தமது கட்சியின் 96 உறுப்பினர்களும் ஒன்றாக வந்தால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அழைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பதிலளித்துள்ளனர்.
ஜனாதிபதியின் தற்போதைய அழைப்பை தாங்கள் நிராகரிப்பதாகவும் , அது ஜனாதிபதி தரப்பினரின் தோல்வியையே எடுத்துக்காட்டுவதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
0 Comments