ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் முயற்சிப்பார்களா இருந்தால் அதற்கு இடமளிக்காது ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ள திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 96 உறுப்பினர்களும் ஆதரவளித்தால் இன்றைய தினமே தனித்து அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி நேற்றைய தினம் அறிவித்துள்ளார். இந்த கருத்தானது ஐக்கிய தேசிய கட்சிக்குள் பதற்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால தமது கட்சியிலிருந்து யாரும் வெளியில் செல்லாதவாறு நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதுடன் மேலும் தமது அரசாங்கம் அமைப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எதிர் தரப்பிலிருந்து உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் , ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள சிலரின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ளவதற்கு திட்டமிட்டுள்ளதுடன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தரப்பிலிருந்தும் சிலரை இணைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments