Home » » கிழக்கு மாகாண ஆளுனர் விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

கிழக்கு மாகாண ஆளுனர் விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் கல்வித் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே சென்று கடமையை பொறுப்பெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் முதலமைச்சின் செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் ஏறாளமானோர் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணியகத்தின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
இதன் போது தமது பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர். இருந்தும் பாடசாலைகளின் நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே சென்று கடமையை முதலில் பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் மேலதிக தேவைகள் ஏற்படின் உரிய திணைக்களத்தின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |