Home » » கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா நிகழ்வு

கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா நிகழ்வு


கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா நேற்று  வெள்ளிக் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது.

அதிகாலை 4.30 மணிக்கு அபிசேகத்துடன் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு எம் பெருமான் தேரில் எழுந்தருளி தேர்பவனி ஆரம்பமானது.

கௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப் பெருமான் ஒரு தேரிலும், விநாயகப் பெருமான் மற்றுமொரு தேரிலும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஒரு தேரிலுமாக மூன்று தேர்களில் இறைவன் பவனி வருகின்ற திரு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றன.

காவடியாட்டம் ,கரகாட்டம் நாதஸ்வர தவில் முழங்க பறை மேழ முழக்கத்துடன் ஆண் பெண் வேறுபாடின்றி பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இத் தேர் திரு விழா கல்முனை பிரதான வீதி ஊடாக வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது.

இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய கிரியைகளைத் தொடந்து திரு விழாக்கள் ஆலய வழிபாடுகள் மற்றும் அன்னதானம் வழங்கல் இடம் பெற்று 11 ஆம் நாளான நேற்று  (30) இத் தேர் திரு விழா இடம் பெற்றன. இன்று  12 ஆம் நாளான இறுதி நிகழ்வாக தீர்தேற்சவம் நடை பெறும்.

சிவ பிரம்ம ஸ்ரீ சிவகுகக் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் இடம் பெற்றன.


















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |