Advertisement

Responsive Advertisement

ரஸ்யா போன்று சீனாவும் அமெரிக்காவிற்கு ஆபத்தானது- சிஜஏ தலைவர் எச்சரிக்கை

ரஸ்யா போன்று சீனாவும் அமெரிக்காவிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என சிஐஏயின் தலைவர் மைக்பொம்பியோ பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் இரகசிய நடவடிக்கைகள் போன்று மேற்குலகில் தனது செல்வாக்கை விஸ்தரிப்பதற்காக சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் ஆபத்தானவையாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளாhர்.
ரஸ்யாவின் நடவடிக்கைகளை விட பாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் சீனாவிடம் உள்ளன என தெரிவித்துள்ள அவர் அமெரிக்காவின் வர்த்தக தகவல்களை திருடுவதற்கு சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளிற்குள் ஊருடுவுவதற்காக அது மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் உதாரணமாக காட்டியுள்ளார்.
ரஸ்யாவை விட சீனாவிடம் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பலமும் வாய்ப்பும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலகின் மீது அழுத்தங்களை திணிப்பதற்கான சீனாவின் முயற்சிகளை மேற்குலம் கூட்டாக எதிர்கொள்ளவேண்டும் என சிஐஏயின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments