இரண்டாம் தவணைக்கான விடுமுறை தினம் தொடர்பில் சற்று முன்னர் கல்வி அமைச்சு விடுத்துள்ள செய்தி!!

Wednesday, September 30, 2020


 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்குரிய பாடசாலை விடுமுறை தினம் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி நிறைவடையவுள்ள இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பில் பறிபோன 1500 ஏக்கர் காணியை தடுத்து நிறுத்தினார் சாணக்கியன்!!


 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேச்சல் தரை காணிகள் 1500 ஏக்கரை சிங்கள மக்களுக்கு வழங்கும் திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளார்.


மட்டக்களப்பு எல்லை பகுதியான மயித்தமடு,மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கப்பட உள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்திடம் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்வதற்கு என சுமார் மூவாயிரம் ஏக்கர் காணிகளை கோரியிருந்த நிலையில் முதல் கட்டமாக 1500 ஏக்கர் காணிகளை வழங்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் இணக்கம் தெரிவித்து அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில்.

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின்
ஒன்றியம் மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு அமைய

இன்றைய தினம்(30) கொழும்பில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பெரேரா அவர்களை சந்தித்து மேற்படி விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை வளர்ப்பதற்காக
பயன்படுத்தப்படும் மேய்ச்சல் தரைகளை வெளி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்கள் தங்களிடம் உள்ள மாடுகளை மேய்ப்பதற்கு இடம் இல்லாமல் போகும் எனவும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடா வருடம் செய்துவரும் விவசாய  நடவடிக்கைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை நிறுத்த உள்ள நிலையில் இனி வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாடுகளை மேய்ப்பதற்கு மேலும் இடங்கள் தேவைப்படும் நிலையில் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் காலம் காலமாக மேய்ச்சல் தரை நிலமாக பயன்படுத்தி வந்த காணிகளை
விவசாயத்திற்கு வழங்கினால் பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்படுவதுடன் தங்களிடம் உள்ள மாடுகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு மாவட்டத்தின் பால் உற்பத்தி இல்லாமல் போவதுடன் அது அரசாங்கத்தின் சுய தொழில் திட்டங்களை வெகுவாக பாதிக்கும் எனவே உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை விவசாயத்திற்கு வழங்குவதை தடுத்து நிறுத்துமாறும் இல்லை என்றால் தான் மகாவலி அபிவிருத்தி
அதிகாரசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போவதாக இன்றை ச ந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தி கூறியுள்ளார்.

இன் நிலையில் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறிய மகாவலி
அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் இது குறித்து
ஆராய்வதற்கு தனது மேல் அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல – நாமலிடம் சாணக்கியன் தெரிவிப்பு!

Tuesday, September 29, 2020

 


13 ப்ளஸ்  தொடர்பில்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூறியதாகும். ஆகவே, அவர் நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களை கூறுவாரென நான் நினைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கான இளைஞர் என்ற தலைப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்   இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பொருளாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் வீட்டுத் திட்ட பிரச்சினை என்பன அனைத்து இலங்கை இளைஞர்களுக்கும் இருக்கும் பாரிய பிரச்சினை. 30 வருட கால யுத்தம் இருந்தமையினால் தெற்கைவிட 10 வீதம் அதிகளவான பிரச்சினைகள் வட, கிழக்கில் இருக்கின்றன.

அரசியல் ரீதியான நல்லிணக்க பிரச்சினைக்கு பொருளாதார ரீதியிலான தீர்வை கொடுப்பதாயின் நீண்ட காலத்திற்கு முன்னரே அந்த பிரச்சினைக்கான தீர்வை வழங்கியருக்க முடியும்.

அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவருடைய காலத்தில் பொருளாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் மலையத்திலுள்ளவர்கள் இன்றுவரை வாக்குரிமைக் கூட இல்லாதிருந்திருக்கும்.

ஆகவே, இந்த நாட்டிலுள்ள தமிழ் இளைஞர்களின் அதிகளவான பிரச்சினைகளுக்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குமான தீர்வை புதிய அரசியலமைப்பின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியுமென்பதால் இந்த நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்றேனநான் கூறுவேன்.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் முக்கியஸ்தர்கள் மரணித்துள்ள போதிலும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை நாங்களே எதிர்க் கொள்கின்றோம்.

19 ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அவசர அவசரமாக 20 ஐ கொண்டுவராது புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது பொருத்தமானதாகும்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 13 ப்ளஸ் என்பதன் ஊடாக இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியுமெனக் கூறியிருந்தார்.

ஆகவே, இளம் வயதுடையவர்கள் அதிக காலம் வாழ முடியுமென்பதால் எதிர்காலத்தை பற்றி சந்தித்து முடிவெடுத்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் பதில் கிடைக்கும்.

13 ப்ளஸ் என்பது நான் கூறியதல்ல. ஆது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூறியதாகும். ஆகவே, அவர் நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களை கூறுவாரென நான் நினைக்கவில்லை.

13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல. நாட்டிலுள்ள அரசியலமைப்பிலுள்ள விடயங்கள் என்பதால் அதனை மேலும் பலப்படுத்துமாறே நாங்கள் வலியுறுத்துகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.


READ MORE | comments

காதல் விவகாரம்: மகள் மற்றும் தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவர் தற்கொலை - மட்டக்களப்பு தேத்தாத்தீவில் சம்பவம்

 


பாறூக் ஷிகான்)

காதலை ஏற்க மறுத்த மகள் மற்றும் தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் இன்று(29) அதிகாலை ஒளிந்திருந்து சந்தேக நபர் ஒருவர் குறித்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தேத்தாத்தீவு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆடைகள் தைக்கும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய கத்திக்குத்துக்கு இலக்கான விவாகரத்துப்பெற்ற நிலையில் 5 வயது பிள்ளை ஒன்றிற்கு தாயான 29 வயதான பெண்ணிற்கும் அதே நிறுவனத்தில் தேத்தாத்தீவு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தருக்கும் இடையே காதல் தொடர்பு ஏற்பட்ட நிலையில் குறித்த காதலுக்கு பெண் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காரைதீவு பகுதிக்கு அதிகாலை சென்ற குறித்த குடும்பஸ்தர் ஒளிந்திருந்து காதலித்த பெண் மற்றும் பெண்ணின் தந்தையையும் கத்தியால் குத்தி படுகாயமடைய செய்த பின்னர் தப்பி சென்று தனது வீடு அமைந்துள்ள தேத்தாத்தீவு பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் பெண் மற்றும் அவரது தந்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தரின் சடலம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் திருமணம் செய்த
நிலையில் 12 வயதில் பிள்ளை ஒன்றிற்கு தந்தையானவர் என்பதை மறைத்து காதலித்ததுடன் திருமண ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக தயாரான நிலையில் பெண்ணின் தந்தையினால் திருமணம் செய்த நபர் என கண்டுபிடிக்கப்பட்டடார்.

இதனால் உண்மை நிலையை அறிந்த காதலித்த பெண் உரிய விவாகரத்தை பெற்ற பின்னர் திருமணம் பற்றி பேசமுடியும் என குடும்பஸ்தரிடம் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த அக்குடும்பஸ்தர் பெண் மற்றும் அவரது தந்தையை குத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸ் அவசர இலக்கமான 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

 


நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் 8ஆம் திகதி, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்திலும் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக ஏனைய நாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தையும் பிரதமர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே மஹிந்தவினால் முன்மொழியப்பட்ட, மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

கொரோனா காலத்தில் தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்த மட்டக்களப்பு மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பாராட்டு


 எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

கொரோனா காலப்பகுதியில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்ட காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் தடைப்பட்டிருந்தது. அதனை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் மட்டக்களப்பு வலயத்திற்கு பொறுப்பான வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் ஆகியோரின் அயராத முயற்சியால் தொலைக்காட்சியூடாக கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில் வசந்தம் தொலைக்காட்சியில் வித்தியா வசந்தம் என்ற நிகழ்ச்சியினை 30 நிமிடங்கள் தினமும் சிறந்த ஆசிரியர்கள் குழுவினரின் பங்குபற்றலுடன் தரமான ஒளிப்பதிவினை செய்து வழங்கிய ஸ்ரீதரன் ஆசிரியருடைய அளப்பெரிய சேவை பாரட்டத்தக்கதாகும்.

ஆறாம் ஆண்டு முதல் 9ம் ஆண்டு வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை எவராலும் முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கத்தினால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு செல்லும் 5ம் ஆண்டு மாணவர்களுக்கும் கல்விப் பொது சாதாரணதர உயர்தரங்களுக்கான மாணவர்களுக்கும் மாத்திரம் கல்விப்போதனை தேசிய தொலைக்காட்சியுடாக ஒளிபரப்பபட்டு வந்தமையை கருத்தில் கொண்டு தேசியமட்டத்தில் சகல மாணவர்களினதும் நலனை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி மட்டக்களப்பில் தயாரித்து ஒளிப்பதிவு செய்து வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.

இந் நிகழ்வுக்கு நிதி அனுசரனைகளை வழங்கிய அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் எஸ்கோ, வை.எம்.சீ.ஏ, செரி, வேள்விசன் லங்கா, போன்ற நிதி நிறுவனங்கள் பாரிய பங்காற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பாராட்டு நிகழ்வில் ஐந்து வலயக் கல்வி பணிப்பாளர்களான தினகரன், ரவி, அகிலா, கனகசிங்கம், திருமதி என்.புள்ளைநாயகம், திருமதி சுஜாதா குலேந்திரக்குமார், உதவி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரமிஸ், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புன்ணியமூர்தி ஆகியோர் கலந்து கொன்டனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல் நிலங்கள் மற்றும் குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை


 எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வயல் நிலங்கள் திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழ்தல் நடவடிக்கைகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையும் பாதிப்படைந்து வருகின்றது.

மேலும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குரித்தான குளங்களிலிருந்தும் கணிசமான மணல் அகழ்வதனால் இவற்றின் ஆழம் அளவுக்கதிகமாக அதிகரிக்கப்படுவதுடன் இங்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும் இத்திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின் அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தார்.
READ MORE | comments

மீண்டும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி!

 


2021ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாகச் சீருடை துணியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களை வழங்குவதற்கான திட்டம் இருந்தபோதிலும், சீருடை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சரை வழங்குவதற்கு பதிலாக தேசிய துணி தயாரிப்பாளர்களின் மூலம் சீருடைக்கான துணியை வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக சம்பந்தப்பட்ட பெறுகை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு உள்ளூர் துணி தயாரிப்பாளர்கள் மாத்திரம் விலை விபரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த தயாரிப்பாளர்களினால் மொத்த துணி தேவையில் சுமார் 40 சதவீதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இத்துறை பரிசோதனையின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளுக்கு அவசியமான துணிகளை வழங்கும் பொறுப்பை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், பாரிய மற்றும் சிறியளவிலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உயர் தரத்திலான துணி உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கொட்டுவ, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலைகளில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

READ MORE | comments

காணாமல் போன 15 வயது பாடசாலை மாணவி சடலமாக கண்டெடுப்பு!!


 நுவரெலியா- நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம், அப்பகுதியிலுள்ள ஆற்றொற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நானுஓயா- எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற, டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

“மகள் நேற்றிரவு, 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எனவே நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும்போது மகளை காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்” என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை, தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து கொய்வதற்கு சென்றுக்கொண்டிருக்கையிலேயே, வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாக கிடப்பதை கண்டு அறிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்ட பின், பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

சிம் அட்டைகள் தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

 


இலங்கையில் இனி ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.


பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்.

மற்றொரு நபரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டுகளின் மூலம் நடத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற மோசடிகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
READ MORE | comments

மட்/குருக்கள்மடத்தை பிறப்பிடமாகக் கொண்ட செல்லப்பா - சிவசம்பு (ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்) இன்று காலமானார்


மட்/குருக்கள்மடத்தை பிறப்பிடமாகக் கொண்ட செல்லப்பா - சிவசம்பு (ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்) இன்று 29.09.2020 காலை இறையடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்திபெற கிருஷ்ணாவைப் பிரார்த்திக்கின்றோம்.

 

மரண அறிவித்தல்

குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட
ஓய்வு பெற்ற சேவைக்கால ஆலோசகர் #_செல்லப்பா_சிவசம்பு அவர்கள் 29.09.2020 இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிச் சடங்குகள் 01.10.2020 அன்று களுவஞ்சிகுடியில்  அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.

தகவல் மருமகன்
Thayaparan Manickavasagar

READ MORE | comments

விசேட தேவையுடையோர்களுக்கு காரைதீவு பிரதேச செயலக உதவி.

 


நூருள் ஹுதா உமர்.

காரைதீவு பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் விசேட தேவையுடையோர்களின்  அன்றாட செயற்பாடுகளை  இலகுவாக மேற்கொள்வதற்காக முன்னுரிமை அடிப்படையில் காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள கிராம சேவக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 11 பயனாளிகளுக்கான  சக்கர நாற்காலி, மூக்குக் கண்ணாடி, ஊன்றுகோல், நடைச் சட்டம்  என்பன  பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (28) வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் செல்வி என்.ஜயஷர்மிகா, சமூகசேவை உத்தியோகத்தர் குருஸ் குணரத்தினம் உட்பட  பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா- மகளிருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி அணி சம்பியனாகத் தெரிவு!!

Monday, September 28, 2020


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

46வது தேசிய விளையாட்டு விழாவுக்கு முன்னோடியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா மகளிருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி மகளிர் அணி 12:5 என்ற ஸ்கோர் அடிப்படையில் வெற்றியீட்டிக் கொண்டு சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஞாயிறன்று 27.09.2020 இடம்பெற்ற இப்போட்யில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி மகளிர் அணியும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அணியும் பங்குபற்றின.

இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய ஏறாவூர்ப்மகளிர் அணியுடன் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்பரன் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் டி.சி. றொசைறோ பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கே. சங்கீதா உட்பட நடுவர்களும் விளையாட்டு உத்தியோகத்தர்களும் காணப்படுகின்றனர்.
READ MORE | comments

தமிழ் தேசியத்தின் பாதையில்தான் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதை இன்றைய ஹர்த்தால் பறைசாற்றியுள்ளது!!

 


வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதை இன்றைய ஹர்த்தால் நடவடிக்கை முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கட்சிகளின் அழைப்பை ஏற்று பூரண ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதிமன்றத்தின் ஊடாக தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,

இந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களுடைய சுதந்திரமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அடக்குமுறைகளின் ஊடாக தமிழ் மக்களை ஒரு அடிமைத்தனத்துக்குள் வைத்துக்கொள்ள முயசிகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், வழிபாட்டு உரிமைகளையும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையினை மாற்றியமைக்கவும், தமிழர்களை அவமதிக்கும் இந்த அரசின் செயற்பாட்டை கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைந்து விடுத்த அழைப்பினை ஏற்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்கி உள்ளனர்.

இதன் ஊடாக ஜனநாயக நீதியில் எங்களது செயற்படுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகள் குறித்து சர்வதேச சமூகமும், மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளும் அறிந்திருக்கும். அத்தோடு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில் தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதையும் முழு உலகமும் அறிந்திருக்கும்.

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாநகருக்குள் வர்த்தக நிலையங்கள் உட்பட பாடசாலைகள், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து என அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி இந்த ஜனநாயக போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்கிய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள், முற்சக்கர வண்டி சாரதிகள், தனியார் போக்குவரத்து சங்கத்தினர், கல்விசார் சமுகத்தினர், இளைஞர்கள், பொது அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

இராணுவத்திற்கு சொந்தமான துப்பாக்கி எவ்வாறு பாதாள உலகத்திற்கு சென்றது?

 


பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதே திணைக்களத்தின் 13 அதிகாரிகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இது குறித்த வழக்கு இன்று(28) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மீஹார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ், குறித்த சந்தேக நபர்கள் மாத்தறையில் இருந்து பலபிட்டிய வரை 130 கிலோ கிராம் ஹெரோஹின் போதை பொருளை கடத்திய 'மஞ்சு' என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2 கைத் துப்பாக்கிகளும், இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பிரிவால் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பிரதி சொலிசிட்டர் நாயகம் தெரிவித்தார்.

அதில் ஒரு துப்பாக்கி 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி இராணுவத்தால், யாழ். பாதுகாப்பு தலைமையகத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் மன்றில் குறிப்பிட்டார். பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி அஜித் பத்திரண, சந்தேக நபர்களை பிணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைக்க அவசியம் என கூறினார்.

அதன்படி, வழக்குடன் தொடர்புடைய சமர்ப்பிப்புகளை ஒக்டோபர் 7 திகதி மன்றில் முன்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பின்னர் சந்தேக நபர்களை இந்த மாதம் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மீஹார் உத்தரவிட்டுள்ளார்.
READ MORE | comments

எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையும் வாய்ப்பு!

Sunday, September 27, 2020

 


எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என்று தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையம் கூறியுள்ளது. இதேவேளை நாட்டில் தங்க இருப்புக்கு பஞ்சமில்லை என்றும் தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஹர்ஷா இலுக்பிட்டிய தெரிவித்தார்.


நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 10 டொன் தங்கம் தேவைப்படுகிறது, தற்போது நாட்டில் தங்கத்தின் தேவை உள்ளது, எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது 22 கரட் தங்கத்தின் சந்தை மதிப்பு 90,000 முதல் 92,000 ரூபாய் வரை உள்ளது.உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம் அதாவது சுமார் 4 பவுன்) 21 ஆம் திகதியுடன் ஒப்பிடும்போது 23 ஆம் திகதிக்குள் 66 அமெரிக்க டொலர் குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம்) ரூ. 9712.317 கொழும்பு தங்க சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம்) ரூ. 7775.869 என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியாகிய தகவல்!

 


சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனைக் குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, வழங்கப்பட்ட புள்ளிகள் பூஜ்சியத்தை அடைந்ததும் குறித்த நபர்களின் சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திலும் அமுனுகம தெரிவித்தார்.
READ MORE | comments

கல்வி கற்பதற்கு பாடசாலைக்கு செல்லாதுள்ள மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!!


பாடசாலை மாணவர்கள் பலர், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள காரணத்தினால் பாடசாலைகளுக்கு செல்வதில்லை என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட செயலகம் தீர்மானித்துள்ளது

இதற்கமைய. மாணவர்கள் பாடசாலை செல்லாது உள்ளமைக்கு, போதைப் பொருள் பயன்பாடு ஒரு காரணமாக உள்ள நிலையில், அந்த நிலைமை கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பாடசாலை செல்லாது உள்ளமைக்கு போதைப்பொருள் பயன்பாடு மாத்திரமன்றி பல்வேறு காரணிகள் காணப்படுவதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் பெற்றோர்கள் மற்றும் ஏனைய பெற்றோர்கள், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பும் முக்கியத்துவத்தை அறியாது உள்ளமையே, இதற்கு பிரதான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில், பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

நிம்மதியான தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களா நீங்கள்? - இதோ உங்களுக்காக...!!

 
வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி, மனதிற்கு இதமாக இருந்தாலும், உடலுக்கு பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது. வேலைப்பளு, பகலில் குடும்ப வேலை, இரவில் அலுவலக வேலை என 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் வேலையிலேயே கழிந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் உறக்கத்தை பறிகொடுத்துவிட்டு, ஓய்வின்றி அலைந்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்கதையானால், ஒருநாள் உறக்கம் என்பதே கனவாகிப் போகும். இதை இளம்தலைமுறையினர் உணரவேண்டியது அவசியம்.


ஏன் தூங்கவேண்டும்?
நம் உடல் சரியாக இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. நம் உடல் சோர்வை மட்டும் இது போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மனரீதியான பிரச்சினைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க உதவுகிறது. நாம் ஒருநாள் இரவில் சரியாக உறங்கவில்லையென்றால், அடுத்த நாள் நமது கண்களில் எரிச்சல் ஏற்படும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்தில் இருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அத்தியாவசியமானது. நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் உறக்கம்தான் உதவுகிறது. மற்றவர்களை ஒப்பிடும்போது, நன்றாகத் தூங்கும் பழக்கமுடையவர்களின் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் தேவையான அளவுக்குத் தூங்குபவரின் உடல் எடை சீராக இருக்கும். மனஅழுத்தமும் எட்டிப்பார்க்காது.
யார், எவ்வளவு நேரம் தூங்கலாம்?

தூங்கும் நேரமும், ஆழ்ந்த தூக்கமும் வயதுக்கு ஏற்ப மாறுபடக்கூடியவை. ‘ஒவ்வொரு வயதினரும் அவரவர் வயதுக்கு ஏற்ப சரியாக தூங்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எந்த வயதினர், எவ்வளவு நேரம் தூங்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. அதன்படி, பச்சிளம் குழந்தைகள் 16 முதல் 20 மணி நேரம் தூங்கவேண்டும். பதின் பருவத்தினர் 9 முதல் 10 மணி நேரமும், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் 7 முதல் 10 மணி நேரமும் தூங்கவேண்டும். முதியவர்கள் 8 முதல் 12 மணி நேரம் தூங்குவது சிறந்தது.
நன்றாகத் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம்?

வீட்டிற்குள்ளேயே தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும். உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி, தியானமாவது செய்வது நல்லது. செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும். இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும்.
தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன?

சரியாகத் தூங்கவில்லையென்றால், இதயநோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்துவைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலை சரியாக பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவதுதான் தூக்கம் என்பதை தெரிந்துகொண்டு, நன்றாக தூங்குவோம், நோயின்றி வாழ்வோம்!
READ MORE | comments

மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதியினை நிறுத்த திட்டம்!!

 


இலங்கை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பாலில் தன்னிறைவு பெறும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


இந்த நிலையில், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதி செய்வதனை நிறுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எதிர்காலத்தில் பால்மா இறக்குமதியை முற்றாக நிறுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எமது நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பசுக்களில் பால் கறக்கப்படுகின்றன. நம் நாட்டின் பால் உற்பத்தியில் நூற்றுக்கு 35% மட்டுமே செய்கிறோம். ஏனைய அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பால்மா இறக்குமதி செய்கிறோம். வெளிநாட்டிலிருந்து உட்கொள்ளும் தேசமாக இலங்கை மாறியுள்ளது.

நாங்கள் மில்கோவுடன் இணைந்து, கால்நடைகளுக்குத் தேவையான உதவிகள், உணவுகள், புல் மற்றும் கால் நடைக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் பணியாற்றுவோம்.

3 ஆண்டுகளுக்குள் பாலில் தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டிற்குப் பால் இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். நியூஸிலாந்தில் இருந்து அதிக பால்மா இறக்குமதி செய்யும் நாடு இலங்கைதான்” என அவர் தெரிவித்தார்
READ MORE | comments

மாணவர்கள் தங்களது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அணுகக் கூடிய ஒரு தரப்பாக இருப்பவர்கள் ஆசிரியர் சமூகமே!!
 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மாணவர்கள் தங்கது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அணுகக் கூடிய ஒரு தரப்பாக இருப்பவர்களன் ஆசிரியர் சமூகமே என மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

“சிறுவர் துஷ்பிரயோகமற்ற ‪கல்விச் சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பொறுப்புக்கள்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை 25.09.2020 இஅடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பட்டிருப்பு கல்வி வலயம் ஆகியவற்றின் பங்களிப்போடு இடம்பெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த துறைசார்ந்த சுமார் 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி மயூரி மேலும் தெரிவித்ததாவது,


கள விஜயங்களில் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள். பொலிஸ் நிலையங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்கள், மனித உரிமைகள் ஆணைக்குழவிற்குக் கிடைக்கின்ற முறைப்பாடுகள் நீதிமன்ற வழக்குகள் என்பனவற்றிலிருந்த பெறப்பட்;ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் சமூகத்திற்கு சிறுவர் துஷ்பிரயோகமற்ற ‪கல்விச் சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பொறுப்புக்கள் பற்றிய விழிப்பூட்டலைச் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது ஆசிரியர் தொழிலுள்ள உலகிலுள்ள அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டக் கூடியது.

ஒவ்வொரு மனிதனின் அடிப்படைக் கல்வி அறிவிற்கும் அடித்தளமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.

சிறுவர்கள் மத்தியில் வீடுகளிலிருந்து ஆரம்பிக்கின்ற பிரச்சினைகளாயினும் பாடசாலைகளிலே சக மாணவர்களோடு ஏற்படுகின்ற பிரச்சினைகளாயினும் அல்லது சமுதாயத்திலிருந்து வருகின்ற பிர்சினைகளாயினும் சரி ஆசிரியர் மாணவர் தொடர்பாடல்களில் நடத்தைகளினாலும் ஏற்படுகின்ற பிரச்சிகைளாக இருந்தாலும் அனைத்துப் பிரச்சினைகளையும் வீட்டிலுள்ள தாய் தகப்பன் சகோதரர்களைத் தாண்டி முதலில் மாணவர்கள் கூற முற்படுவது தனக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களிடம்தான்.

இதுதான் நடைமுறையிலுள்ள யதார்த்தம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலே மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம மக்களிடம் கள ஆய்வுகளைச் செய்ததன் அடிப்படையில் மாணவர்கள் மீது பல்வேறு வகைப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான கருத்தரங்குகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களில் நடாத்த ஏற்பாடுகளைச் செய்து நடத்தி வருகின்றோம்.

மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் அகிய முத்தரப்பினருக்கும் விழிப்புணர்வூட்டல்களைச் செய்து வருகின்றோம்.

இச்சந்தர்ப்பங்களில் மாணவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருகின்றார்கள்.

இந்த இடத்திலே ஆசிரியர்களுக்கு ஏற்படும் இழுக்குகளை நாங்கள் அனுமதிக்க முடியாது என்பதனால்தான் இத்தகைய முன்னாயத்த சட்ட அறிவூட்டல் விழிப்புணர்வுகளை நாங்கள் கிரமமாக நடத்தி வருகின்றோம்.

அந்த வகையில் பாடசாலை மட்டங்களிலே மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்களில் முகநூல்களிலும் பெரிதாக வெளிவருகின்றன.

எனவே தற்போதைய தொழினுட்ப அபிவிருத்தி யுகத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருந்து கடமையுணர்வோடு செயற்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வைப்பதே எமது நோக்கமாகும்.

எனவே, மனித உரிமைகள் பெண்கள் உரிமைகள் சிறுவர் உரிமைகள் மேம்பட்டிருக்கின்ற தற்போதைய காலகட்டத்தில் நாம் மிகவும் விழிப்பாக இருந்து சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டும்.

அதே நேரம் எமது எதிர்காலத் தலைவர்களான மாணவ சமுதாயத்தை சிறந்த முறையில் பாதுகாத்து வழி நடத்தி வழிகாட்ட வேண்டும்.

மாணவர் சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டிய முழு முக்கிய பொறுப்பு ஆசிரியர் சமூகத்துக்கே உண்டு

எமது நடைமுறைச் சிக்கல்களை மணித உரிமைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் எவ்வாறு கையாளலாம் என்பது பற்றிய விழிப்புணர்களை ஆசிரியர்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.
READ MORE | comments

தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளின் நியமனம் தாமதமாகும்

 


தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியாகிய டிப்ளோமாதாரிகளின் நியமனம் தாமதமடையும் எனத் தெரியவருகிறது.


ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதமளவில் வழங்கப்படும் இந்நியமனம் இவ்வருடம் நவம்பர் மாதத்தைக் கடக்கும் எதிர்வு கூறப்படுகிறது..

இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்த போதிலும், கற்பித்தல் பயிற்சி தொடர்பான இறுதிப் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாத காரணத்தினாலேயே இந்நியமனம் தாமதமடையும் என தெரியவருகிறது.

இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்த வாரம் அளவிலேயே அனுமதிச் செயன்முறைக்கு முன்வைக்கப்படும் என்றும் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நியமனத்திற்கான செயன்முறை ஆரம்பமாகும் என்றும் தெரியவருகிறது.

ஏற்கனவே, கொரோனா நெருக்கடி காரணமாக இறுதிப்பரீட்சைகளும், கற்பித்தல் பயிற்சிகளும் மீள் திகதியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

 


இறந்தவர்களை,  அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை  இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு  எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப்  போராட்டத்துக்கு  இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது. 

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அன்றைய தினத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட பரீட்சைகளை,  வேறு தினமொன்றுக்கு மாற்றுமாறும் வடக்கு மற்றும் கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின்  அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

அரசின் இராணுவ கெடுபிடிகள் நிறைந்திருக்கக்  கூடிய அன்றைய தினம் மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளில் வைத்திருக்குமாறு பெற்றோரை கேட்டுக் கொள்கின்றோம். 

 எவ்வித அச்சுறுதல்களுக்கும் அஞ்சாமல்,  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அனைத்து ஆசிரியர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து உரிமை கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

குற்றவியல் நடைமுறை கோவையின்,  பொது  தொல்லைகள், ஏற்பாடுகளின் கீழ் நினைவேந்தல் உரிமை,  ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குரிய உரிமை உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் -

இறந்தவர்களை நினைவு கூருவது என்பது உலக  அளவில் ஒரு கலாசார உரிமையாகவும்,  அரசியல் உரிமையாகவும் உள்ளது.

இந்த நிலையில் - போலீசார் ஊடாக   நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் நினைவு கூர்வதற்கு   தடையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியமை ஒருபோதும்   ஏற்றுகொள்ள முடியாது.

இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை இலங்கை  அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும்.

உறுப்புரை 10 ன்  "மனசாட்சியின்  படி செயற்படுதல்",  உறுப்புரை 14 "பேச்சு சுதந்திரத்தின் பாற்பட்டது" என்பவற்றை  இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும். 

யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும்,  இத்தகைய நினைவேந்தல் உரிமைகளை  போலீசாரை கொண்டு,  நீதிமன்றங்களின் மூலம்  இந்த அரசாங்கம் தடுக்க முயல்வதானது,  இந்த அரசாங்கத் தின் பாதுகாப்பற்ற - பலவீனமான தன்மையை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு முழுமையான நீதியின் பாற்பட்ட நல்லிணக்கத்துக்கு யுத்தத்தின் போதும்,  யுத்தத்தின் பின்னரும்  இறந்தவர்களையும்,  அவர்களது உறவுகள் நினைவு கூருவதை இந்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய  பூரண  முடக்கப் போராட்டதுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.

READ MORE | comments

மட்டக்களப்பில் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை!

Saturday, September 26, 2020

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனாவெளி பகுதியில் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த இரு கசிப்பு உற்பத்தி நிலையங்களும் முற்றுகையிடப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக சட்ட விரோத போதைப்பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் மதுவரித்திணைக்களம் தொடர்ச்சியான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனாவெளி பகுதியில் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கான நவீன உபகரணங்கள் மற்றும் கசிப்பு, கோடா என்பன மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

கடந்த 18ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது சட்ட விரோத போதைப்பொருட்களை வைத்திருந்த 08 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
READ MORE | comments

பாடுநிலாவின் தேகமும் மண்ணுக்குள் அடங்கியது.....

 


முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுடல் அரச மரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


செங்குன்றம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட எஸ்.பி.பியின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. மிகுந்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.

தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன், 24 குண்டுகள் முழங்க இன்னும் எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு தேத்தாத்தீவில் முச்சக்கர வண்டியும் காரும் விபத்து ! 13 வயது சிறுவன் பலி

 


லக்ஸ்மன்) 

இன்று(26) மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இவ் விபத்து பற்றி தெரியவருவதாவது,
வீதி ஓரத்தில் நின்ற ஆட்டோ ஒன்றை கார் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இச்சம்பவத்தில் ஆட்டோவிற்கு பின் நின்ற 13 வயது உடைய ரிஷ்கிம் எனும் சிறுவனே பலியானார். இவர் காத்தான்குடியை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தேத்தாத்தீவில் வியாபாரம் செய்து கொண்டு இருந்த நேரத்திலே இது நடைபெற்றிருந்தது.


இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |