தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இரு இலங்கையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இருவரும் தலைமன்னார் பகுதியிலுள்ள உறுமலை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 12 கிலோ எடையுள்ள 120 தங்கக் கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
|
![]() ![]() ![]() ![]() |
0 Comments