சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற லொறியை விடுவிப்பதற்கு, 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய போது, மட்டக்களப்பு -கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று மாலை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினால் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
|
திங்கட்கிழமை சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்தபோது பொலிஸார் சுற்றிவளைத்தனர். அப்போது லொறியை கைவிட்டு விட்டு, அதன் உரிமையாளர் உட்பட மண் ஏற்றியவர்கள் தப்பியோடினர். இதையடுத்து பொலிஸார் லொறியை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். லொறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து லொறியை மீட்பதற்கு முயற்சித்த போது அவர்களிடம் 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக தருமாறு கோரப்பட்டது.லொறி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு தெரிவித்தார். இதனையடுத்து நேற்று மாலை 5.35 மணியளவில் லொறி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினர், அவரைக் கைது செய்தனர்.
|
0 Comments