சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு ( FCDO ) ஒழுங்கு செய்திருந்த பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

Saturday, March 31, 2018

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.வை.அமீர்)
சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு ( FCDO ) ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபைத் தேர்தலிலும் காரைதீவு பிரதேச சபைத் தேர்தலிலும்  சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் தோடம்பழச்சின்னத்தில் சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களையும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா அவர்களையும் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை முன்னிறுத்தி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாய்ந்தமருது – மாளிகைக்காடு மண்ணிற்கு பெருமை சேர்த்தமையை பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும்  நிகழ்வு இன்று ( 31 ) சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ட்ரோரண்டில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.அப்துல் சமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



READ MORE | comments

1 ஆண்டு தடைக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஆடமாட்டேன் என்று வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். #Warner

1 ஆண்டு தடைக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஆடமாட்டேன் என்று வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். #Warner

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி சிக்கியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இது மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்ததாக அந்நாட்டு அரசு கருதியது.

இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

பந்தை சேதப்படுத்தி நேர்மையாற்ற செயலில் ஈடுபட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை ஏமாற்றிய ஸ்டீவன்சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இருவரது கேப்டன், துணை கேப்டன் பதவி ஏற்கனவே பறிக்கப்பட்டு விட்டது. பந்தை சேதப்படுத்திய பேன்கிராப்டுக்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்ப உத்தரவிட்ட 3 பேரும் ஆஸ்திரேலியா திரும்பினர்.

“பெரிய தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சுமித் கண்ணீர் விட்டு கதறினார். வார்னர் ஏற்கனவே டுவிட்டில் மன்னிப்பு கேட்டு இருந்தார்.


இந்த நிலையில் வார்னர் இன்று அளித்த பேட்டியின் போது கண்ணீர் மல்க தனது செயலுக்கு வருத்தப்பட்டார். இது தொடர்பாக சிட்னியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

ஆஸ்திரேலியாவை மோசமான முறையில் கீழே விழ வைத்துவிட்டேன். ஒருநாள் உங்களிடம் மீண்டும் நம்பிக்கையையும், மதிப்பையையும் பெறுவேன் என்று நம்புகிறேன். எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன்.

நான் மீண்டும் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஆனால் அவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் ஒருபோதும் நடக்காது என்பதை உறுதி அளிக்கிறேன். நான் ராஜினாமா செய்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட மாட்டேன். நான் நேசித்த எனது அணியுடன் ஆடப் போவதில்லை என்பதை நினைத்தால் இதயம் வலிகிறது.

தென்ஆப்பிரிக்காவில் நடந்ததற்கு நான் தான் முழுக்காரணம். அது மன்னிக்க முடியாத குற்றம். எனக்கான மன்னிப்பை பெற நீண்ட காலம் ஆகும். எனது அணியினர் தென்ஆப்பிரிக்காவில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் இங்கு இருப்பது மனதுக்கு வலியை ஏற்படுத்தியது. ஆஸ்தரேலிய மக்களிடம் எனது குடும்பத்தினருடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் தவறு செய்த பிறகு கண்ணீர்விட்டு கதறுவது காலம் காலமாக இருந்து வரும் முறையாகும். குரோஞ்சி, கபில்தேவ், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்கள்.


READ MORE | comments

புது வருடம் பிறக்கும் நேரம் வெளியானது

இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விளம்பி தமிழ்ப் புதுவருடம் சித்திரை 1ம் திகதி (14.04.2018) சனிக்கிழமை, அபரபக்க திரயோதசி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதலாம் பாதத்தில், மாகேந்திர நாம யோகத்தில், வணிசக் கரணத்தில் காலை 07.00 மணிக்கு மேட லக்கினத்தில், சிங்க நவாம்சத்தில், சனி காலவோரையில் பிறக்கிறது.
விஷேட புண்ணிய காலம் - 14-04-2018 அதிகாலை 3-00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணி வரை










                                 


READ MORE | comments

ஆர்ப்பாட்டம் செய்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கி பிரயோகம் – 7 பேர் பலி 500பேர் படுகாயம்


காஸா பள்ளத்தாக்கு பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் துணை மருத்துவபிரிவினர் இதனை உறுதிசெய்துள்ளனர் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 வயது இளைஞனும் உள்ளதாக தெரிவித்துள்ள துணைமருத்துவபிரிவினர் 500 பேர் வரை காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கண்ணீர்புகைபிரயோகத்தையும் அவர்கள் மேற்கொண்டதாகவும் பாலஸ்தீனத்தின் துணைமருத்துவபிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1976 ம் ஆண்டு இஸ்ரேலிய படையினர் நிலங்களை ஆக்கிரமித்ததை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஆறு பேர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து வருடம் தோறும் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இவ்வருடம் பாலஸ்தீனியர்கள் ஈடுபட்டவேளையே இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டவேளை தமது கிராமங்களில் இருந்து தப்பியோடியவர்கள் தங்கள் பகுதிக்கு மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காஸா எல்லையில் ஆறு ஐந்து முகாம்களை அமைத்து பாலஸ்தீனியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சுமார் 17,000 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா நிகழ்வு


கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா நேற்று  வெள்ளிக் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது.

அதிகாலை 4.30 மணிக்கு அபிசேகத்துடன் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு எம் பெருமான் தேரில் எழுந்தருளி தேர்பவனி ஆரம்பமானது.

கௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப் பெருமான் ஒரு தேரிலும், விநாயகப் பெருமான் மற்றுமொரு தேரிலும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஒரு தேரிலுமாக மூன்று தேர்களில் இறைவன் பவனி வருகின்ற திரு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றன.

காவடியாட்டம் ,கரகாட்டம் நாதஸ்வர தவில் முழங்க பறை மேழ முழக்கத்துடன் ஆண் பெண் வேறுபாடின்றி பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இத் தேர் திரு விழா கல்முனை பிரதான வீதி ஊடாக வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது.

இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய கிரியைகளைத் தொடந்து திரு விழாக்கள் ஆலய வழிபாடுகள் மற்றும் அன்னதானம் வழங்கல் இடம் பெற்று 11 ஆம் நாளான நேற்று  (30) இத் தேர் திரு விழா இடம் பெற்றன. இன்று  12 ஆம் நாளான இறுதி நிகழ்வாக தீர்தேற்சவம் நடை பெறும்.

சிவ பிரம்ம ஸ்ரீ சிவகுகக் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் இடம் பெற்றன.


















READ MORE | comments

இலங்கை குறித்து கூகுள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

உலகில் அதிகமான ஆபாசப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் கணினி அறிவு நூற்றுக்கு 38 வீதம் காணப்படுகின்றது. அதில் நூற்றுக்கு 89 வீதமானவர்கள் ஆண்கள். இலங்கை தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இணையத்தளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும், சைபர் தாக்குதல்கள், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

‘என்னை மன்னித்து விடுங்கள்’ - கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்

Friday, March 30, 2018

பால் டேம்பரிங் விவகாரத்தில் தவறிழைத்ததற்காக 12 மாதங்கள் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பி செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.
“என் அனைத்து அணி சகாக்களும் உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், என்னால் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அனைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.
கேப்டவுனில் நடந்த விஷயத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். முடிவெடுப்பதில் பெரிய தவறிழைத்து விட்டேன். அதன் விளைவுகளை இப்போது புரிந்து கொள்கிறேன்.
தலைமைத்துவத்தின் தோல்வி, என் தலைமையின் தோல்வி. இதனால் ஏற்பட்ட சேதத்துக்கு என்னால் முடிந்த வகையில் ஈடு கட்டுவேன்.
இதனால் ஏதாவது நன்மை உண்டென்றால் அது அடுத்தவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பாடம்தான். மாற்றத்துக்கான காரணியாக நான் விளங்க முடியும் என்று நம்புகிறேன்.

என்னுடைய தாய், தந்தையரின் நிலையை நினைத்தால் எனக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது.
நல்லவர்கள் தவறு செய்வார்கள், நடந்ததை அனுமதித்ததன் மூலம் நான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் முடிவில் மிகப்பெரிய பிழையைச் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்.
எனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்து விட்டது, இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

ஆஸ்திரேலியா, அதன் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நான் கொடுத்த வலிக்காக மிகவும் வருந்துகிறேன், மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காலத்தில் இழந்த மதிப்பை மீட்டெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, காலப்போக்கில் மக்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு மனம் உடைந்த ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
READ MORE | comments

மட்டக்களப்பின் இளைஞர்களின் முயற்சியினால் ஆனந்தசுதாகரனுக்கு தீர்வு

மட்டக்களப்பு இளைஞர்களின் முயற்சியின் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கையினை தெரிவித்ததுடன் கிழக்கில் பெறப்பட்ட கையெழுத்தும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி முதன்முறையாக மட்டக்களப்பு இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான கருணைமனுவுக்கான கையெழுத்துப்பெறும் போராட்டம் கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் பெறப்பட்ட 58ஆயிரம் கையொப்பம் அடங்கிய மனு இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரும் மற்றும் மட்டக்களப்பில் இருந்து சென்ற இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த அரசியல் கைதியின் விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கையெடுப்பதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பு மட்டக்களப்பு இளைஞர்கள் மேற்கொண்ட முழு முயற்சி காரணமாகவே நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

இரண்டு கால்களுடன் பிறந்த பசுக்கன்று!

முல்லைத்தீவில் இரண்டு கால்களுடன் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்பு -சுதந்திரபுரம் பகுதியிலேயே இந்தக் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் தனியே இரண்டு கால்களுடன் மட்டும் குறித்த பசுக் கன்று பிறந்துள்ளது.
இதனால் பசுக் கன்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளது. எழுந்து நின்று உணவு அருந்த முடியாமல் தவிப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதிசயிக்கும் வகையில் பிறந்த பசுக் கன்றை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பில் முதன் முறையாக இயந்திரம் மூலம் மீள நெல் நடுகை திட்டம்



மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள் நெல் நடுகை திட்டத்தினை விவசாய திணைக்களம் அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் மண்டபத்தடி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக இயந்திரம் மூலம் மீள நெல் நடுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திர நெல் விதைப்பு மூலம் அதிகளவான விளைச்சலை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன் சேதன பசளைகளை பயன்படுத்துவதன் அளவும் குறைவாக இருப்பதன் காரணமாக செலவும் அதிகளவில் மீதப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் விவசாய திணைக்கள வழிகாட்டல் உத்தியோகத்தர் கே.ஜெயக்காந்தன், விவசாய போதனாசிரியர்களான ஏ.தினேஸ்காந், எஸ்.ஞானப்பிரகாசம், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


இதன்போது கருத்து தெரிவித்த விவசாய போதனாசிரியர் ஏ.தினேஸ்காந்த்,
வழமையாக ஏக்கருக்கு 30 தொடக்கம் 35வரையான மூடை நெல்லே விதைப்பு மூலம் பெற்றுக்கொடுப்பதாகவும், இந்த இயந்திரத்தின் மூலம் விதைப்பதன் காரணமாக 40 தொடக்கம் 45மூடை நெல் அறுவடையினைப்பெற்றுக் கொள்ளமுடியும்.
இயந்திரத்தின் மூலம் வரைசாயாக நெல் நாற்றுகளை நடுவதன் மூலம் களைக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் நெல் பயிர் தொடர்பான நோய்த்தாக்கமும் குறைவானதாகவே இருக்கும் குறிப்பிட்டுள்ளார்.








READ MORE | comments

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் விபத்து ஒருவர் படுகாயம்


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை பகுதியிலிருந்து லொறி ஒன்றும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிரே வந்துள்ளதுடன், இரண்டு வாகனங்களுக்கிடையில் திடீரென மாடு ஒன்று குறுக்கிட்டு சென்றதினால் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மல்வத்தையைச் சேர்ந்த 17 வயதுடைய ரதன் ஜனோஜித் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் லெறியின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதாகவும், வாகனங்களுக்கிடையில் குறுக்கிட்டு சென்ற மாடும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்ட நிலையில் இளைஞர்கள் போக்குவரத்தினை சீர் செய்துள்ளனர்.


READ MORE | comments

கல்முனை வலயத்தில் 103 மாணவர்களுக்கு 9ஏ தர சித்தி


கல்முனை வலயத்தில் 103 மாணவர்களுக்கு 9 ஏ தர சித்தி கிடைத்துள்ளது. குறிப்பாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் அதிகமான மாணவர்கள் ஏ தர சித்தி பெற்றுள்ளார்கள்.
கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது. இதில் கல்முனை கல்வி வலயத்தில் 103 மாணவர்கள் சகல பாடத்திலிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளார்கள்.
கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 40 மாணவர்களும், கல்முனை தமிழ் கோட்டத்தில் 31மாணவர்களும், காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12மாணவர்களும், சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ தர சித்தி பெற்றுள்ளனர்.
கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர்கல்லூரியில் 25 மாணவர்களும் 9ஏ தர சித்தி பெற்றுள்ளனர் .
கல்முனை வலயத்தில் அதிகமான மாணவர்கள் 9 ஏ தர சித்திகளைப் பெற்ற பாடசாலையாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை திகழ்கிறது.
கல்முனை பற்றிமாவில் 26 மாணவர் 9ஏ தர சித்திகளையும், 20 மாணவர் 8ஏ, பி தர சித்திகளையும் பெற்றுள்ளதுடன், பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE | comments

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 99வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும்

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில்  99வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்வானது 03.04.2018 அன்று மு.ப. 7.30 மணிக்கு  மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

READ MORE | comments

படையினர் மீது காரை மோத முயன்ற இருவர் கைது – பிரான்சில் சம்பவம்


பிரான்சில் படையினரை இலக்குவைத்து வாகனத்தை செலுத்திய இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பிரான்சின் அல்ப்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அல்ப்ஸ் பகுதியில் உள்ள முகாமொன்றிற்கு வெளியே உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த படையினர் மீது காரை செலுத்தி தாக்குதலை மேற்கொள்ள முயன்றவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காரைச்செலுத்தியவரை தேடி கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் காரில் அவ்வேளையில் காணப்பட்ட பெண் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட பெண்ணே வாகனத்தின் உரிமையாளராகயிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உதைபந்தாட்டப்போட்டியில் கலந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த படையினர் மீதே சந்தேகநபர்கள் காரை செலுத்த முயன்றுள்ளனர்.
கார் தங்களை நோக்கி வருவதை அவதானித்த படையினர் வேகமாக செயற்பட்டு தப்பித்துக்கொண்டனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அந்த பகுதியை சுற்றிவளைத்த படையினர் வாகனச்சாரதியையும் வாகனத்திற்குள் இருந்த நபரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

அமெரிக்காவிடமிருந்து மீண்டும் இலங்கைக்கு GSP வரிச் சலுகை


இலங்கைக்கு ஜிஎஸ்பி சலுகையை 2020 ஆம் ஆண்டு வரை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதகரம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும். இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இச்சலுகை அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஜிஎஸ்பி சலுகை கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)
READ MORE | comments

பகிரங்க மன்னிப்பு கோரினார் வோர்னர்">


கிரிக்கெட் விளையாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பந்தை சேதமாக்குவதற்கான முயற்சிகளின் முக்கிய சூத்திரதாரி டேவிட்வோர்னரே என்பதை உறுதிசெய்து அவரிற்கு 12 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே வோர்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கிரிக்கெட்டிற்கும் இரசிகர்களிற்கும் ஏற்படுத்திய வேதனைக்கு நான் மன்னிப்பு கோருகின்றேன் என வோர்னர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக கிரிக்கெட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள வோர்னர் இதில் எனது பங்கிற்காக நான் மன்னிப்பு கோருகின்றேன் எனது தவறை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டிற்கும் இரசிகர்களிற்கும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை நான் உணர்ந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ள வோர்னர் நாங்கள் அனைவரும நேசிக்கும் நான் சிறிய வயதிலிருந்து நேசிக்கும் கிரிக்கெட்டிற்கு இதன் காரணமாக களங்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்
READ MORE | comments

பால் மா , எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது


பால்மா மற்றும் எரிவாயு விலைகளை அதிகரிக் இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பால்மாவின் விலையை 100 ரூபாவாலும், எரிவாயு விலையை 275 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு உரிய நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. எனினும், இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தபோது, இந்தப் பொருட்களின் விலை மாற்றங்கள் பண்டிகைக் காலத்தில் மாற மாட்டாது என தெரிவித்தார்.

கூட்டுறவு மொத்த விற்பனவு ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.எச்.எம்.பாராஸ் தொவிக்கையில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க சதொச தயாராக உள்ளதெனக் குறிப்பிட்டார். நாடெங்கிலும் உள்ள 400 கிளைகளுக்கு அப்பால், நடமாடும் சேவைகள் ஊடாகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யப்போவதாக இந்த ஊடக மாநாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த டபிள்யு.எச்.டீ.பிரியதர்ஷனவும் உரையாற்றினார். போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் இருப்பதாக அவர் கூறினார்.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அலுவல்கள் சபை சுற்றிவளைப்புக்களை விரிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் மாதத்தில் இதுவரை 17 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். -(3)
READ MORE | comments

வின்சன்ட் பாடசாலையில் 42 பேர் 9A தரச் சித்தி பெற்று மாவட்டத்தில் வரலாற்று சாதனை

Thursday, March 29, 2018


(க.விஜயரெத்தினம்)  கடந்த வருடம் (2017) நடைபெற்ற க.பொ.சாதாரணப் பரீட்டையில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் தேசிய பாடசாலையில் 42பேர் 9A சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில்  முதற்தடவையாக அதிகூடியவர்கள் சித்தியடைந்து,வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக வின்சன்ட் உயர்தரப் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி.கரணியா சுபாகரன் தெரிவித்தார்.



அவர்மேலும் தெரிவிக்கையில்,பரீட்சைக்கு தோற்றியவர்களில் 99.3 வீதமானோர் உயர்தரம் படிக்க தகுதிபெற்றுள்ளார்கள்

.42பேர்(9A),

21பேர் 8ABயும்,

5பேர்7A,2B

சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.



இதேவேளை மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் 25பேர் 9Aகளையும்,13பேர் 8A,B களையும்,5பேர் 7Aகளையும்,7பேர் 6A களையும் பெற்று உயர்தரம் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக அதிபர் பயஸ் ஆனந்தராசா தெரிவித்தார்.


மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் 19 பேர் 9A களையும்,21 பேர் 8A,B களையும் பெற்றுள்ளதாக அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தெரிவித்தார்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 8பேர் 9Aகளையும்பெற்றுள்ளார்கள்.
READ MORE | comments

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு 9 A தரச் சித்திகள்


க.பொ.சாதாரணப் பரீட்டையில்  மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில்

25பேர் -  9A ,
13பேர்  - 8A,B  ,
5பேர் 7A,7பேர் 6A சித்திகளையும்  பெற்றுள்ளதாக அதிபர் பயஸ் ஆனந்தராசா தெரிவித்தார்.


மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் 
19 பேர் 9A களையும்,
21 பேர் 8A,B களையும் பெற்றுள்ளதாக அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 8பேர் 9Aகளையும்பெற்றுள்ளார்கள்.
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு - 9A ,

Rating: 4.5
Diposkan Oleh:
Battinews batticaloa
READ MORE | comments

கல்முனை பற்றிமாவில் 26மாணவர் 9A சித்திகள் பெற்றுச் சாதனை !


 
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இம்முறை க.பொத. சா.த பரீட்சையில் 26மாணவர்கள் 9ஏ சித்திகள் பெற்றுச்சாதனை படைத்துள்ளனர் என்று அதிபர் அருட்சகோ. செபமாலை சந்தியாகு தெரிவித்தார்.



அங்கு மேலும் 20  மாணவர்கள் 8A,Bபி சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் சித்திபெற்றுள்ளனரென்று மேலும் அவர் தெரிவித்தார்.



இது வரலாற்றில் சிறப்பாக பெறுபேறு என்றும் இதற்காக உழைத்த ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கல்விஅதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகூறுவதாக அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

2017ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் 11 பேர் 9A தரச் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை....

இன்று வெளியான க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரை கிடைத்த தகவலின் படி   மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை  களுவாஞ்சிகுடி மாணவர்கள் 11 பேர் 9A சித்திகள் பெற்றுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
READ MORE | comments

2017ம் ஆண்டுக்கான க.பொ.த. (சா.த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.



2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
www.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன. கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பரீட்சைக்கு தோற்றியிருந்த 969 பேருக்கு பெறுபேறுகள் வெளியிடப்படமாட்டா என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் அகில் இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்



2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கம்பஹா - ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி - மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி - மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை - சுஜாதா வித்தியாலயத்தின் ஆர். லக்பிரியா, இரத்தினபுரி - சீவலி மகாவித்தியாலயத்தின் கே. பிரதீபத் ஆகியோர் முதலிடங்களை பெற்றுள்ளனர்.
கொழும்பு - தேவி பாலிகா வித்தியாலயத்தின் என்.ஹேரத், கொழும்பு - சீ.எம்.எஸ் பாலிகா வித்தியாலயத்தின் ஏ. பெர்ணான்டோ, நுகோகொட - சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தின் ஆர். குமாரசிங்க ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்

Wednesday, March 28, 2018


சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.தாய்லாந்தின் பேங்கொக் நகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் போட்டியும் கண்காட்சியாகவும் இந்த பிரமாண்ட உலக நிகழ்வு நடைபெற்றது.இங்கு வினோஜ்குமார் கண்டுபிடித்த “கணித உதவியாளன்” எனும் கணித கருவி கணித பாடத்தில் வரும் நிறுவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்கக்கூடிய உபகரணம் வந்தவர் கவனத்தை ஈர்த்தது. இதன் முக்கிய அம்சம் அனைத்து மாணவர்களும் பிறரின் உதவியின்றி இலகுவாக கற்கமுடியும் என்பதோடு இது செலவு மிகக்குறைந்த கண்டுபிடிப்பாகும். மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளித்தொழினுட்ப மூலம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினால் இலகுவாக கற்கக்கூடியதாக இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.சர்வதேச விருதை பெற்ற இக்கண்டுபிடிப்பு 2017 ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நடாத்திய “ஆயிரம் படைப்புக்கள்” கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதுபற்றி வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில் “நான் தரம் 6 யில் இருந்தே கண்டுபிடிப்புதுறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது என்றும் தின ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் ஒன்றில் சூழலில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை குறிப்பு எடுத்து அதனை பரிசோதனை ரீதியாக ஓய்வு நேரங்களில் அதனை செய்து பார்ப்பேன் என்று தெரிவிக்கிறார். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் விரும்பிப் படிக்கும் ஆர்வத்தால் இப்படியான புதிய கண்டுபிடிப்புக்கள் இலகுவில் சாத்தியமாகின்ற என்று குறிப்பிடுகிறார்.தனது பாடசாலைகளான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கும், சம்மாந்துறை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் மற்றும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து பெருமை கொள்கின்றார்.”இவரின் இக்கண்டுபிடிப்பு LK/P/19721 எனும் இலக்கத்தின் கீழ் ஆக்கவுரிமை பத்திரத்தையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும். அது மட்டுமல்லூமலு இதுவரை 81 கண்டுபிடிப்புக்களை செய்த இவர் 3 சர்வதேச விருதுகளையும் 31 தேசிய விருதுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.காலக்கிரமத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்புகள் பற்றியும் வெற்றி நடை இணையம் அவரின் துறைசார் ஆளுமை பதிவாக வாசகர்களுக்கு எடுத்துக்கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு கிரான்குளத்தில் வேல்நாதம் இறுவட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.


(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு கிரான்குளத்தில் வீற்றிருந்து அருட்கடாச்சாம் வழங்கிக்கொண்டிருக்கும் திருமுருகன் ஆலயம் மீது புகழ்பாடப்பெற்ற "வேல்நாதம்" இறுவட்டு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(25.3.2018) திருமுருகன் ஆலையத்தலைவர் அ.தங்கவேல் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்றது.

ஊர்க்கவிஞன் ஜீ.எழில்வண்ணன் அவர்களால் எழுதப்பட்டு ,பிரசித்த நொத்தாரிசும் சமாதான நீதவானுமாகிய பெ.சிவசுந்தரம் அவர்களால் தயாரிக்கப்பட்ட வேல்நாதம் இறுவட்டை திருமுருகன் ஆலய திருப்பணிச்சபையால் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சிதம்பரப்பிள்ளை-அமலநாதன் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச்செயலாளர் உ.சிவராசா,போரதீவுப்பற்று பிரதேச செயலத்தின் உதவிப்பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன்,கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி,ஆரையம்பதி பிரதேச சபைச்செயலாளர் ந.கிருஸ்ணப்பிள்ளை உட்பட கிராமசேவையாளர்கள்,ஆலயத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள்,பக்த அடியார்கள்,ஆலய நிருவாகத்தினர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது வேல்நாதம் இறுவெட்டை ஆலத்தில் நடைபெற்ற பூசை வழிபாட்டில் வைத்து முருகனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் பூசை வழிபாடு,மங்கல விளக்கேற்றல்,ஆசியுரை,தலைமையுரை,அறிமுகவுரை,வெளியீட்டு உரை,ஆன்மீக உரை,இறுவட்டு வெளியீடு,கௌரவிப்பு நிகழ்வு,நயவுரை,அதிதிகள் உரை,ஏற்புரை என்பன இடம்பெற்றுள்ளது.

இறுவெட்டு நிகழ்வின் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் அவர்கள் இசையோடு வேல்நாதம் கலந்து உரையாற்றிது எல்லோரையும் மெச்சத்தக்க செய்து இசையால் ஈர்க்கப்பட்டமை விஷேடமாக குறிப்பிடலாம்.பாடலாசிரியரும்,ஊர்க்கவிஞனுமாகிய ஜீ.எழில்வண்ணனும்,தயாரிப்பாளரும் நொத்தாரிசுமாகிய பெ.சிவசுந்தரம் ஆகியோர்களுக்கு ஊர்மக்களாலும்,அதிதிகளினாலும் பொன்னாடை போர்த்தப்பட்டு ,ஞாபகார்த்த சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

















READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |