Home » » இலங்கையில் அரபு கல்லூரிகளுக்கு தடை?? சகல அரபுக் கல்லூரிகளும் அரசின் கட்டுப்பாட்டில்!

இலங்கையில் அரபு கல்லூரிகளுக்கு தடை?? சகல அரபுக் கல்லூரிகளும் அரசின் கட்டுப்பாட்டில்!

அன்மைக்காலமாக இலங்கையில் மத ரீதியான தீவிரவாதக் கொள்கைகள் அதிகரித்து அதன் ஊடாக நாட்டில் இன ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுவருவதாலும் அரபுக்கல்­லூ­ரிகள் சில­வற்றின் மீது ஏனைய சமூகம் சந்­தேகம் கொண்­டுள்­ளதாலும் புதிய அரபு கல்லூரிகளை நிறுவ அரசாங்கம் தடைவிதித்துள்ளதுடன் நாட்டில் உள்ள சகல அரபுக் கல்லூரிகளையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தளம் பகுதியில் மீட்கப்பட்ட ஆயுதங்களை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் புலனாய்வுப் பிரிவினரால் அரசுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம் அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
நாட்டில் புதி­தாக அர­புக்­கல்­லூ­ரிகள் நிறு­வப்­ப­டு­வதைத் தடை­செய்­வ­தற்கும், தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் அர­புக்­கல்­லூ­ரிகள் அனைத்­தையும் வக்பு சபையின் கீழ்ப் பதிவு செய்து அவற்றைக் கண்­கா­ணிப்­ப­தற்கும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் ஆகி­யோ­ருக்கு வழங்­கி­யுள்ளார்.
நாட்­டி­லுள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் அமைச்சர் ஹலீம் கருத்து தெரி­விக்­கையில்;
நாட்டில் சுமார் 300 அர­புக்­கல்­லூ­ரிகள் இயங்கி வரு­கின்­றன. இவற்றில் பல, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்யப்பட்டில்லை. திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்­டுள்ள அர­புக்­கல்­லூ­ரி­களும் ஒழுங்­காக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தில்லை. அவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள முடி­யா­துள்­ளது.
திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள மற்றும் பதிவு செய்­யப்­ப­டாத பல அர­புக்­கல்­லூ­ரிகள் வெளி­நா­டு­களில் இருந்து நிதி­யு­த­வி­களைப் பெற்று வரு­கின்­றன. அந்­நிதி எவ்­வாறு செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது என்றும் அறிய முடி­யா­துள்­ளது. அதனால் புதி­தாக அர­புக்­கல்­லூ­ரிகள் ஸ்தாபிக்­கப்­ப­டு­வது நிறுத்தப்பட்டு, தற்­போ­துள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனத் தெரிவித்தார்.
இன்­றைய சூழ்­நிலையில் அர­புக்­கல்­லூ­ரிகள் சில­வற்றின் மீது ஏனைய சமூகம் சந்­தேகம் கொண்­டுள்­ளது. முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்­றுள்­ள­வர்கள், தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரா­ன­வர்கள், இஸ்லாம் நல்­லி­ணக்­கத்­தையும், நல்­லு­ற­வை­யுமே வலி­யு­றுத்­து­கி­றது என்­பதை நாம் நிரூ­பிக்க வேண்டும்.
அர­புக்­கல்­லூ­ரி­களை வக்பு சபையின் கீழ் பதிவு செய்­வதன் மூலம் அவற்றை கண்­கா­ணித்து அபி­வி­ருத்தி செய்­ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதே­வேளை, இலங்கை அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றி­யத்தின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.எம்.ஜவுபர் கருத்து தெரி­விக்­கையில்; இலங்கை அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றி­யத்தில் 217 அர­புக்­கல்­லூ­ரிகள் பதிவு செய்து கொண்­டுள்­ளன. மேலும் 10 அர­புக்­கல்­லூ­ரிகள் பதி­வுக்­காக விண்­ணப்­பித்­துள்­ளன.
அமைச்சர் ஹலீம் எடுத்­துள்ள தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­க­தாகும். தற்­போது இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரி­களை முன்­னேற்­று­வ­தற்கு அர­சாங்கம் திட்­டங்­களை வகுத்து உதவி செய்ய வேண்டும் என்றார்.
வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசின் கருத்து தெரிவிக்கையில்; வக்பு சபையில் அரபு கல்லூரிகளை பதிவு செய்ய அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் வக்பு சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |