Advertisement

Responsive Advertisement

மகிந்த காலத்து ஊழல் , மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்!

ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கான சட்ட மூலம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மொரவக்க நகரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவுக்கு 300 வரையான முறைப்பாடுகள் விசாரணை நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 96 விடயங்கள் அந்த பிரிவினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் இன்னும் குறைபாடுகள் இருக்குமாக இருந்தால் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தமாறு கூறப்பட்டுள்ளது. தற்போது வரை 15 முறைப்பாடுகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் 2 விடயங்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற முறையில் , வழக்கு விசாரிக்கும் காலப்பகுதி ஆகியவற்றிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை அரச நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புகள் கிடைக்காமையினால் அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன்படி மிக விரைவில் விசேட நீதிமன்றத்தை அமைத்து இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக சட்டமூலமொன்று எமது நீதி அமைச்சரின் ஊடாக அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments