வடக்கு - கிழக்கில் ஆகக் கூடுதலான அபிவிருத்தியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளன. வடக்கு - கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியாவின் உதவியை பெறும் விசேட பெக்கேஜ் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 475 கிராமிய பாதைகள் காப்பட் முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியின் அனுகூலங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில், இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளையும், பாலங்களையும் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப் போவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
0 Comments