125 பேருடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி பொதுச் செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட மற்றைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதன்படி 125 பேர் தங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் எந்தவேளையிலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு தயராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Comments