விரிவுரையாளர் ஒருவர் பரிர்ஹாபகரமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய கந்தக்குட்டி கோமலேஸ்வரன் என அடையாளம் காணபட்டுள்ளார்.
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து திடீரென ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவரே இந்த விபத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி தற்பொழுது பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
0 Comments