Advertisement

Responsive Advertisement

செல்ஃபி எடுத்த வெளிநாட்டு யுவதிகள் படுகாயம்

திருகோணமலை, உட்துறைமுக வீதியில் மோட்டார்  சைக்கிளில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, நேற்று படுகாயமடைந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்வாறு காயமடைந்தவர்கள், அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 27, 28 வயது பல்கலைக்கழக யுவதிகள் எனவும் அவர்கள் இருவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கல்வி தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, திருகோணமலை வந்த மேற்படி யுவதிகள், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அலைபேசியில் செல்ஃபி எடுத்த வேளை, முன்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் துறைமுக பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments