந்த ராஜபக்ஸவின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்துள்ளது. அத்துடன், தற்போதைய ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
எங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நம்பாமல் எமக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களிடம் நான் கோருகின்றேன். எனக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில், இந்நாட்டின் தமிழ் பேசும் மக்கள் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பேன்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான செயற்பாடுகள் மற்றும் நகர்வுகள் பெரும்பாலும் பூர்த்தியாகிவிட்டன. யுத்தத்திற்கு தலைமை வகித்ததால் என்னைப்பற்றி தவறான மற்றும் பொய்யான பிரசாரங்களை தமிழ் மக்கள் மத்தியில் சிலர் முன்னெடுத்துள்ளனர். எனினும் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் மீட்பதற்காகவே நான் போராடினேன்“ என தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

இந்தியாவில் பயங்கரக் குண்டுகள் வெடிக்கலாம்; அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

இந்தியாவில் திவிரவாதிகள் தாக்குதல்களை முன்னெடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி ஆப்கானிஸ்தானிலும் இந்த தீவிரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் என அவர் கூறியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் ஜூலை மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க சார்பு மையங்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் பயங்கரமான குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு செய்தி கிடைத்துள்ளது.
குறிப்பாக இந்தியா அமெரிக்க சார்பான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதனால் அங்குள்ள அமெரிக்க நிலைகள் மீது தீவிரவாதிகள் குறிவைக்ககூடும் என அந்த அதிகாரி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
READ MORE | comments

விரைவில் மரணதண்டனை - ஜனாதிபதி எச்சரிக்கை!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வெகுவிரைவில் மரணதண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை போன்று, போதைப்பொருள் வியாபாரமும் விரைவில் ஒழிக்கப்படும். அதற்கான பொறுப்பு முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரிகள் உலக அரசியலை வீணடிக்கின்றனர். ஆகவே இந்த போதைப்பொருள் வர்த்தகம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். பிலிபைன்ஸ் ஒரு காலத்தில் போதைப்பொருட்களால் மலிந்து காணப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று அந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்பாட்டை முன்னெடுத்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மரணதண்டனை வழங்கப்படுகின்றது. அதேபோல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வெகு விரைவில் மரணதண்டனை விதிக்கப்படும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கைதான காத்தான்குடி நபரை தப்பிக்கவிட்டனர் பொலிஸார்!சிறுமி ஒரு­வ­ரைக் கடத்த முற்­பட்ட குற்­றச்­சாட்­டில், காத்­தான்­கு­டி­யைச் சொந்த இட­மா­கக் கொண்ட இளை­ஞனை மடக்­கிப் பிடித்து முறை­யான கவ­னிப்­பின் பின்­னர் பொலி­ஸா­ரி­டம் மக்­கள் ஒப்­ப­டைத்­த­னர். அவர் மருத்­து­வ­ம­னை­யில் பொலிஸ் பாது­காப்­பி­லி­ருந்­த­ போது தப்­பிச் சென்­றுள்­ளார். பொலி­ஸார் வேண்­டு­மென்றே அவ­ரைத் தப்­பிக்கவிட்­ட­னர் என்று நாவாந்­துறை மக்­கள் குற்­றம் சுமத்­தி­னர்.
‘கடந்த 23ஆம் திகதி எமது பகு­தி­யில் 12 வய­துச் சிறு­மியை உந்­து­ரு­ளி­யில் வந்த இளை­ஞன் கடத்­திச் செல்ல முற்­பட்­டான். இருப்­பி­னும் சிறுமி பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டாள். கடத்த முற்­பட்ட இளை­ஞன் தப்­பிச் சென்­று­விட்­டான். உந்­து­ருளி இல­கத்­தைக் குறித்து வைத்­துக் கொண்­டோம். இன்­றும் (நேற்று) அதே உந்­து­ரு­ளி­யில் இளை­ஞன் ஒரு­வன் உலா­வு­வதை அவ­தா­னித்­தோம். சந்­தைப் பகு­தி­யில் அவரை மடக்­கிப் பிடித்­தோம்’ என்று நாவாந்­து­றைப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.
இளை­ஞனை மடக்­கிய மக்­கள் அவரை கம்­பத்­தில் கட்டி வைத்து முறை­யா­கக் கவ­னித்­த­னர். பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­போ­தும் 2 மணி­நே­ரம் தாம­த­மா­கவே அவர்­கள் அங்கு வந்­த­னர்.
பொலி­ஸா­ரி­டம் இளை­ஞன் ஒப்­ப­டைக்­கப்­பட்­டான். இதன்­போது, தான் காத்­தான்­கு­டி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் சமை­யல் வேலைக்­கா­கவே யாழ்ப்­பா­ணம் வந்­தேன் என்­றும் இளை­ஞன் தெரி­வித்­துள்­ளான்.
யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் 24ஆம் விடு­தி­யில் இளை­ஞனை பொலி­ஸார் சிகிச்­சைக்­கா­கச் சேர்ப்­பித்­த­னர். அங்­கி­ருந்து மற்­றொரு விடு­திக்கு நேற்று மாலை 3.30 மணி­ய­ள­வில் இட­மாற்­றும்­போது இளை­ஞன் தப்­பித்­துச் சென்­றார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இளை­ஞ­னுக்கு மருத்­து­வ­ம­னை­யில் கைவி­லங்கு இன்­றியே சிகிச்சை வழங்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.
READ MORE | comments

மட்டக்களப்பு -கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசமாக மாட்டினார்!

சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற லொறியை விடுவிப்பதற்கு, 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய போது, மட்டக்களப்பு -கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று மாலை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினால் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
திங்கட்கிழமை சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்தபோது பொலிஸார் சுற்றிவளைத்தனர். அப்போது லொறியை கைவிட்டு விட்டு, அதன் உரிமையாளர் உட்பட மண் ஏற்றியவர்கள் தப்பியோடினர். இதையடுத்து பொலிஸார் லொறியை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். லொறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து லொறியை மீட்பதற்கு முயற்சித்த போது அவர்களிடம் 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக தருமாறு கோரப்பட்டது.லொறி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு தெரிவித்தார். இதனையடுத்து நேற்று மாலை 5.35 மணியளவில் லொறி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினர், அவரைக் கைது செய்தனர்.
READ MORE | comments

42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் 42 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேரை, கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாவாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த போதே கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றினர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று இரவு 7 மணியளவில் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
READ MORE | comments

சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்! மீண்டும் பரபரப்பாகுமா இலங்கை?

இலங்கையிலுள்ள சகல மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று சற்றுமுன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இதுதொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின் பிரகாரமே மேற்படி ஒரே தினத்தில் தேர்தலை நடத்தலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தேர்தலை எப்போது எந்த முறைப்படி நடத்துவது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவந்துள்ள அதே நேரம், இது தொடர்பான கட்சித் தலைவர்கள் சந்திப்பும் அடுத்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஜூலை மாதமளவில் தேர்தலை நடத்துவது குறித்த பேச்சுக்கள் அடிபடுவதாகவும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் இணைவுகள் குறித்து மீண்டுமொரு பரபரப்பான நிலை தோன்றும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
READ MORE | comments

இந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் : (முழுமையாக வாசிக்க)


2019.01.29 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
01. நீர் வழிகள் ஊடாக கரையோரத்திலும் கடலிலும் சேரும் கழிவு பொருட்களை கட்டுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 8ஆவது விடயம்)
கரையோரத்துக்கும் கடலிலும் சேரும் 90 சதவீதமான கழிவுப் பொருட்கள் தரைப்பகுதியில் இடம்பெறும் மனிதர்களின் செயற்பாடு மற்றும் கைத்தொழில் துறைகளே காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றுடன் சமூக பொருளாதார மற்றும் பயன்பாடு பிரச்சனைகள் உருவாகியுள்ளன. கரையோரத்தின் தரத்தை உறுதிசெய்வதற்காக சர்வதேச தர ரீதியில் கருதப்படும் டென்மார்க்க சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான அடிப்படையின் மூலம் வெளியிடப்படும் டீடரந கடயபள சான்றிதழை இலங்கையின் கரையோரப்பகுதிக்காக பெற்றுக்கொள்வதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதே போன்று இந்த நாட்டின் சுற்றுலா தொழிற்துறைக்கு கரையோரம் மற்றும் கடலை அண்டிய பிரேதசங்களின் மூலம் 70சதவீதமான பங்களிப்பு வழங்கப்படுவதனால் உலகில் சிறந்த சுற்றுலா தொழிற்துறையாக இலஙகைக்கு கிடைத்தள்ள தரத்தை பாதுகாத்து 2020ஆம் ஆண்டளவில் 4மில்லியன் சுற்றுலா பயணிகளை கவரும் இலக்கை பூர்த்தி செய்வதற்கு சுத்தமான கரையோரம் மற்றும் சமுத்திரத்தை முன்னெடுப்பது தேவையாக உள்ளது. இதற்கமைவாக நீர்வழிகள் மாசடையாமல் சுத்தமாக முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. மர தயாரிப்புக்களுக்காக வன அபிவிருத்தி –(நிகழ்ச்சி நிரலில் 9ஆவது விடயம்)
இலங்கையின் மரங்களின் தேவை வருடாந்தம் அதிகரித்து வருவதினால் அதற்கமைவாக மரங்களுக்காக தற்பொழுது உற்பத்தி செய்யப்பட்டுள்ள காட்டு உற்பத்திகள் மூலமான பயன்களை மேம்படுத்துவதற்காகவும் புதிய வன உற்பத்தியைமுன்னெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய வன உற்பத்தியை மேற்கொள்வதற்காகவவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் மாவட்டங்களில்500 ஹெக்டயர் நிலம் அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மரங்களுக்கான கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு மேலதிகமாக பிரதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் வனவளத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கும் பங்களிப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக மகாவலி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் மீள்குடியமர்வு பணிகளை துரிதமாக முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)
மோதலின் காரணமானஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்வு பணிகள் நிலையான இயற்கை கழிவறை சுகாதார வசதிகள் நீர்விநியோகம் வீதிகள் மற்றும் மின்சார தொடர்புகள் போன்ற பொருளாதார அடிப்படை வசதிகள் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை நிறுவப்படுவதை துரிதமாக மேற்nhள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக வீட்டுரிமையாளரினால் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய வீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 4750 வீடுகளைக் கொண்ட வீட்டு அலகொன்றை நிர்மாணிப்பதற்கும் இந்த பிரதேசத்திற்கு தேவையான பொருளாதார சமூக அடிப்படை வசதிகளை மேமப்படுத்துவதற்கும் பனையுடன் தொடர்புபட்ட தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக திக்காமம் டிஸ்டிலரிஸ் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. அரச நிறுவனங்களில் திட்டமிடுதல் மற்றும் முகாமைத்தவ அருங்கலை முறையாக அபிவிருத்தி பெறுபேறுக்கான முகாமைத்துவம்(ஆகுனுசு) என்ற எண்ணக்கருவை பயன்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)

அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் நவீன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ அருங்கலை முறை அபிவிருத்தி பெறுபேறுக்காக முகாமைத்தவம் என்ற எண்ண்கருவில் அரச துறைகளில் முகாமைத்துவத்தை சுழற்சி முறையாக ஆக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தேசிய பேண்தகு அபிவிருத்திஇலக்கிறகான முக்கிய பணியக புள்ளி சுட்டெண் இலக்கத்தை நோக்கி அரச முகாமைத்துவ பணி மேற்கொள்ளப்படுகிறது. அபிவிருத்தி பெறுபேறுக்கான முகாமைத்துவ செயற்பாட்டின் ஆரம்பமாக 5அமைச்சுக்கள் மற்றும் 2 மாகாண சபைகளுக்கான உத்தேச திட்டமாக நிறுவனமயப்படுத்துவதற்கும் இதன் வெற்றியின் அடிப்படையில் அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த எண்ணக்கரு திட்டத்தை பயன்படுத்துவதற்hகக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பிராந்திய வணிக விமான பயணங்களை முன்னெடுப்பதற்காக பலாலி (காங்கேசன்துறை) விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)
சுற்றுலா தொழிற்துறையின் மேம்பாட்டுக்கான விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக நேர அட்டவணைக்கு அமைய சர்வதேச வர்த்தக பயணிகள் விமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தவதற்கும் பலாலி விமான நிலைய தேவையான அபிவிருத்தி பணிகளை 1950மில்லியன் ரூபா முதலீட்டுடன் இலங்கை விமானப் படையின் மூலம் துரிதமாக மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கண்டி பல்லின போக்கலரத்து நிலையத்தை நிர்மாணிப்பதன் காரணமாக அழுத்தத்திற்குள்ளான நபர்களுக்கு நஷ்டஈடு வழங்கல் – (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)
மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தில் கண்டி பல்லின போக்கவரத்து முனைகளை வுநசஅiயெடள அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடையாளங் காணப்பட்டுள்ளது. 11700 மில்லியன் ரூபா முதலீட்டுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மூலம் கண்டி நகரத்தின் மக்கள் வாழ்க்கையில் மற்றும் கலாசார உரிமையில் தரமானதாக அபிவிருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய சுற்றாடலுக்கு பொருத்தமான போக்குவரத்து கட்டமைப்பொன்றை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக இந்த பிரதேசத்திவ் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் அடங்கலாக சுமார் 820பேர் தமது வாழ்வாதாரத்தை இழப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த தி;ட்டத்தின் காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை கணக்கிடுவதற்காக நியமிக்கப்பட்ட உரிமையை மதிப்பீடும் வேதியியல் மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசுக்கமைய சம்மந்தப்பட்ட இழப்பீட்டை செலுத்துவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. தேயிலை மற்றும் தெங்கு பெருந்தோட்ட துறைகளில் பலன்களை மேம்படுத்தவதற்hகாக வசதிகளை வழங்குதல் – (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)

சிறிய தேயிலைத் தோட்டம் மற்றும் தெங்கு தோட்டங்களினால் தொழிற்துறைக்கு மொத்த உற்பத்திக்கு வழங்கும் பங்களிப்பு கடந்த பல வருடங்களில் அதிகரித்து வருவதாக மதிப்பீடுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன் இந்த பங்களிப்பை மேலும் மேம்படுத்தவதற்கு சாத்தியககூறு இரப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிறிய தேயிலைத் தோட்டம் தெங்கு தோட்டங்களின் உற்பத்திகளின் நன்மைகளை அதிகரிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவுணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. விவசாய திணைக்களத்தின் விதை மற்றும் நடுவதற்கான பொருட்களை விநியோகிக்கும் கட்டமைப்பை நவீனமயப்படுத்தல் ( நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
நெல் ,மேலதிக உணவுப் பயிர் மற்றும் மரக்கறி வகைகளுக்கு உறுதிசெய்யப்பட்ட விதை மற்றும் நடுவதற்கான பொருட்கள் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் 27விதை பண்ணைகள் மூலமும் ஒப்பந்த அடிப்படையில் விதை உற்பத்தி வேலைத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகின்றது. இந்த விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி செயற்பாடுகளுக்கான உரிய நீர்பாசன வசதி இல்லாமை இயந்திர உபகரணங்கள் இல்லாமை களஞ்சிய வசதி போதுமானதாக இல்லாமை , போக்குவரத்து வசதி இல்லாமை மற்றும் தேவையான வசதிகள் இல்லாததின் காரணமாக அடிப்படை விதைகளுக்கான தேவைக்கான இலக்கை பூர்த்தி செய்வது சிரமமாக உள்ளது. இதனால் விதை செயலாக்க இயந்திரமயம் மாஇழுப்பல்லம, அம்பாறை மற்றும் அலுத்தரம விவசாயப் பண்ணை ஆகியவற்றை ஒன்றிணைந்த விதை மற்றும் நாட்டும் பொருட்பளுக்கான கட்டமைப்பொன்றை அமைத்தல் பெல்வேஹர மற்றும் படஅத்த விவசாய பண்ணைகளுக்கு மேலதிக பயிர் உற்பத்தி விதைகளை தெரிவுசெய்வதற்கான புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை கொள்வனவு செய்தல் ரஹங்கல சீதாஎலிய படஅத்த மற்றும் அம்பாறை விவசாய பண்ணைகளில் நான்கு களஞ்சியசாலைகளை நிர்மாணித்தல் விதை மற்றும் நடும்; பொருள் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துதல் விவசாயத்திற்கான நீர் விநிபோகத்தை விரிவுபடுத்துதல் போன்ற பணிகளை மேம்படுத்தவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 335 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
09. பேண்தகு விவசாய அபிவிருத்தி மத்திய நிலையமொன்றினை அமைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 28 ஆவது விடயம்)

மாகந்துரயில் அமைந்துள்ள இயற்கை விவசாயத்திற்கான விசேட கேந்திரத்தின் மூலம் இயற்கை விவசாய விவசாய தொழிற்துறை மற்றும் இயற்கை உரம் தொடர்பான ஆய்வு மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறுவதுடன் மாகந்துர விவசாய ஆய்வு மற்றும் மத்திய நிலையத்தின் மூலம் பயி;ர் மேம்பாடு ஊக்குவித்தல் போசாக்கு போன்ற துறைகள் குறித்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்பொழுது சுற்றாடலுக்கு பொருத்தமான விவசாய அபிவிருத்தி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையமொன்றை அமைப்பதன் தேவை ஏற்பட்டிருப்பதினால அதற்கமைவாக இந்த 2 நிறுவனங்களையும் ஒன்றிணைத்த பேண்தகு விவசாய அபிவிருத்தி மத்திய நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. விதை மற்றும் நடும் பொருட்களின் தரத்தை உறுதிசெய்தல் (நிகழ்ச்சி நிரலில் 29ஆவது விடயம்)
தரமான விதை மற்றும் நடும் பொருள் பாவனை மூலம் அறுவடையை 15 – 20 சதவீதம் வரையிலான அளவில் மேம்படுத்த முடியும் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இதனால் இதற்கு தரமான விதை உற்பத்தியில் தேவையான உபகரணங்கள் மற்றும் சேவைகள் விவசாயிகளுக்கு வழங்குதல் புதிய தாவர வகை வளர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி நடும் பொருட்களை பிரபலயப்படுத்தல் சந்தையில் விற்பனைக்குள்ள விதை மற்றும் பொருட்களின் தரத்தன்மையை உறுதிசெய்தல் தரமான நடும் பொருட்கள் உறபத்தி தொடர்பில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை தெளிவுபடுத்தவதற்கு ஊடக பிரசார முறையை பயன்படுத்துதல் மற்றும் நடும் பொருள் உற்பத்தி தொழிற்துறை பணிகளை விரிவுபடுத்துவதற்காக திட்டம் வகுக்கப்படும். இந்த பணிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம ;மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 1980ஆம் ஆண்டு இலக்கம் 33 கீழான பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்குருத்தும் பொறிமுறையை வலுவூட்டல் (நிகழ்ச்சி நிரலில் 30ஆவது விடயம்)

இலங்கையில் பூச்சிக்கொல்லிகளை ஒழுங்குருத்தல் பணி 1994ஆம் ஆண்டு இலக்கம் 6 மற்றும் 2011ஆம் ஆண்டு இலக்கம் 31 சட்டங்களில் திருத்தம் 1980ஆம் ஆண்டு இல 33 பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்துதல் சட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறை ஆரம்பம் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய சுமார் 70 வகையான பூச்சிக்கொல்லிகளின் எண்ணிக்கை தற்பொழுது சுமார் 700ஆக பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதே போன்று தொழிற்துறையில் உலக ரீதியில் இடம்பெற்றுள்ள அளவு மற்றும் அபிவிருத்திககு; அமைவாக பூச்சிகொல்லிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கமைவாக பூச்சிக்கொல்லிகளில் அடங்கியுள்ள தரத்தன்மையை பாதுகாத்தல் உணவு பயிர்களுக்கு தேவையான ஒழுங்குருத்தலில் அவசியத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை வலுவூட்டுதல் தேசிய உணவு பாதுகாப்புத் தன்மை மற்றும் பாவணையாளர்களை பாதுகாப்பதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதகமான வசதிகளை விரிவுபடுத்துதல் உலகளாவிய விவசாய தயாரிப்பு மேம்பாடு மற்றும் சிறந்த விவசாய நடைமுறையை பிரபல்யடுபத்துதல் விவசாய துறையில் பூச்சிக்கொல்லிகள் மாத்திரமின்றி அவை மற்றும் தொடர்புபட்ட ஏனைய துறைகளை உள்ளடக்கும் வகையில் ஒழுங்குறுத்தல் நடைமுறையை விரிவுபடுத்தல் தேவையான தரவுக்கட்டமைப்பை கட்டியெழுப்புதல் நிர்வாக கட்டமைப்பை வலுவூட்டல் பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. தேசிய அளவில் விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை அமைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 31ஆவது விடயம்)
இரசாயன உரம் இஙற்கை உரம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை பயன்படுத்தும் தன்மை மற்றும் மேலதிக பயன்பாடு ஒழுங்குறுத்தல் உணவு மண் மற்றும் நீர்த்தேவை மற்றும் கழிவு மட்டம் மதிப்பிடுவதற்கும் நவீன வசதிகளைக் கொண்ட விஞ்ஞான ஆய்வுக் கூடமொன்றை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்மைவாக விஞ்ஞன கூடம் மற்றும் உபகரணங்கள் வசதிகளை வழங்குவதற்கு இதன் மூலம் பரிசோதனை ஆய்வை. மேம்படுத்துதல் மற்றும் தரத்தை உறுதிசெய்வதற்கும் விவசாய பயன்பாடுகள் மற்றும் முறையாக பயன்படுத்தல் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கும் விவசாய இரசாயன பொருள் மற்றும் உரப்பாவணை மற்றும் விநியோகித்தல் முறை பயிற்சியை வழங்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இருதரப்பு விமான சேவை உடன்படிக்கையை எட்டுதல் நிகழ்ச்சி நிரலில் இல 40,43,44,45)

விமான சேவை பணிகள் தொடர்பில் சர்வதேச புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தான் கட்டார் இஸ்ரேல் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளுடன் இலங்கையருக்காக அதிகார மட்டத்தில் உடன்பட்டுள்ள விமான சேவை உடன்படிக்கைகளில் அதிகார பிரதிநிதியினால் கையெழுத்திடவும் அதன் பின்னர் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிக்கும் வகையில் இந்த இருதரப்பு விமான சேவை உடன்படிக்கையை முன்னெடுபதற்கும் போக்குவரத்து விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கள அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 1978 இலக்கம் 2இன் கீழான நீதிமன்ற அமைப்பு சட்டத்தில் 45ஆவது சரத்தை திருத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 49ஆவது விடயம்)
1978 இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் 45ஆவது சரத்துக்கமைய ஏதேனும் காலம் மாவட்டம் அல்லது தொகுதிக்காக சமாதான நீதவான்களை நியமிக்கும் அதிகாரத்தை நீதிமன்ற விடயத்திற்கு பொருப்பான அமைச்சருக்கு வழங்குதல் இதற்கமைவாக இதன் பதவிக்கு நியமிக்கப்படுபவரின் குடியிருப்பை கவனத்தில கொண்டு பொருத்தமான வகையில் ஏதேனும் நீதிமன்ற வலய அல்லது மாவட்டம் அல்லது தொகுதி ஒன்றில் சேவை மேற்கொள்ளக்கூடிய வகையில் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுவர். இருப்பினும் அடிக்கடி நீதிமன்ற வலயம் மாற்றப்படுவதன் காரணமாக சமாதான நீதவான்கள் தமது நீதிமன்ற வலயங்களை அடையாளங் காண்பதில் ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொண்டு நீதிமன்ற வலயத்திற்கு மாவட்டத்திற்கு அல்லது தொகுதிக்கு சமாதான நீதிவான்களை நியமிப்பதற்கு பதிலாக நிர்வாக மாவட்டத்திற்காக சமாதான நீதிவான்களை நியமிக்க கூடிய வகையில் 1978ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற செயற்பாட்டு சட்டத்தின் 45 ஆவது சரத்தை திருத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக திருத்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தத்தை வர்தமானியில் வெளியிடுதல் மற்றும் அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. களனி கல்வி வலயத்தில் தமிழ் மொழி தேசிய பாடசலையொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 55ஆவது விடயம்)
கம்பஹா வத்தளை பிரதேசத்தில் வாழும் தமிழ் மொழியில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவதற்காக அருண் பிரசாத் அமைப்பினால் கல்வி அமைச்சிடம் பரிசு உறுதிபத்திரத்தின் மூலம் வழங்குவதற்கு உள்ள சொத்தை பயன்படுத்தி அருண் மாணிக்க வாசகம் இந்து வித்தியாலம் என்ற பெயரில் தமிழ் மொழி இந்து இன மக்களுக்காக பாசாலை யொன்ற களனி கல்வி வலயத்தில் அமைப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழி சமூக மேம்பாடு இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. முக்கியத்துவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியவ வடக்கு மற்றும் கிழக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)
வடக்கு கழக்கு மாகாணங்களில் வாழ்வோரின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்;படுத்தி அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக அந்த பிரதேசங்களில் வீடு கட்டமைப்பை புனரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் சீர்சி – நேம் கூட்டு வர்த்தகத்திடமும் வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட் கேடீர் வீரசிங்க மற்றும் தனியார் நிறுவனத்திற்கும் கிழக்கு மாகாணத்த்pலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீதிகளை புனரமைக்கும் ஒப்பந்தம் ஆலோசனை பொறியியலாளர் மற்றும்; தனியார் நிறவனத்திடமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு உட்பட்ட வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் நவலோக் கன்ஸ்ட்ரக்ஷன் தனியார் நிறவனத்திற்கும்; கிழக்கு உள்ளுராட்சி மன்றத்தக்கு உட்டபட்ட வீதி புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட சீனோ ஐக்ரோ கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. களனி ஸ்ரீ ஜயவர்தனபுர சபரகமுவ மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களில் வசதிகளை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவது விடயம்)
உயர்கல்வி துறையில் தரத்தை மேலும் மேம்படுத்தவதற்காக பல்கலைக்கழகங்களில் அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஐந்து மாடி தங்குமிட கட்டிடமொன்றை நிர்மாணித்தல், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் 7 மாடிகளைக்கொண்ட பல செயற்பாடு கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டமாக அங்கு 3 மாடிகள் அமைக்கப்படவுள்ளன. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்திற்காக பீட கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விரிவுரை மண்டப கட்டிடம் மற்றும் இங்கு பொறியியல் பீடத்தின் பல்லின செயற்பாடு கட்டிடமொன்றை நிர்மாணிக்கப்பட்டு வரும் பணிகளை; நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமில் நீர்வநியோகம் மற்றம் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. ஹொரண பாதுக்கை மற்றும் அபரண வாழைச்சேனை நீர் வுசயளெஅளைளழைn வலைப்பினலை ; மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 63ஆவது விடயம்)
இலங்கை மின்சாரசபைக்கு உட்பட்ட வுசயளெஅளைளழைn வலைப்பின்னலை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி தொழிற்துறையின் அடிப்படையில் மேம்படுத்துவதற்கான முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் ஹொரண பாதுக்கை இடையில் 25 கிலோமீற்றர் வுசயளெஅளைளழைn நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் ஹபரண – வாழைச்சேனைக்கிடையில் வுசயளெஅளைளழைn கொண்ட 2 கட்டமைப்புக்களை மேட்கொள்வதற்கான ஒப்பந்தம் ஆஃ ள ஊhiயெ யேவழையெட நுடநஉவசiஉ நுபெiநெநசiபெ உழ. டுவன நிறவனத்திடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. தேசிய வுசயளெஅளைளழைn மற்றும் விநியோகிக்கும் கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வலைப்பின்னல் . மேம்படுத்தும் திட்த்தின் கீழ் அதற்கானவற்றை நிர்மாணித்தல் மற்றும் வலுவை மேம்படுத்தவதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 64ஆவது)
மின்கட்டமைப்பில் வுசயளெஅளைளழைn மற்றும் விநியோக கட்டமைப்பை அபிவிருத்தி செயல்திறன் அடிப்படையில் மேம்படுத்துதல் கூறுகள். 4இன் கீழ் நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3ஆவது கூறு ரீதியில் திட்டமிடப்பட்டுள்ளவற்றை நிர்மாணித்தல் மற்றும் வலுவை மேம்படுத்துவதற்கான திட்ட ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டநிலையியற் பெறுகைக் குழுவின் முiனெநn ஊழசிழசயவழைn மற்றும் நிறுவனத்தினால் எட்டபட்ட கூட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்காகமின்சக்தி மற்றும் முயடியவாயசர Pழறநச வுசயளெ அளைளழைn ; எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. லக்விஜய நிலக்கரி மின்அணுவில் நிலக்கரி பிரிவின் வலுவை மேம்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
நுரைச்சோலையில் லக்விஜய நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பிரிவில் நிலக்கரி பயன்பாடு 742421 மெட்ரிக்தொன் ஆவதுடன் இதன 3 மாத காலத்திற்கு நிலக்கரி தேவையை களஞ்சியப்படுத்துவதற்கான வசதி போதுமானதாகும் இதனை 6 மாதத்திற்கு தேவையான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விரிவுபடுத்துவதற்காக இதன் களஞ்சிய கொள்வனவை 1.21மெட்ரிக் தொன்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட் நிலையான பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஆஃள ஊhiயெ ஆயஉhiநெசல நுபெiநெநசiபெ ஊழசிழசயவழைn குழுமவிடம் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிதாக களஞ்சிளசாலையை நிர்மாணித்தல் மற்றும் தற்பொழுதுள்ள களஞ்சியசாலைகைளை சீர்செய்தல் ( நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)
விவசாய துறையை மேம்படுத்தி விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக இந்த துறை மற்றும் தொடர்புபட்ட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக பெலிஅத்த மற்றும் மீகஹஜயபுர ஆகிய பிரதேசங்களில் 2000 மெற்றிக் தொன் வலுவைக் கொண்ட நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட 2 களஞ்சியசாலைகளை நிர்மாணிப்பதற்கும் நாடு முழுவதிலுமுள்ள 39 களஞ்சிய சாலைகளை சீர்செய்வதற்கும் விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம ;மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-(3)
READ MORE | comments

இன்று காலை பரிதாபமாக பலியான விரிவுரையாளர்! சி.சி.டீ.வி காணொளி வெளியானது

விரிவுரையாளர் ஒருவர் பரிர்ஹாபகரமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய கந்தக்குட்டி கோமலேஸ்வரன் என அடையாளம் காணபட்டுள்ளார்.
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து திடீரென ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவரே இந்த விபத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி தற்பொழுது பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
READ MORE | comments

செங்கலடியை சேர்ந்த அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் k.கோமளேஸ்வரன் உயிரிழப்பு.

செங்கலடியை சேர்ந்த  அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் k.கோமளேஸ்வரன் sir உயிரிழப்பு.
ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் விபத்து அக்கறைப்பற்று - திருகோணமலை  தனியார் ( Anu bus)  பஸ் சாரதியின் அசமந்த போக்கே இந்த விபத்துக்கான காரணமாக அமைந்துள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது.

ட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் விஞ்ஞான விரிவுரையாளர்; க. கோமலேஸ்வரனின் அகால மரணம். இன்று(31) காலை வீட்டிலிருந்து கலாசாலைக்கு பணிக்காக வரும் வேளையில் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி அன்னார் அகால மரணமானார். 49 வயதையே உடைய அன்னாரின் அகால மரணம் கலாசாலைக்கு மாத்திரமின்றி, குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரின் விஞ்ஞான ஆசிரியாக பணிபுரிந்த அவர் இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் விஞ்ஞான விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான அன்னார் கல்வி முதுமானிப் பட்டத்தை திறந்த பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளதுடன் பட்டமேற்படிப்புக்கான பட்டங்களையும் பெற்று தான் பெற்ற கல்வியினூடாக பாடசாலை மாணவர்களினதும், ஆசிரிய மாணவர்களினதும்; கல்வி முன்னேற்றத்திற்கு தனது கால நேரங்களைச் அர்ப்பணிப்பு செய்தவர். கலாசாலையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட அன்னார் இன, மத பிரதேச வேறுபாடின்றி அனைத்து ஆசிரிய மாணவர்களுடனும், கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுடன் அன்பாகப் பழக்குவதுடன் தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் பிரதேச மேம்பாட்டுக்கான சமூக சேவைகளிலும்; தன்னை அர்ப்பணித்து செயற்படுபவராக இருந்தார். அன்னாரின் அகால மரணத்தினால் துயரத்தில் உறைந்துள்ள குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்கள் .


READ MORE | comments

திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார் கர்ப்பிணியான தாதி!

Monday, January 28, 2019

வடமராட்சி- கரணவாய் தெற்கில் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்தார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியாக கடமைபுரியும் குலதீபன் பிரிந்தா (வயது-32) என்ற கற்பிணிப் பெண் வைத்தியசாலையில் வேலை முடித்து விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அவர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தமிழரின் இரத்தப் பண்ணையாக மாறிய கொக்கட்டிச்சோலை! இன்றும் நெஞ்சைவிட்டு ஆறாத வடு!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மகிழடித்தீவு சந்தியிலுள்ள நினைவுத்தூபிக்கு அஞ்சலி சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கொக்கட்டிச்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அப் படுகொலையில் உயிர் தப்பியவர்கள், பொது மக்கள் எனப் பெருந்தொகையானோர் இந்நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கிராமத்தின் மீது 28.01.1987 இல் சிறிலங்கா இராணுவத்தின் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கொண்டவெட்டுவான், களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கல்லடி ஆகிய இடங்களிலிருந்து கவசவாகனங்களுடன் முன்னேறிய இராணுவத்தினரும் குண்டுவீச்சு விமானங்களும் உலங்குவானூர்திகளும் மேலதிக உதவித் தாக்குதல்களை வழங்க கொக்கட்டிச்சோலை கிராமத்தினுள் நுழைந்த படையினர் அம்மக்களை மிகமோசமாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததுடன் படுகொலைகளையும் செய்தனர்.
இதில் குறிப்பாக அமெரிக்க நிதி உதவி கண்காணிப்புடன் மகிழடித்தீவு இறால் பண்ணை இயங்கி வந்தது. இங்கு பெருமளவு ஏழைமக்கள் வேலை செய்து வந்தனர். அங்கு வேலை செய்த நூற்று முப்பத்தைந்து பொதுமக்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்து இறால் பண்ணைக்குள்ளேயே போட்டதால் இறால் பண்ணை மனித உடல்களை கொண்ட இரத்தப் பண்ணைகளாக காட்சியழித்தது. அத்துடன் கொக்கட்டிச்சோலை அரிசியாலையில் தஞ்சமடைந்திருந்த இருபத்துநான்கு பேரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் 12 வயது நிரம்பிய 7 சிறுவர்களும் உள்ளடங்குவார்கள். இதில் குறிப்பாக பன்னிரண்டு வயது தொடக்கம் நாற்பது வயதிற்குட்பட்ட இருநூறிற்கு மேற்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டு சித்திரவதைகளின் பின் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் பலர் படுகாயப்படுத்தப்பட்டனர்.
மேலும் அம்பிலாந்துறை என்ற கிராமத்தில் நாற்பத்தைந்து பொதுமக்களை கொன்ற இராணுவத்தினர் அவர்களின் உடல்களை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் உட்பட பல தொடர் படுகொலைச் சம்பவங்கள் 28,29,30 ஆகிய மூன்று நாட்களிற்குள்ளும் கொக்கட்டிச் சோலையிலும் அதன் அயல் கிராமங்களிலும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கதாகும்.

READ MORE | comments

மதுபான விலை அதிகரிக்கப்பட்டது


உள்நாட்டு மதுபான போத்தலின் விலையை அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கால் மற்றும் அரை போத்தல்களின் விலைகளை 20 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. -(3)
READ MORE | comments

தற்கொலையாளிகளின் களமாகிவரும் கல்லடிப் பாலம் !!!!!!!


மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாநகரின் ஒரு வரலாற்று சின்னம் இந்த கல்லடி பாலம். இந்த பாலத்தின் கீழ் ஓடும் ஆற்றில் இரவு நேரங்களில் பார்த்தால் எத்தனை அழகான வண்ணங்கள். கோடி அழகு இங்கு கொட்டி கிடக்கின்றது. இரவு நேரங்களில் பாடும் மீன்களின் பாட்டு சத்தம் தேனாய் காதில் பாயும் என்று இங்கு எல்லோரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.

ஆனால் இன்று சில நாட்களாக பல உயிர்களின் மரண ஓலம் தான் கேட்கிறது.

வேறு பிரதேசங்களில் இருக்கும் மக்களிடையே இந்த கல்லடி பாலம் குறித்து ஒரு கருத்து இன்றும் இருந்து வருகின்றது அது கல்லடி பாலத்தில் பேய்கள் நடமாட்டம் இருக்கிறது அந்த பாலத்திற்கு ஒரு பயங்கரமான வரலாறு இருக்கிறது என்பதாகும். நான் மட்டக்களப்பை பற்றி கேள்விப்பட்ட போதும் கல்லடி பாலத்தில் பேய் இருக்கிறதாம் என்று எங்கள் ஊரில் சிலர் கூறினார்கள்.  அதன் பின்பு இங்கு நான் வந்த போது அடடா எத்தனை அழகான இடம் இது, இதை போய் ஏன் இப்படி கூறுகிறார்கள், நம் ஊர் மக்கள் கதை கட்டுவதில் வல்லவர்கள் என்றெல்லாம் நான் நினைத்ததுண்டு.

ஆனால் இன்று நான் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எத்தனை முட்டாள் மனிதர்களின் உயிர்கள் இந்த பாலத்திற்கு கீழ் ஓடும் ஆற்றில் கரைந்து போயுள்ளது.


இந்த கல்லடி பாலத்தின் வரலாற்றை நான் படித்த போது,

இந்த பாலம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது 1924 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  பிரித்தானிய பிரிட்டிஷ் கவர்னரான வில்லியம் மானிங் அவர்களின்  மனைவியின் நினைவாக இந்த பாலம் லேடி மன்னிங் பாலம் என்று பெயரிடப்பட்டது. இது இலங்கையின் பழமையான மற்றும் மிக நீண்ட இரும்பு பாலம் ஆகும். தினமும் சராசரியாக 10,000 வாகனங்கள் இந்த குறுகிய ஒற்றைப் பாலத்தில் சென்றதாக கூறப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டில் பழைய பாலத்துடன் ஒரு புதிய பாலத்தை இணைக்க திட்டமிடப்பட்டது. புதிய பாலத்தின் கட்டுமானம் மார்ச் 2008 இல் தொடங்கியது.   புதிய பாலம் கட்டுன பணிகள் முடிந்து முறையாக 22 மார்ச் 2013 அன்று திறக்கப்பட்டது.

புதிய இரண்டு பாதை பாலம் 288.35 மீ (946 அடி) நீளம் மற்றும் 14 மீ (46 அடி) அகலம். புதிய பாலம்  ரூ. 2.6 பில்லியன் செலவில் கட்டப்பட்டது.  அமெரிக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து ஊக்கமளிக்கும் ஊக்கமளிக்கப்பட்ட கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டது இந்த பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு.இப்படி ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பாலத்தை இன்று பலர் தற்கொலை பாலம் என வர்ணிக்கிறார்கள்.

இந்த ஆற்றில் மீன்பிடி தொழில் நடைபெறுகின்றது. அதே நேரம் அங்கு உள்ள மீன்களுக்கு தங்கள் உடலை உணவாக கொடுக்கும் வேலையும் நடைபெற தான் செய்கிறது.

இந்த தற்கொலைகள் மட்டக்களப்பு நகரின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க தெரியாத கோழைகளின்  வாழ தகுதியற்ற உயிர்களை காவு வாங்கி கொண்டு அமைதியாக ஒடுகிறது பாலத்தின் கீழ் இருக்கும் ஆறு. மனிதர்கள் மற்றும் வாகனங்களோடு சேர்த்து வேலை, குடும்பம், கடன், காதல் என்று பல சோக கதைகளையும் சேர்த்து சுமக்கிறது இந்த கல்லடி பாலம்.இந்த தற்கொலைகளை யார் பொறுப்பேற்க முடியும் மட்டக்களப்பு மேயரா? கவர்னரா? நகர சபையா? மாநகர சபையா? அல்லது இந்த பாலத்தை கட்டிய பிரிட்டிஷ் கவர்னர் வில்லியம் மானிங் அவர்களின் ஆவியா?யார் என்று சொல்வது, இந்த பாலத்தில் இருந்து விழுந்து உயிரை விடும் முட்டாள்கள் தான் பொறுப்பு இதற்கு.

பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல. நாம் என்ன செய்கிறோம் என்றால் தற்கொலை செய்து கொண்டவருக்காக பரிதாபப்படுகிறோம் அவர்களின் மரண அறிவித்தல்களை சோகத்துடன் தெரிவிக்கிறோம் இது இன்னொரு தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாகும்.இது போன்ற முட்டாள்களின் செயல்களுக்கு அனுதாபப்படாதீர்கள்.  அது இந்த தற்கொலைகளை நாம் வரவேற்பதற்கு சமம்.  இரண்டு கால்களையும் இழந்த ஒருவன் ஒரே இடத்தில் உட்கார்ந்து செருப்பு தைத்து பிழைக்கிறான் ஆனால் காலில் பெரிய காயம்பட்டவன் தன்னால் நடக்க முடியவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறான்.  இது தான் நம் மனித இனத்தின் கசப்பான உண்மை நிலை.

உயிரின் பெறுமதி என்னவென்று தெரியாத மதிகெட்ட மானுட ஜென்மங்கள் தான் இங்கு தற்கொலை செய்கிறார்கள்.எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அறிவு ஜீவிகளே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உங்கள் முட்டாள்தனமான செய்கை உங்கள் உறவுகளுக்கு எத்தனை வலியை கொடுக்கிறது என்று ஒரு நொடியில் உயிரை மாய்த்துக் கொண்டு நீங்கள் போய் விட்டால் எந்த பிரச்சினையை பார்த்து ஓடினீர்களோ அது உங்களுக்கு பிறகு உங்கள் அன்பானவர்களை தான் தொடரும்.

நீங்கள் தற்கொலை செய்து கொள்வதால் இந்த உலகம் உங்களை போற்றி பூஜிக்க போவதில்லை மாறாக உங்கள் நடத்தையை தான் அவதூறாக பேசும்.பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி வளருங்கள். எந்த பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு முகம் கொடுக்க கற்றுக் கொடுங்கள். இளம் வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் பிரச்சினைகளை பற்றி அவர்களுடன் மனம் விட்டு வெளிப்படையாக பேசுங்கள்.

ஏனெனில் கல்லடி பாலத்தில் இடம்பெறும் தற்கொலைகளில் அதிகமானவை இளம் வயதினர்களுடையதே. காரணம் காதல் பிரச்சினைகள்.  உங்கள் பிள்ளை யாரை காதலிக்கிறார், எங்கு போய் வருகிறார், என்ன பிரச்சினை என்பதையெல்லாம் அவதானியுங்கள். அவர்களின் செயல்களில் மாற்றம் தெரிந்தால் தனிமையில் அழைத்து பேசுங்கள். தயங்கி நிற்கவோ யோசிக்கவோ எதுவுமில்லை. இதை பற்றி பேசுவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் ஒதுக்கி வைக்க எதுவுமில்லை.இந்த கல்லடி பாலம் என்பது மட்டக்களப்பு நகரின் அடையாளம் மாறாக இது தற்கொலை செய்வதற்கான இடம் அல்ல. பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாலும் கூட அது தவறி விழுபவர்களை காப்பாற்றலாம் ஆனால் வேண்டுமென்றே வந்து விழுபவர்களை என்ன செய்ய முடியும். நம்முடைய ஊரின் பெயர் சொல்லும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அடையாளங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும். உங்களுடைய முட்டாள்  தனத்திற்கு விலை மதிப்பற்ற உயிரையும் உங்கள் ஊரின் பெருமையையும் பலி கொடுக்காதீர்கள். சமூக ஆர்வலர்களும் சமூக விழிப்புணர்வாளர்களும் மட்டக்களப்பில் பல விடயங்களுக்காக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்துகின்றீர்கள். அதே போல் இந்த கல்லடி பாலத்தில் காவு கொள்ளப்படும் உயிர்களை தடுத்து நிறுத்தவும் மக்களிடையே தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது நன்மை பயக்கும். இந்த மரண ஓலங்கள் நம் சந்ததியோடே முடிந்து போகட்டுமே நம் வருங்கால சந்ததியினரின் காதுகளுக்கு மீன்கள் பாடும் தேன் இசை மட்டும் கேட்கட்டும்.-சகி-
READ MORE | comments

கிழக்கு மாகாண ஆளுனர் விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

Sunday, January 27, 2019

கிழக்கு மாகாணத்தில் கல்வித் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே சென்று கடமையை பொறுப்பெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் முதலமைச்சின் செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் ஏறாளமானோர் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணியகத்தின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
இதன் போது தமது பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர். இருந்தும் பாடசாலைகளின் நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே சென்று கடமையை முதலில் பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் மேலதிக தேவைகள் ஏற்படின் உரிய திணைக்களத்தின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளார்.
READ MORE | comments

வடக்கில் 439 பேருக்கு- ஆசிரியர் நியமனம்!

Saturday, January 26, 2019

வடக்கு மாகாணத்துக்கான ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
இதில் 439 ஆசிரியர் நியமனங்களும்,33 தொழில் நுட்ப உத்தியோகத்தர் நியமனங்களும் வழங்கப்பட்டன.
READ MORE | comments

முதலில் நடப்பது ஜனாதிபதி தேர்தலா? மாகாண சபை தேர்தலா? : குழப்பத்தில் கொழும்பு அரசியல்


மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் முயற்சித்து வரும் நிலையில் அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தச் செய்வதற்கான தீவிர முயற்சிகளில் ஐக்கிய தேசிய கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கின்ற போதும் அதற்கு முன்னரே அந்த தேர்தலை நடத்தச் செய்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்தச் செய்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு மகிந்த மைத்திரி அணியினர் முயற்சித்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடமே இருக்கின்றது. இதன்படி அவருக்கு அழுத்தங்களை பிரயோகித்து ஜனாதிபதி தேர்தலை நடத்தச் செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர். -(3)
READ MORE | comments

கஞ்சாப் பொதியுடன் சிக்கிய இருவர்!!

கஞ்சாப் பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
-கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, மன்னார் பிரதான பாலத்தில் வைத்து ஹயஸ் ரக வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சாப்பொதி மீட்கப்பட்டது.

குறித்த வாகனத்தில் பயணித்த உடுகம மற்றும் ஜாஏல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 இலட்சம் ரூபா பெறுமதியானது எனத் தெரிய வருகின்றது.
இருவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


READ MORE | comments

இலங்கையில் அரபு கல்லூரிகளுக்கு தடை?? சகல அரபுக் கல்லூரிகளும் அரசின் கட்டுப்பாட்டில்!

அன்மைக்காலமாக இலங்கையில் மத ரீதியான தீவிரவாதக் கொள்கைகள் அதிகரித்து அதன் ஊடாக நாட்டில் இன ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுவருவதாலும் அரபுக்கல்­லூ­ரிகள் சில­வற்றின் மீது ஏனைய சமூகம் சந்­தேகம் கொண்­டுள்­ளதாலும் புதிய அரபு கல்லூரிகளை நிறுவ அரசாங்கம் தடைவிதித்துள்ளதுடன் நாட்டில் உள்ள சகல அரபுக் கல்லூரிகளையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தளம் பகுதியில் மீட்கப்பட்ட ஆயுதங்களை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் புலனாய்வுப் பிரிவினரால் அரசுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம் அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
நாட்டில் புதி­தாக அர­புக்­கல்­லூ­ரிகள் நிறு­வப்­ப­டு­வதைத் தடை­செய்­வ­தற்கும், தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் அர­புக்­கல்­லூ­ரிகள் அனைத்­தையும் வக்பு சபையின் கீழ்ப் பதிவு செய்து அவற்றைக் கண்­கா­ணிப்­ப­தற்கும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் ஆகி­யோ­ருக்கு வழங்­கி­யுள்ளார்.
நாட்­டி­லுள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் அமைச்சர் ஹலீம் கருத்து தெரி­விக்­கையில்;
நாட்டில் சுமார் 300 அர­புக்­கல்­லூ­ரிகள் இயங்கி வரு­கின்­றன. இவற்றில் பல, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்யப்பட்டில்லை. திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்­டுள்ள அர­புக்­கல்­லூ­ரி­களும் ஒழுங்­காக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தில்லை. அவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள முடி­யா­துள்­ளது.
திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள மற்றும் பதிவு செய்­யப்­ப­டாத பல அர­புக்­கல்­லூ­ரிகள் வெளி­நா­டு­களில் இருந்து நிதி­யு­த­வி­களைப் பெற்று வரு­கின்­றன. அந்­நிதி எவ்­வாறு செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது என்றும் அறிய முடி­யா­துள்­ளது. அதனால் புதி­தாக அர­புக்­கல்­லூ­ரிகள் ஸ்தாபிக்­கப்­ப­டு­வது நிறுத்தப்பட்டு, தற்­போ­துள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனத் தெரிவித்தார்.
இன்­றைய சூழ்­நிலையில் அர­புக்­கல்­லூ­ரிகள் சில­வற்றின் மீது ஏனைய சமூகம் சந்­தேகம் கொண்­டுள்­ளது. முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்­றுள்­ள­வர்கள், தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரா­ன­வர்கள், இஸ்லாம் நல்­லி­ணக்­கத்­தையும், நல்­லு­ற­வை­யுமே வலி­யு­றுத்­து­கி­றது என்­பதை நாம் நிரூ­பிக்க வேண்டும்.
அர­புக்­கல்­லூ­ரி­களை வக்பு சபையின் கீழ் பதிவு செய்­வதன் மூலம் அவற்றை கண்­கா­ணித்து அபி­வி­ருத்தி செய்­ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதே­வேளை, இலங்கை அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றி­யத்தின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.எம்.ஜவுபர் கருத்து தெரி­விக்­கையில்; இலங்கை அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றி­யத்தில் 217 அர­புக்­கல்­லூ­ரிகள் பதிவு செய்து கொண்­டுள்­ளன. மேலும் 10 அர­புக்­கல்­லூ­ரிகள் பதி­வுக்­காக விண்­ணப்­பித்­துள்­ளன.
அமைச்சர் ஹலீம் எடுத்­துள்ள தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­க­தாகும். தற்­போது இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரி­களை முன்­னேற்­று­வ­தற்கு அர­சாங்கம் திட்­டங்­களை வகுத்து உதவி செய்ய வேண்டும் என்றார்.
வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசின் கருத்து தெரிவிக்கையில்; வக்பு சபையில் அரபு கல்லூரிகளை பதிவு செய்ய அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் வக்பு சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
READ MORE | comments

வாழைச்சேனையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

Friday, January 25, 2019


வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும், வந்தாறுமூலை பிரதேசத்தில் வைத்து இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த கல்வீச்சு தாக்குதலால் பேருந்தின் முன்னாலுள்ள கண்ணாடி சேதமடைந்ததுடன், பேருந்து சாரதி மற்றும் பயணிகள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 130 கண் நோயாளர்களுக்கு கண்வெண்புரை சத்திர சிகிச்சை


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள்(பிரித்தானியா கிளை)மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் இணைந்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் போதனா வைத்தியசாலையில் வைத்து பார்வையிழந்த 130 பேருக்கு இலவசமாக கண் வெண்புரை சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யப்பட்டுள்ள கண் வெண்புரை சத்திர சிகிச்சையானது தற்போது வைத்தியசாலையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் (பிரித்தானியா கிளை)அமைப்பைச் சேர்ந்த வைத்தியர்களான திருமதி. காந்தா நிரஞ்சன்,கே.பாலசுப்பிரமணியம்,ராதா தருமரெத்தினம்,திருமதி. சவுந்தலா பாலசுப்பிரமணியம் மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டார்கள்.

கண் சத்திர சிகிச்சை நிபுணர்களான வருண மற்றும் ஆகியார்கள் கண்ணில் காணப்பட்ட வெண்புரையை பரிசோதித்து அதன்மூலம் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார்கள்.இவர்களுக்கான வில்லைகள்,மருந்துகள் என்பனவற்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமெரிக்காவில் கொள்வனவு செய்து மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மாவட்டத்தில் உள்ள வறுமைப்பட்ட,பார்வையிழந்த மக்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

பழுகாமம்,களுவாஞ்சிகுடி, செங்கலடி,வாகரை,நரிப்புல்தோட்டம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 130பேருக்கே இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

தலைக்கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வலம் வரும் பௌத்த பிக்கு


மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகர பகுதியில் பௌத்த மதகுரு ஒருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வீதியில் பணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பௌத்த மதகுரு இன்றைய தினம் தலை கவசம் அணியாமல் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சென்றதாக பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |