Home » » 1 ஆண்டு தடைக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஆடமாட்டேன் என்று வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். #Warner

1 ஆண்டு தடைக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஆடமாட்டேன் என்று வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். #Warner

1 ஆண்டு தடைக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஆடமாட்டேன் என்று வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். #Warner

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி சிக்கியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இது மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்ததாக அந்நாட்டு அரசு கருதியது.

இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

பந்தை சேதப்படுத்தி நேர்மையாற்ற செயலில் ஈடுபட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை ஏமாற்றிய ஸ்டீவன்சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இருவரது கேப்டன், துணை கேப்டன் பதவி ஏற்கனவே பறிக்கப்பட்டு விட்டது. பந்தை சேதப்படுத்திய பேன்கிராப்டுக்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்ப உத்தரவிட்ட 3 பேரும் ஆஸ்திரேலியா திரும்பினர்.

“பெரிய தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சுமித் கண்ணீர் விட்டு கதறினார். வார்னர் ஏற்கனவே டுவிட்டில் மன்னிப்பு கேட்டு இருந்தார்.


இந்த நிலையில் வார்னர் இன்று அளித்த பேட்டியின் போது கண்ணீர் மல்க தனது செயலுக்கு வருத்தப்பட்டார். இது தொடர்பாக சிட்னியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

ஆஸ்திரேலியாவை மோசமான முறையில் கீழே விழ வைத்துவிட்டேன். ஒருநாள் உங்களிடம் மீண்டும் நம்பிக்கையையும், மதிப்பையையும் பெறுவேன் என்று நம்புகிறேன். எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன்.

நான் மீண்டும் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஆனால் அவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் ஒருபோதும் நடக்காது என்பதை உறுதி அளிக்கிறேன். நான் ராஜினாமா செய்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட மாட்டேன். நான் நேசித்த எனது அணியுடன் ஆடப் போவதில்லை என்பதை நினைத்தால் இதயம் வலிகிறது.

தென்ஆப்பிரிக்காவில் நடந்ததற்கு நான் தான் முழுக்காரணம். அது மன்னிக்க முடியாத குற்றம். எனக்கான மன்னிப்பை பெற நீண்ட காலம் ஆகும். எனது அணியினர் தென்ஆப்பிரிக்காவில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் இங்கு இருப்பது மனதுக்கு வலியை ஏற்படுத்தியது. ஆஸ்தரேலிய மக்களிடம் எனது குடும்பத்தினருடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் தவறு செய்த பிறகு கண்ணீர்விட்டு கதறுவது காலம் காலமாக இருந்து வரும் முறையாகும். குரோஞ்சி, கபில்தேவ், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்கள்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |