Advertisement

Responsive Advertisement

காத்தான்குடியில் தேர்தல் காரியாலயம் தீக்கிரை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்காகப் போட்டியிடும் ரீ.எல்.ஜவ்பர்கானின் தேர்தல் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம்  சனிக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி மீராபள்ளி வட்டாரத்தில் அமைந்திருந்த குறித்த வேட்பாளரின் அலுவலகமே இனந்தெரியாதோரால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments