சடுதியாக உயர்ந்தது கொரோனா தொற்று

Monday, January 31, 2022

 


நாட்டில் இன்றைய தினமும் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,082 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 6 பேர் வௌிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (30) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,441 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்று உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் இரண்டு பெண்களும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட அவசர அறிவுறுத்தல்..!



கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மண்டபங்களில், இலத்திரனியல் கடிகாரத்தை காட்சிப்படுத்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D தர்மசேன தெரிவிக்கின்றார்.

இதன்படி, பரீட்சை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு ஆசிரியர்கள், தமது கடிகாரத்தில், பரீட்சை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கடிகாரத்திலுள்ள நேரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், பரீட்சார்த்திகள், தமது பரீட்சை நிலைய கண்காணிப்பு ஆசிரியர்களின் ஊடாக, தமது கை கடிகாரத்தின் நேரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பரீட்சையின் போது, நேரம் வீணடிக்கப்பட்டதாக எவராலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, உயர்தர பரீட்சைகளுக்கு தேசிய அடையாளஅட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தேசிய அடையாளஅட்டை இல்லாத பட்சத்தில், தமது புகைப்படங்களை பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தி, ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அந்த உறுதிப்படுத்திய ஆவணங்களை தாம் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும் அவர் கூறுகின்றார்.

பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், அது குறித்து அறிந்துக்கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


1911

011 2784208 அல்லது 011 2 784 537


மேலும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் நேரடி தொலைபேசி இலக்கத்தையும் அவர் வழங்கியுள்ளார்.


பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் 

– 0714679679

READ MORE | comments

கோவிட் தொற்று காலப் பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கொளரவிக்கும் நிகழ்வு


 ( தாரிக் ஹஸன் )

"கோவிட் தொற்று காலப் பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கொளரவிக்கும் நிகழ்வு  காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி  காரியாரலயத்தில்  இடம் பெற்றது."

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்  தஸ்ஸீமா வசீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  கோவிட் தொற்று காலப் பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் அவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

READ MORE | comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான்கு பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு



( தாரிக்  ஹஸன்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
 மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை  ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவற்றின் படி, மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ  மற்றும் குடும்ப மருத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ நிபுணர் பி. குமரேந்திரன் சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகவும்,
வணிக முகாமைத்துவ பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.கெங்காதரன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும்,
 நிதி முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. லிங்கேசியா  நிதி முகாமைத்துவத்தில்  பேராசிரியராகவும்,  
விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர். ஶ்ரீகரன் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
READ MORE | comments (1)

கல்முனை ரினோன் விளையாட்டு கழக கிரிக்கெட் பயிற்றுவிப்பு நிலையத்திற்கு விளையாட்டு உபகணங்கள் வழங்கும் நிகழ்வு




( றம்ஸீன் முஹம்மட்)

கிரிக்கெட் துறையினை இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட  கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் அனுசரணையில் கல்முனையின் முன்னணி விளையாட்டுக் கழகமான கல்முனை ரினோன் விளையாட்டு கழகத்தின் ரினோன் விளையாட்டு கழக கிரிக்கெட்  பயிற்றுவிப்பு நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க கிரிக்கெட் விளையாட்டு உபகணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று  இடம்பெற்றது.

கல்முனை ரினோன்  கிரிக்கெட் விளையாட்டு கழக அகடமியின்  பணிப்பாளர் எம்.எப்.எம். அப்சல் ரிப்கியின் நெறிப்படுத்தலில் ,கல்முனை ரினோன் விளையாட்டு கழகத்தின் செயலாளர்  எஸ்.எச்.எம்.அஸ்மி அவர்களின் தலைமையில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக றிஸ்லி முஸ்தபா அவர்களும் கெளரவ அதிதியாக கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் ஏ.சிவநாதன், சிறப்பு அதிதியாக கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர்  எம்.ஐ.அப்துல் ரஸாக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

தேசிய ரீதியில் நடாத்தப்படும் "வனிதா அபிமான | ஆளுமைப் பெண்கள்" போட்டியில் மாகாண மட்டத்தில் இறக்காமத்திற்கு இரண்டு விருதுகள்




( றம்ஸீன் முஹம்மட்)

நாட்டிலுள்ள பெண் திறமையாளர்களை  இனம்கண்டு அவர்களை கௌரவப்படுத்தும்  தேசிய ரீதியான தளமான இலங்கை வனிதாபிமானவின் இரண்டாம் கட்டம் - 2021  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சகல துறைகளிலும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களை ஒவ்வொரு மாகாணமாக இனம் கண்டு தேசிய ரீதியான போட்டிக்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.
NDB மற்றும் News 1st இணைந்து நடத்திய  ஸ்ரீலங்கா வனிதாபிமான 2021 போட்டி நிகழ்ச்சியில் இறக்காமம் பிரதேசம் சார்பாக கலந்து கொண்ட இருவர் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் கணக்குப் (பிரிவு)  கவிதாயினி திருமதி பர்சானா றியாஸ்  கலைத்துறையில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டி உள்ளதோடு தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹிஜ்றா மகளீர் சங்க தலைவியும் பெண் செயற்பாட்டாளருமான திருமதி எஸ்.டி நஜீமியா தொழில் முனைவோர் மற்றும்  முயற்சியாண்மைத் துறையில் மாகாண மட்டத்தில் நான்காம்  இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
மனித வளங்கள், நிதி மேலாண்மை, விற்பனை மற்றும் ஊக்குவிப்பு, சுற்றுலா, கலை, விளையாட்டு, அரசு துறை  , தொழில் முனைவோர் மற்றும் முயற்சியாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்களிப்பு செய்யும்  தொழில்முறை தகுதிகளைக் கொண்ட பெண்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் வெற்றி, அதிக எண்ணிக்கையிலான சாதனையாளர்களை விரிவுபடுத்தவும் அரவணைக்கவும் வழி வகுத்துள்ளது.
READ MORE | comments

கோடிக்கணக்கான வெளிநாட்டு நாணயங்களை கடத்திய ஐவர் கைது

Sunday, January 30, 2022

 


இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டு நாணயங்களை கடத்தும் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, டுபாய் நோக்கி நேற்று (29) பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேகநபர்களின் பைகளில், மிக சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 25 மில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில், 95000 அமெரிக்க டொலர், 18000 யூரோ, 37000 சவூதி ரியால் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
READ MORE | comments

கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்டோருக்கான பாடசாலைக் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மட்/சிவாநந்த வித். தே.பா அணி 320 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!!


 Sri Lanka school cricket association Un 15 tournament..

2nd match....


Bt/Shivananda School    444/8 (50)

Nirugash 156

Guru 106

Thuwa 50

Vasutha 44


Bt/Pd/Kallar central college

124/10 (19)

BtShivananda vid n.s won 324 runs.

Overs.... 

Niruban 26/5 (5.2)

Thuwa 26/2 (4)

மேலும்....

கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்டோர் பாடசாலைக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின்  இன்றைய போட்டியில் ஆரையூர் மண்ணைச் சேர்ந்த சந்திரகுமார் குரு அவர்கள் கல்லாறு பாடசாலைக் கெதிரான போட்டியில் சதம் விளாசி (106) சாதனை படைத்தார் ....

குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் கடந்த போட்டியில் கிண்ணியாவுக்கெதிராக ஆட்டமிழக்காமல் 94* ஓட்டங்கள் பெற்றிருந்தார் ......

READ MORE | comments

நாட்டை முடக்குமாறு கோரிக்கை! !!!!

 


நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு திறந்திருக்கும் போதே, ​கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
READ MORE | comments

பல தசாப்தங்களாக கவனிப்பாரற்று இருந்த சம்மாந்துறை உள்ளக வீதிகள் சில 60 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பு !

 



(நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், ஐ.எல்.எம். நாஸிம்)

மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட புளியடி வீதி, கஞ்சர் வீதி, பண்டு வீதி ஆகிய வீதிகளை கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்து உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு  சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் அஸ்பர் உதுமாலெப்பையின் பங்கெடுப்புடன் இடம்பெற்றது.

சுமார் 60 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நடைபெற்ற இந்த அபிவிருத்திகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கே. கோவிந்தசாமி, சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், கிராம  நிலதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2.8 கிலோமீட்டர் நீளமுள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யவும் இந்த திட்டத்தை சம்மாந்துறை பிரதேசத்தில் செயல்படுத்த முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக அமைந்த அமைச்சர்கள் உட்பட அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக இங்கு பேசிய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான அஸ்பர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் கடந்த சுனாமி காலத்தில் பல ஊர்களுக்கே சோறு போட்ட சம்மாந்துறை மக்கள் அரிசிக்கும், பருப்புக்கு சில்லறை காசுகளுக்கும் தனது வாக்குகளை அளித்தமை வருத்தமளிக்கிறது. அரசுடன் இணைந்து சென்றே எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன். நாம் பலமிக்க பெரும்பான்மை சக்தி கொண்ட அரசை எதிர்த்து எதிராளிகளாக மாற முடியாது என்பதற்கு தேர்தல் காலங்களில் அரசை எதிர்த்து பேசியவர்கள் இன்று வென்றுகொண்டு அரசுடன் ஒட்டி உறவாடுவதை பார்த்தாலே நாம் அறிந்து கொள்ளலாம். நமது வாக்குகளை நாம் வீணடித்தமையால் இன்று அரசியல் அனாதையாக இருக்கிறோம். எனக்கு நம்பி வாக்களித்த மக்களுக்கு நான் என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டிருக்கிறேன். எந்நேரத்திலும் மரணத்தை சுமந்து கொண்டிருக்கும் நான் எனது சேவைகளை தேர்தலை இலக்காக கொண்டு செய்வதில்லை என்றார்.
READ MORE | comments

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் யானை வேலி பராமரிப்பு



(அஸ்ஹர் இப்றாஹிம்  )

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் யானை வேலி பராமரிப்பு  வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் பயிற்சி இன்று ( 31)  திங்கட் கிழமை  பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாறை உகன பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள், பாதுகாப்பு  மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இச் செயல் திட்டத்தின் கீழ் நாடு தளுவிய ரீதியில் 4000 பேருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
READ MORE | comments

மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதி அகலமாக்கப்பட வேண்டும்.



( அஸ்ஹர் இப்றாஹிம்)

மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை  வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள பாலம் மிகவும் ஒடுக்கமாக காணப்படுவதால் சிறிய வாகனங்களைத் தவிர லொறிகள் , பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையொன்று கடந்த பல வருடங்களாக நிலவுகின்றது.
இப்பாலத்தின் ஊடாக ,  வைத்தியசாலை வீதி  உப தபாலகம்,  சாய்ந்தமருது  றியாலுல் ஜன்னா வித்தியாலயம்,  தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா, சாய்ந்தமருது ஆயுர்வேத மருந்தகம் , பள்ளிவாசல் , சாய்ந்தமருது இராணுவ முகாம் போன்றவற்றிற்கு செல்ல வேண்டியுள்ளது.
தேர்தல் காலங்களில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கும் அரசியல் வாதிகள் இப் பாலத்தின் அபிவிருத்திபற்றி பேவாத மேடைகளே இல்லை. தேர்தல் முடிந்த கையோடு இப்பாலத்தின் கதையும் முடிவுறும்.. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்த்த்தின் போது இப்பாலத்தை சார்ந்த பிரதேசங்கள் பாரிய அழிவுக்கு உட்பட்டிருந்த்து.த்தனையோ தன்னார்வு நிறுவனங்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் மீளகட்டியெழுப்பும் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செனற போதிலும் இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எந்தவொரு அரசியல் வாதிகளின் கண்ணுக்கும் இது புலப்படவிவ்லை.
அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல் வேண்டும் என்பதே சாய்ந்தமருது   மக்களின் விருப்பமாகும்.
READ MORE | comments

உயர்தரப்பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்!

 


க.பொ.த உயர்தரப் பரீட்சையை பெப்ரவரி (07-02-2022) முதல் 2,439 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஓகஸ்ட் மாதம் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக6 மாதங்களுக்குப் பின்னர் பெப்ரவரி பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் பலரது கருத்துக்களைப் பெற்ற பின்னரே பரீட்சைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பரீட்சை நடாத்துவதற்காக பாடசாலைகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்த திகதியில் ஆரம்பமாகி முடிவடையும் எனவும் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.


இந்தமுறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை இல்லாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது

READ MORE | comments

மகாத்மா காந்தியின் சிரார்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

 


மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.


மட்டக்களப்பு காந்தி பூங்காவில்
அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவு தூபியில் இன்று (30) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும்
செலுத்தப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், வர்த்தக சங்க பிரிதிநிதிகள் உட்பட சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எல்.முஹம்மது மீராஸாஹிப் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து
மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஹரி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எல்.முஹம்மது மீராஸாஹிப் அவர்களின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணப் பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது தற்போதைய கொவிட் சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறைந்தளவிலானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





READ MORE | comments

” மருத்துவ பரிசோதனை முகாம் ”



( அஸ்ஹர் இப்றாஹிம்)

மாளிகைக்காடு ஸம் – ஸம் சனசமூன நிலையம் சாயந்தமருது பிரதேச வைத்தியசாலையுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ” மருத்துவ பரிசோதனை முகாம் ” மாளிகைக்காடு கடற்கரை வீதி, சனசமூக கட்டிடத்தில் அமைந்துள்ள  ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் நேற்று ( 29 ) இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற மேற்படி மருத்துவ பரிசோதனை முகாமில் இரத்த அழுத்தம் , இரத்த கொலஸ்ரோல் அளவு , இரத்த சீனி அளவு , சிநுநீரக செயற்பாட்டு பரிசோதனை , கண் பரிசோதனை உட்பட ஏனைய மருத்துவ பரிசோதனைகளும் இடம்பெற்றன.
இம் மருத்துவ முகாமில் வைத்தியர்கள் , தாதி உத்தியோஸ்தர்கள் , பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

அக்கரைப்பற்றில் மாபெரும் புகைப்படத் திருவிழா ஆரம்பம்



( றம்ஸீன் முஹம்மட்)

புகைப்படத் திரு விழா இன்று அக்கரைப்பற்று மாநகர சபையின்  ஹல்லாஜ் மண்டபத்தில்  ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
Club Photo Ceylonica    ஏற்பாட்டில் கிழக்கு  பிராந்திய புகைப்பட கலைஞர்களின் திறமைகளை போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் வாயிலாக வெளிக்கொணர்ந்து அவர்களைப் பாராட்டி கௌவித்து ஊக்குவிக்கும் வகையில் இக்கண்காட்சி  ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றது.
இத்  திருவிழாவில் சர்வதேச புகைப்படப் போட்டிகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண புகைப்படக் கலைஞர்களிடையே வெற்றி பெற்ற புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்கள், அக்கரைப்பற்று வரலாற்றுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்...
புகைப்படக் கலைஞரும் விழா ஏற்பாட்டாளருமான அப்துல் ஹமீட் தாஹிர் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் புகைப்படத்திரு விழா  இறுதி தினமான நாளை போட்டி  நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு  விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   
READ MORE | comments

உமா ஓயாவில் இடம்பெற்ற துயரம் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு



அட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாம்பிட்டிய தோட்ட முதலாம் பிரிவிலிருந்து (பெஸ்ட் டிவிசன்) கெரண்டியல்ல பகுதியில் ஓடும் உமாஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஐவர் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு  ஆற்றில் மூழ்கி   நேற்று  பிற்பகல் 2.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த பிரிவில் வசித்து கடந்த வருடம் இறந்த ஜெயராம் என்பவரது ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கடந்த 28ஆம் திகதி கலந்து கொண்ட உறவினர்களில் 11 பேர் சம்பவ தினம் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெரண்டியல்ல, உமாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர் இவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 25 வரைக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர்.

ஆற்றில் நீராடிவிட்டு 6 பேர் அக்கரைக்குச் சென்ற வேளையில் இளைஞர் ஒருவரும் 4 யுவதிகளும் ஆற்றிலிருந்த கற்பாறையொன்றில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் இளைஞர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக யுவதிகள் ஒவ்வொருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு ஆற்றில் இறங்கிய வேளையில் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் தோட்ட இளைஞர்களுடன் இணைந்து ஈடுபட்டு உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஜெயராம் காஞ்சனப்பரியா (வயது21), செல்வகுமார் பரிமளாதேவி (வயது19),  அட்டன்,  திம்புலப்பத்தனயைச் சேர்ந்த அடையப்பன் பவானி சந்திரா (வயது24), அட்டாம்பிட்டிய, முதலாம் பிரிவைச் சேர்ந்த வனராஜா டேவிட்குமார் (வயது 23) ஆகியோர் அடங்குவர். ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ள நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் சசிப்பிரியா (வயது20) என்ற யுவதியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலங்களை மீட்கும் பணிக்கு தியத்தலாவ இராணுவ முகாமைச் சேர்ந்த சுழியோடும் வீரர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது. உயிரிழந்த எஸ்.சசிப்பிரியா, எஸ்.பரிமளாதேவி (திரிஷா) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இச்சம்பவம் இப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணமல் போன யுவதியின் சடலத்தை மீட்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

READ MORE | comments

அமெரிக்காவில் வரலாறு காணாத அனர்த்தம்!!

 


அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவிவரும் பனிப்புயல் தாக்கம் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் அனர்த்தமானது வரலாற்றில் ஒன்றுமில்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அதிக பனிப் பொழிவு பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியு யோர்க், நியு ஜெசி, மேரிலான்ட், வெர்ஜினியா, ரோட் தீவு ஆகிய மாநிலங்களுக்கே அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடலை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், மாநிலங்களுக்கிடையிலான 5000 அமெரிக்க விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பொருத்தமான உயிர் காப்பு உடைகளை அணிந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

குடியிருப்பாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வீடுகளில் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளதுடன், 75 மில்லியன் மக்கள் இந்த அனர்த்த வலயத்தினுள் இருப்பதாக தெரிக்கப்படுகின்றது. 

READ MORE | comments

சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடைந்தது சிறிலங்கா அரசு?

 


தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ  (Basil Rajapaksha)தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அவர் இந்த நேர்காணலை வழங்கியுள்ளார். இலங்கைக்கு இவ்வருடம் 6.9 பில்லியன் டொலர் கடனைச் செலுத்துவது மிகவும் கடினமானது எனவும், மருந்துகள், மூலப்பொருட்கள், எரிபொருள் உட்பட அனைத்திற்கும் பணத்தைத் தேட வேண்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெறுவதற்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது

 


புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.


தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில், புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு, அதி சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
READ MORE | comments

திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் தேசிய பாடசாலை தினத்தில் வீதி ஓட்டம் ( மரதன் ) இடம்பெற்றது.



தாரிக் ஹஸன்)

 திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் தேசிய பாடசாலை தினமான  இன்று  வீதி ஓட்டம் மரதன் ) இடம்பெற்றது.

கனிஸ்டஇடைநிலைசிரேஸ்ட பிரிவாக மூன்று போட்டிகளிலும் 400க்கும் அதிகமான மாணவர்கள் பங்கு கொண்டனர்.


கல்லூரி நூற்றாண்டு ஞாபகார்த்தமாக 1997ம் வருடம் இப் போட்டி தேசிய பாடசாலை நாளாக இது ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

இன்றைய போட்டி 125வது வருட நிறைவு நிகழ்வாகவும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்..

READ MORE | comments

"நீதிக்கான அனுகல்" எனும் தொனிப்பொருளில் நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை


 ( அஸ்ஹர் இப்றாஹிம்)


"நீதிக்கான அனுகல்" எனும் தொனிப்பொருளில் நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் ஊடான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு அங்கமாக  கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு  மாவட்ட செயலகத்திலும் குறித்த நடமாடும் சேவையானது சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நடமாடும் சேவையினூடாக பொது மக்களைப் பாதிக்கும் சட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவூட்டுதல், நல்லிணக்கம் பற்றிய மக்களுக்கான தெளிவூட்டல், காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பான ஆலோசனை, பிறப்பு-திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளல், காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் சேவைகளை வழங்குதல் ஆகியவை சம்பந்தமான விடயங்கள்  முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில்  நீதியமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் மூலம் யுத்தத்தால்  பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டு கொடுப்பணவாக சுமார் 553 பயனாளிகளுக்கான  காசோலையும் இந்நிகழ்வின் போது  வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீதியமைச்சர் கௌரவ. அலி சப்ரி, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதி இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஜீவன்  தொண்டமான்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் , முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து நிதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன , தேசிய ஒருமைப்பாடு  நல்லிணக்கத்திற்கான பணிப்பாளர் நாயகம்,  இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. நஸீமா முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்  உள்ளிட்ட பயனாளிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

சலேன்ஸ் வின்ஸ் ( challenge wins) கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு.



 ( அஸ்ஹர் இப்றாஹிம்)

சலேன்ஸ் வின்ஸ்( challenge wins)  கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த ஆறாவது (06) தொகுதி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு சலேன்ஸ் வின்ஸ் ( challenge wins) கல்லூரியின் தவிசாளர் முஸ்தபா முபாறக் தலைமையில் அண்மையில் கல்லூரியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.
READ MORE | comments

கொவிட் 19 தடுப்பூசி முதலாவது ஆண்டு பூர்த்தியை நினைவு கூறுவதுடன் அதற்காகப் பாடுபட்ட அனைவரையும் வாழ்த்தும் நிகழ்வு



(றம்ஸீன் முஹம்மட்)

எமது நாட்டையும் சர்வதேசத்தையும் உலுக்கிய கொவிட் – 19 வைரசு தொற்று காரணமாக அத் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதார திணைக்களத்தால் கட்டம் கட்டமாக தடுப்புசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று 3வது தடுப்புசி வழங்கும் நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம்.

கொவிட் 19 தடுப்பூசி முதலாவது ஆண்டு பூர்த்தியை நினைவு கூறுவதுடன்  அதற்காகப் பாடுபட்ட அனைவரையும் வாழ்த்தும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சமய அனுஷ்டானத்துடனும் தேசிய  கீதத்துடனும் கொவிட் -19 தொற்று காரணமாக மரணித்தவர்களுக்காக  2 நிமிட மெளன அஞ்சலியுடனும் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வை தாதிய பரிபாலகர்  பீ.எம்.நஸீறுதீன் சிறப்பாக ஒருங்கிணைத்து நடாத்தியதுடன் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் , வைத்தியசாலை வைத்தியர்கள் , வைத்தியர்கள் தாதி உத்தியோகத்தர்கள் ,சுகாதார உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
READ MORE | comments

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நால்வர் பலி - ஒருவர் மாயம்*

Saturday, January 29, 2022




உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
READ MORE | comments

புதிய கொரோனா மாறுபாடு NeoCov:`பாதிக்கப்படும் 3 பேரில் ஒருவர் இறப்பார்` வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை



புதிய கொரோனா மாறுபாடு NeoCov:`பாதிக்கப்படும் 3 பேரில் ஒருவர் இறப்பார்` வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஸ்புட்னிக் அறிக்கையின்படி, நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று, நியோகோவி (NeoCoV) என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பற்றி தெரிவித்துள்ளது. இந்த தொற்று வகை, அதிக இறப்பு மற்றும் தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்த குழு எச்சரித்துள்ளது.

READ MORE | comments

கொரோனா அச்சுறுத்தல் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களுக்கு விடுமுறை!

 


கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை காரணமாக மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கு விடுமுறை வழங்குதவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களுக்குஇ சுகயீன விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.

கொவிட்- 19 பரவல் காரணமாக ஆசிரிய மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


ஆசிரிய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் விருப்பத்திற்கு அமைய மாணவர்கள் கல்லூரியில் இருந்து இன்றைய தினம் வெளியேற முடியும் என்றும் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம். ஜ. எம். நவாஸ் தெரிவித்தார்.

READ MORE | comments

மட்டு. மாமாங்கம் பகுதியில் வியாபார நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையானது!

 


மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தீப் பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள் இருந்த அனைத்து பொருட்களும் கருகி நாசமாகியுள்ளது.

வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தபோது அருகில் உள்ள பொதுமக்கள் இணைந்து தீயினைக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தனர்.


குறித்த தீப்பரவல் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார் இரா.சாணக்கியன்!


 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Institute of Politics என்ற அமைப்பினால் குறித்த விருது இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருது வழங்கும் நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றிருந்தது.

எனினும், மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் இரா.சாணக்கியன் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை என அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த வாரம் Institute of Politics என்ற அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இரா.சாணக்கியனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

ஆசிரியையைக் கௌரவிக்கும் நிகழ்வு



( அஸ்ஹர் இப்றாஹிம்)
 
மள்வானை அல்-முபாரக் தேசியக் கல்லூரியின்  சிரேஷ்ட ஆசிரியையும், கடந்த 31 வருடங்களாக தனது தாய்ப் பாடசாலைக்காக முன்னுதாரணமிக்க ஒரு ஆசிரியையாக திகழ்ந்த, ஓய்வு பெறும் நாள் வரையில் கற்பித்தலினூடு மாணவர் உள்ளங்களில் தடம்பதித்த ஒரு ஆசிரியையுமான திருமதி ஏ.ஆர்.ஸெயினுல் ஹுஸைனா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள், பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலையின் ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுகளின் போது, பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதோடு, பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர்கள் மூலம் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மீண்டும் சமூக தொற்றாக மாறியது கொரோனா?

 


கொரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறியுள்ளது என்பதை தெளிவாகக் கூற முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போதே சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் விளக்கமளித்த அவர்,

“கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் விசேடமாக தொற்று அறிகுறிகள் தென்படாதவர்கள் சமூகத்தில் பரவலாக உள்ளனர்.

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தொற்று அறிகுறிகள் இன்றிய நிலையில், முழுமையான தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தால், தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றினால், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை வழமை போன்று கொண்டாட முடியும்.

பூஸ்டர் தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தாலும் புதிய இயல்புநிலையில் இருந்து விலகிச் செல்ல முடியாது” எனக் கூறினார்.

இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க “கொரோனா வைரசானது மீண்டும் சமூக தொற்றாக மாறியுள்ளதாக” கூறியுள்ளார்.

READ MORE | comments

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வாங்காமம் ஒராபிபாஷா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு



( றம்ஸீன் முஹம்மட்)

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வாங்காமம் ஒராபிபாஷா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கக் கண்காட்சி அதிபர் யு.எல்.தாஹிர்  தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்வி அலுவலக  இணைப்பாளர் எஸ்.எல்.ஏ.முனாப் (Resource Person) பிரதம அதிதியாகவும் இலுக்குச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் ஏ.ஹாறுடீன், வாங்காமம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ஸி.ஹாப்தீன் ஆகியோர்  கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த ஆரம்ப பிரிவு பகுதி தலைவர், ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள், ஆரம்ப பிரிவு மாணவர்கள் மற்றும் இந்நிகழ்வைப் பொறுப்பேற்று நடாத்த உதவிய ஆசியர்களான எம்.ஏ.அஸ்மீர்,  ஏ.ஆர்.எப்.ஜுமைலா,  எம்.எச்..பர்சினா ஆகியோரும் கலந்து கொண்டனர். 
READ MORE | comments

லஞ்சம் குறைவான நாடுகள் பட்டியலில் 102வது இடத்தில் இலங்கை



உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

ஆய்வின் அடிப்படையில் 100 மதிப்பெண்களை பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கும் நாடு ஊழல் அதிகமுள்ள நாடு என்றும் வரிசைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான, உலக நாடுகளின் ஊழல்கள் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 37 மதிப்பெண்கள் பெற்று 102ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

பாகிஸ்தானின் தரவரிசை 16 இடங்கள் சரிந்து 28 மதிபெண்களுடன் 140-வது இடத்துக்கு வந்துள்ளது. 2020-ம் ஆண்டின் பட்டியலில் பாகிஸ்தான் 31 மதிப்பெண்களுடன் 124 இடத்தில் இருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 40 மதிப்பெண்களுடன் 85-வது இடத்தில் இருக்கிறது. 

கடந்த 2021ம் ஆண்டுக்கான பட்டியலில் அதிகபட்சமாக 88 மதிப்பெண்களுடன் டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகியவை மிகவும் குறைவாக லஞ்சம் நிலவும் நாடுகள் பட்டியலில் முதலிடங்களில் உள்ளன. மிக அதிக அளவில் லஞ்சம் நிலவும் நாடாக 11 மதிப்பெண்களுடன் தெற்கு சூடான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும்

Friday, January 28, 2022




( றம்ஸீன் முஹம்மட்)

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற, வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், அவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.


பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக  வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி, அதன் வளர்ச்சிக்காய் உழைத்த வைத்திய கலாநிதி றிபாஸின் பணியினை பாராட்டும் வகையில் அவ்வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவைநலன் பாராட்டும், பிரியாவிடை நிகழ்வும் கடந்த வியாளன்  இடம்பெற்றது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் தரமுகாமைத்துவப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம். இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித், திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.சீ.மாஹிர் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வைத்திய கலாநிதி றிபாஸின் சேவைகளைப் பாராட்டி, வைத்தியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

 


(வரதன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது தடுப்பு ஊசி 25 வீதமானவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் 65 வீதமானவர்கள 3வது தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்ளவில்லை எனவும் ஒமிக்ரோன் வைரஸ் என சந்தேகிக்கப்படும் வைரஸ் நோயினால் 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த ஒருவாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். திடிரென கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஒமிக்ரோன் தாக்கம்  அதிகரித்துள்ளது. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று 100 மேற்பட்ட நோயாளிகளும் சந்தேகிக்கப்படும் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப் பட்டுள்ளனர்.கடந்த 3 தினங்களில் 500 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைகளில் வைத்து பராமரிப்பதற்கான போதிய இடங்கள் இல்லை.ஆகவே பொதுமக்கள் இந்த ஒரு அபாயத்தை உணர்ந்தவர்களாக எனவே தேவையற்ற விதத்தில் கூட்டம் கூடுதலை நிறுத்தவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றபோது ஒன்று கூடுவதை நிச்சயமாக தவிர்த்துக் கொள்ளவேண்டும் அதேவேளை ஒன்று கூடுவதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகள் உயர்அதிகாரிகள் என உயர்வு தாழ்வு பார்க்காது சட்டம் அனைவருக்கும் சமம் என்ற விதத்தில்தான் சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் இன்றுஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
READ MORE | comments

95 வீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 95 வீதமானோருக்கு ஒமிக்ரோன் பிறழ்வு உள்ளமை ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துடவ இதனைத் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

நாடு மீண்டும் மூடப்படுமா?


 எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


அத்தகைய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்த வகையான வைரஸ் பரவுகிறது என்பது முக்கியம் அல்ல, ஆனால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்றார்.
READ MORE | comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு நலன் கருதி நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது

 


அஸ்ஹர் இப்றாஹிம்)


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி சிறப்பான சேவையொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாங்குளம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதியானது நீதி அமைச்சர் கௌரவ அலிசப்ரி அவர்களினால் கடந்த வியாளக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி  நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்லஸ் தேவானந்தா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

ஹட்டன் பகுதியில் பஸ் விபத்து! ஒருவர் பலி - பலர் படுகாயம்!!

 


( றம்ஸீன் முஹம்மட்)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை - ஹட்டன் பிரதான வீதியின் தரவளை பட்டல்கலை பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன், 16 பேர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்து இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போது வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எதிரே வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு இடம் கொடுக்க முயன்ற போதே, குறித்த தனியார் பஸ் இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா போடைஸ் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பெர்ணாண்டோ மரியசவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

READ MORE | comments

இலங்கையைச்சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதி வணிக நிறுவனமான ஏ.எஸ்.என்டபிரைசஸ் உடனான ஒப்பந்தம்



அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கையைச் சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதி வணிக நிறுவனமான ஏ.எஸ்.என்டபிரைசஸ் (A.S.Enterprises )  நிறுவனமும் பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் சேர்ந்த ஸெட் கொம் ( ZED COMM ) எனும் சட்டபூர்வமான வணிக நிறுவனங்களுக்கு இடையில் வர்த்தக ரீதியிலான  புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வியாளக்கிழமை  கைச்சாத்திடப்பட்டது.

 இவ் ஒப்பந்தம் ஆனது ஏ.எஸ்.என்டபிரைசஸ் ( A.S.Enterprises ) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலியார் அல் அமீன் (CEO)   மற்றும் ZED COMM நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மட் சாத் அமான் (CEO) , நிர்வாக இயக்குனர் முஹம்மட் ஸீஸான் (Managing Director) ஆகியோருடன் Pakistan High Commission Deputy Ambassador யு.எல்.நியாஸ் முன்னிலையில் இடம்பெற்றது.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |