Advertisement

Responsive Advertisement

மகிந்தவின் வாழ்நாள் குடியுரிமையை பறிக்க பரிந்துரை!

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமைகளை நீக்குவது தொடர்பான பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
காலி -மொரவக்க நகரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ' குற்றம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதன்படி அந்த குற்றவாளிகள் தொடர்பாக கட்சி செயற்பட வேண்டும். அந்த அறிக்கையில் காணப்படும் பரிந்துரையில் ஒன்றாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சிவில் உரிமைகளை 7 வருடங்கள் அல்ல வாழ்நாள் முழுவதும் நீக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments