பாலஸ்தீனத்தின் துணை மருத்துவபிரிவினர் இதனை உறுதிசெய்துள்ளனர் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 வயது இளைஞனும் உள்ளதாக தெரிவித்துள்ள துணைமருத்துவபிரிவினர் 500 பேர் வரை காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கண்ணீர்புகைபிரயோகத்தையும் அவர்கள் மேற்கொண்டதாகவும் பாலஸ்தீனத்தின் துணைமருத்துவபிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1976 ம் ஆண்டு இஸ்ரேலிய படையினர் நிலங்களை ஆக்கிரமித்ததை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஆறு பேர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து வருடம் தோறும் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இவ்வருடம் பாலஸ்தீனியர்கள் ஈடுபட்டவேளையே இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டவேளை தமது கிராமங்களில் இருந்து தப்பியோடியவர்கள் தங்கள் பகுதிக்கு மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
காஸா எல்லையில் ஆறு ஐந்து முகாம்களை அமைத்து பாலஸ்தீனியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சுமார் 17,000 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.
0 Comments