Wednesday, January 31, 2018
சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதோன்றக்கூடிய அரிய சந்திர கிரகணத்தின் நேரலை காட்சிகளை அமெரிக்காவின் விண்வெளிக் கழகமான நாசா நேரலை செய்து வருகிறது.
அதனை கீழே பார்க்கலாம். -(3)
அதனை கீழே பார்க்கலாம். -(3)
உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள தலை சிறந்த வெதுப்பக உற்பத்தியாளர்களை கொண்ட Masters de la Boulangerieக்கு எதிராக, இலங்கை தமிழ் இளைஞன் இறுதி போட்டியை நிறைவு செய்யவுள்ளார்.
|
ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் என்பவரே இறுதி போட்டியை நிறைவு செய்யவுள்ளார். அவர் பாரம்பரிய ஐரோப்பிய முறைகளில் தனது நிபுணத்துவத்தை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து மரியதாஸ் கருத்து வெளியிடுகையில் -" நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் மற்றும் சர்வதேச நடுவர்களுக்கு மத்தியில் போட்டியிடுவதென்பது உற்சாகமாக, உள்ளது. சர்வதேச நடுவர்களை வெற்றி கொள்வதென்பது ஒரு வாடிக்கையாளரை வென்றது போலாகும். புதுமையான படைப்புக்களை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். சிறந்த சுவையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக 1995 ஆம் ஆண்டு மரியதாஸ் கனடா சென்றார். டொரொன்டோவில் வாழ்ந்து வருகிறார். கணக்கியல் படிக்கும் போது, அவர் ACE வெதுப்பகத்தில் பகுதி நேர வேலையில் இணைந்தார். மரியதாஸிற்கு வெதுப்பக தொழில் அனுபவம் இல்லாத போதிலும், எண்களை கையாளக்கூடிய திறன் அவரிடம் காணப்பட்டது. வெதுப்பகத்தில் அவரின் திடமான செயற்பாடுகள் காரணமாக சிரேஷ்ட இயக்குநராக தரமுயர்ந்தார். அதன் பின்னர் வெற்றிகரமாக பணியை முன்னெடுத்தவர் 400க்கும் அதிகமான பாண்களை தயாரித்தார்.
தற்போது உலகின் தலை சிறந்த பேக்கர் போட்டின் இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளார்.
|
பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித தீர்மானமும் எடுக்கும் அதிகாரமில்லை. ஆயினும் தேர்தலை தள்ளிப்போடுவது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
|
ஜனாதிபதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள பிணைமுறி தொடர்பான அறிக்கையும், அரச பொது சொத்துக்கள் ஊழல் தொடர்பான அறிக்கையும் தொடர்பாக பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நடக்கவிருக்கும் எட்டாம் திகதி விவாதம் தொடர்பாக அதனை நிறுத்தவோ அல்லது வேறு தீர்மானம் வழங்கவோ தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித அதிகாரமும் இல்லை.
மேலும் சபாநாயகர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று மௌனகாலம் நிலவும் எட்டாம் திகதியை தவிர்த்து அதற்கு முன் அல்லது தேர்தலுக்கு பின் பாராளுமன்ற விவாதத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் நிலைப்பாட்டிலேயே தேர்தல் ஆணைக்குழு காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
|
The Sri Lankan Government has failed to fulfill its pledge to abolish the abusive Prevention of Terrorism Act (PTA), Human Rights Watch said in a report released today. For decades, the PTA has been used to arbitrarily detain suspects for months and often years without charge or trial, facilitating torture, and other abuse.
|
“The Sri Lankan government has been all talk and no action on repealing the reviled PTA,” said Brad Adams, Asia director at Human Rights Watch. “Replacing this draconian counterterrorism law with one that meets international standards should be an urgent priority if the government is serious about protecting human rights.”
The 46-page report, “Locked Up Without Evidence: Abuses under Sri Lanka’s Prevention of Terrorism Act,” documents previous and ongoing abuses committed under the PTA, including torture and sexual abuse, forced confessions, and systematic denials of due process. Drawing on interviews with former detainees, family members, and lawyers working on PTA cases, Human Rights Watch found that the PTA is a significant contributing factor toward the persistence of torture in Sri Lanka. The 17 accounts documented in the report represent only a tiny fraction of PTA cases overall, but they underscore the law’s draconian nature and abusive implementation.
The PTA was enacted in 1979 to counter separatist insurgencies, notably the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and the law was widely used to detain hundreds of people during the country’s 26-year-long civil war. Yet while other emergency regulations have lapsed since the conflict ended in May 2009, the PTA remains in effect. The Sri Lankan government arrested at least 11 people under the PTA in 2016 for alleged terrorist activities.
The PTA allows arrests without warrant for unspecified “unlawful activities,” and permits detention for up to 18 months without producing the suspect before a court. Human Rights Watch has received several reports of people detained for a decade or more without access to legal recourse, who were subsequently acquitted or released without charge, yet received no compensation, reparations, or apologies from the government. Government figures released in July 2017 indicate that 70 prisoners have been held in pretrial detention under the PTA for more than five years, and 12 for over 10 years.
Many of those detained under the PTA described being tortured to extract confessions. Of the 17 individuals whose cases are detailed in the report, 11 reported beatings and torture. Human Rights Watch has previously documented cases where security forces raped detainees, burned their genitals or breasts with cigarettes, and caused other injuries through beatings and electric shock. A senior judge responsible for handling PTA cases said he was forced to exclude confession evidence in more than 90 percent of cases he had heard in 2017 because it was obtained through the use or threat of force. Former detainees frequently suffer from psychological and physical trauma as a result of their incarceration and ill-treatment in custody, Human Rights Watch said.
The PTA provides immunity for government officials responsible for abuses if deemed to have been acting in good faith or fulfilling an order under the act, which gives broad cover to security force personnel to engage in torture and other abuses. Numerous reports from United Nations special procedures have documented similar findings on the grave impact of the PTA. The then-special rapporteur on counterterrorism, Ben Emmerson, said after his July 2017 visit that “the use of torture has been, and remains today, endemic and routine, for those arrested and detained on national security grounds.” His post-mission report found that 80 percent of those arrested under the PTA in 2016 reported being subject to torture and other ill-treatment following their arrest. In October 2017, the special rapporteur on transitional justice, Pablo de Greiff, called for all PTA convictions that were based solely on the accused’s confession to be reviewed.
After a two-week country visit in December, the UN Working Group on Arbitrary Detention called for an immediate repeal of the PTA, referring to it as a “key enabler” of abuse. The European Union also reiterated its call for the PTA to be repealed at an EU-Sri Lanka Joint Commission meeting in January 2018.
The Sri Lankan government agreed to a resolution at the UN Human Rights Council in October 2015 outlining a series of commitments on accountability and justice. Yet more than two years on, it has largely failed to implement key pledges on security sector reform, including repealing the PTA. The UN high commissioner for human rights, Zeid Ra’ad Al Hussein, highlighted Sri Lanka’s lack of progress in his opening remarks at the 36th session of the Human Rights Council in September 2017, calling on the government to realize that its obligations are not a mere “box-ticking exercise.” At Sri Lanka’s Universal Periodic Review (UPR) in Geneva in November, several UN member countries pressed the government to implement safeguards against torture and repeal the PTA.
While the government of President Maithripala Sirisena has taken some steps to charge or release PTA detainees, it has not put forward a plan to provide redress for those unjustly detained, or addressed the issue of detainees charged and prosecuted solely on the basis of coerced confessions obtained during detention.
Although the government has floated several drafts of a new counterterrorism law, none have complied with international human rights standards. In May 2017, the cabinet approved with little public consultation a draft Counter Terrorism Act (CTA) to replace the PTA. Although the bill improves upon the PTA in some ways, it still allows prolonged arbitrary detention, enabling rights abuses such as torture. It also includes broad and vague definitions of terrorist acts, which could be used to criminalize peaceful political activity or protest. Ultimately, the proposed law falls far short of the government’s commitments to the Human Rights Council, and suggests it does not intend to fully relinquish the broad and too easily abused powers available to it under the PTA.
Rather than enacting a law that will perpetuate the wrongs committed for decades under the PTA, the government should consult with Sri Lankan victim groups, human rights organizations, and international experts to draft a law that protects both national security and human rights. This should be undertaken as one component of broader security sector reforms, including accountability for abuses carried out under the PTA, Human Rights Watch said.
“The 2015 Human Rights Council resolution did not mean an end to international scrutiny of Sri Lanka,” Adams said. “Rather, it offered tangible benchmarks that UN member countries should draw on to highlight Sri Lanka’s lack of progress and press for needed reform.”
|
தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இரு இலங்கையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இருவரும் தலைமன்னார் பகுதியிலுள்ள உறுமலை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 12 கிலோ எடையுள்ள 120 தங்கக் கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
|
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு இணையானது” என, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி பெஞ்சமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில், ஐ.நா அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு மேலாளராக பெஞ்சமின் டிக்ஸ் கடமையாற்றினார்.
|
2004 முதல் 2008ஆம் ஆண்டுவரையான 4 ஆண்டுகள் பணியாற்றிய இவர், அங்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான டிக்ஸ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கிடையே அவர் பிடிஐ செய்தியாளரிடம் வழங்கிய செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இரு தரப்பினரும் நிகழ்த்திய குற்றங்கள் மிகக் கொடூரமானவை. குறிப்பாக, இராணுவத்தின் செயல்கள் போர்க் குற்றத்துக்கு நிகரானவை. இன்னும் சொல்லப்போனால், இன அழிப்புக்கு இணையானவை. இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்துள்ளது.
ஆனால், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தி உள்ளோம் என்பதை, இராணுவம் ஏற்க மறுக்கிறது. தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக கூறிக்கொள்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, அது விடுதலை அல்ல, அவர்களுக்கான பேரழிவு. போர் ஓய்ந்த பிறகும், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களது அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவற்றை அழிக்கும் பணியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால், முன்பைவிட இப்போது நிலைமை சற்றுப் பரவாயில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
பணச்சலவை தொடர்பாக, ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி தெரிவித்துள்ளது. பணச்சலவை குறித்த அதிக ஆபத்துள்ள மற்றும் கண்காணிப்பு அதிகார வரம்புக்குட்பட்ட 11 நாடுகளை நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி பட்டியலிட்டுள்ளது.
|
இதில் இலங்கை, பொஸ்னியா- ஹெர்சகோவினா, வடகொரியா, எதியோப்பியா, ஈரான், ஈராக், சிரியா, ரினிட்டாட் அன் டுபாகோ, துனிசியா, வனாட்டு, மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல் நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணியின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தீவிரவாதத்துக்கான நிதியிடல் மற்றும் அனைத்துலக நிதி முறைமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
|
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமைகளை நீக்குவது தொடர்பான பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
|
காலி -மொரவக்க நகரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ' குற்றம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதன்படி அந்த குற்றவாளிகள் தொடர்பாக கட்சி செயற்பட வேண்டும். அந்த அறிக்கையில் காணப்படும் பரிந்துரையில் ஒன்றாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமைகளை 7 வருடங்கள் அல்ல வாழ்நாள் முழுவதும் நீக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
|