Home » » கொரோனா காலத்தில் தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்த மட்டக்களப்பு மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பாராட்டு

கொரோனா காலத்தில் தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்த மட்டக்களப்பு மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பாராட்டு


 எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

கொரோனா காலப்பகுதியில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்ட காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் தடைப்பட்டிருந்தது. அதனை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் மட்டக்களப்பு வலயத்திற்கு பொறுப்பான வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் ஆகியோரின் அயராத முயற்சியால் தொலைக்காட்சியூடாக கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில் வசந்தம் தொலைக்காட்சியில் வித்தியா வசந்தம் என்ற நிகழ்ச்சியினை 30 நிமிடங்கள் தினமும் சிறந்த ஆசிரியர்கள் குழுவினரின் பங்குபற்றலுடன் தரமான ஒளிப்பதிவினை செய்து வழங்கிய ஸ்ரீதரன் ஆசிரியருடைய அளப்பெரிய சேவை பாரட்டத்தக்கதாகும்.

ஆறாம் ஆண்டு முதல் 9ம் ஆண்டு வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை எவராலும் முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கத்தினால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு செல்லும் 5ம் ஆண்டு மாணவர்களுக்கும் கல்விப் பொது சாதாரணதர உயர்தரங்களுக்கான மாணவர்களுக்கும் மாத்திரம் கல்விப்போதனை தேசிய தொலைக்காட்சியுடாக ஒளிபரப்பபட்டு வந்தமையை கருத்தில் கொண்டு தேசியமட்டத்தில் சகல மாணவர்களினதும் நலனை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி மட்டக்களப்பில் தயாரித்து ஒளிப்பதிவு செய்து வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.

இந் நிகழ்வுக்கு நிதி அனுசரனைகளை வழங்கிய அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் எஸ்கோ, வை.எம்.சீ.ஏ, செரி, வேள்விசன் லங்கா, போன்ற நிதி நிறுவனங்கள் பாரிய பங்காற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பாராட்டு நிகழ்வில் ஐந்து வலயக் கல்வி பணிப்பாளர்களான தினகரன், ரவி, அகிலா, கனகசிங்கம், திருமதி என்.புள்ளைநாயகம், திருமதி சுஜாதா குலேந்திரக்குமார், உதவி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரமிஸ், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புன்ணியமூர்தி ஆகியோர் கலந்து கொன்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |