Advertisement

Responsive Advertisement

152 வருடங்களின் பின் முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் நாளை லங்கை மக்கள் பார்வையிடலாம்

கடந்த 1866 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் நாளை புதன்கிழமை தென்படும் பௌர்ணமி தினத்தன்று இலங்கை மக்கள் பார்வையிடலாம்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சந்தன ஜயரட்ன இதுதொடர்பில் தெரிவிக்கையில்,
நீல நிலவு என்றழைக்கப்படும் இந்த சந்திரனை எந்த தடங்கலும் இன்றி முழுமையாக இலங்கையிலுள்ளவர்களுக்கு காணக் கிடைக்கின்றமை சிறப்பம்சமாகும்.ஏனைய பௌர்ணமி தினங்களை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் வெளிச்சமாகவும் இந்த சந்திரன் தென்படும்.
சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வருகின்றமையே இதற்கான காரணமாகும் என்று தெரிவித்தார்.குறித்த கிரகணம் பிற்பகல் 4.21 இற்கு தென்படும். பூரண சந்திர கிரகணம் மாலை 6.22 முதல் 7.38 வரை தென்படும். இரவு 7.31 முதல் 8.41 வரை பாதியளவில் சந்திரன் தென்படவுள்ளது. இரவு 9.31 இற்கு சந்திர கிரகணம் நிறைவடையும்

Post a Comment

0 Comments