மட்டக்களப்பு முனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Tuesday, December 31, 2013

முனைக்காடு தெற்கு பாலர் பாடசாலையில் 2013.12.30ம் திகதி பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாலர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்களுக்கான சிறந்த கல்வியை புகட்டி அத்திவாரமாக இருக்கின்ற ஆசிரியர்களை மாலை அணிவித்து கௌரவித்தலும் பாடசாலையில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவித்து பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பட்டிப்பளைப் பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பளார் திரு.ந.தயாசீலன், யுக்டா நிறுவன தலைவர் திரு.அ.கருணாகரன், மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை ஆகியோரும் பிள்ளைகளது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
                                   

                               
                            

READ MORE | comments

சீன பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 6 பேர் பலி

Monday, December 30, 2013

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் இயங்கிவந்த அனுமதி பெறாத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கிய 6 பேர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் நிகழ்ந்த பட்டாசு ஆலையில் வெடிமருந்து தயாரிப்பு பகுதியில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடிமருந்து தயாரித்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கி உடல்கள் சின்னாபின்னமாக சிதைந்து பலியாகினர். வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வால் ஆலைக்கு அருகில் இருந்த ஒரு வீடு இடிந்து விழுந்து தரை மட்டமானது. இடிபாடுகளில் சிக்கி அந்த வீட்டில் வாழ்ந்த முதியவர் ஒருவரும் இந்த விபத்தில் பரிதாபமாக பலியானதாக அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயனைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி விடாத வகையில் கொழுந்துவிட்டு எரிந்த பெருந்தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். அரசிடம் அனுமதி பெறாமல் இந்த பட்டாசு ஆலையை நடத்திவந்த நபரை கைது செய்த போலீசார், வெடிமருந்து எங்கிருந்து வாங்கப்பட்டது? என அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
READ MORE | comments

பிரிவுபசார விழா மேடையிலேயே பிரிந்தது கிராமஅலுவலரின் உயிர்! - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சம்பவம்.

கடமையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் விழா நாயகரான கிராம அலுவலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. சண்டிலிப்பாய், கல்வளையைச் சேர்ந்த இராசையா நித்தியானந்தன் (வயது 60) என்ற கிராம அலுவலரே உயிரிழந்தவர் ஆவார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வும் சண்டிலிப்பாய் வடக்கு (ஜே/141) கிராம சேவகர் இராசையா நித்தியானந்தனின் பிரிவு உபசார நிகழ்வும் சனிக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விழா நாயகரான ஒய்வுபெறும் கிராம அலுவலர் இராசையா நித்தியானந்தனின் பிரிவுபசார நிகழ்வு இடம்பெற்றபோது அவர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டார். அவர் அவ்வேளை தாம் கடமையில் இருந்து ஒய்வு பெறவிரும்பவில்லை எனத் தனது உரையில் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவ்வாறான நிலையிலேயே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அங்கு சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மானிப்பாய் கிறீன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். கடந்த 33 வருடங்களாக கிராம சேவகராகக் கடமையாற்றிய இவர் தனது கடமைக்கு அப்பால் நலிவடைந்துள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைத் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களிடம் இருந்து பெற்று வழங்கி வந்தவராவார். நேற்று முன்தினமும் தன்னுடைய முயற்சியால் வாழ்வாதார உதவிகளைப் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். இந்தச் சம்பவத்தை அடுத்து சண்டிலிப்பாய் பகுதி பெரும் சோகமயமாகக் காட்சி அளித்ததுடன் இந்தப் பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
READ MORE | comments

பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயம்

2014ம் வருடம் தொடக்கம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விளையாட்டுத்துறை கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு ஏறாவூரிலுள்ள கடையில் திருட்டு; இருவர் கைது

ஏறாவூர் நகர கடைத்தெருவில் உள்ள கடை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள  பலசரக்குக் கடை ஒன்றிலிருந்து 150,000 ரூபா பெறுமதியான  மீள்நிரப்பு அட்டைகளும் 300,000  ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களும் 100,000 ரூபா பணமும் கடந்த புதன்கிழமை இரவு (25) திருட்டுப் போயுள்ளதாக பொலிஸில் கடை உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.  

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து  திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
தற்போது சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளபோதிலும், இந்தத் திருட்டுச்  சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாக  விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு திருப்பழுகாமம் பண்டிதர் கண்டுமணி ஆசான் கண்ட செல்வம்' நூல் வெளியீட்டு விழா.

வாவியிலே மீனிசை ஓசையும், செந்நெற் கதிர்கள் குலங்கிச் சிரிக்கும், செந்தமிழ் தவழ்ந்து விளையாடும், கூத்தும் குரவையும், கும்மியும் கோலாட்டமும் நிறைந்திருக்கும், வீரம் விளை நிலமாம் சிங்காரக்கண்டி என்று அழைக்கப்படும் பழம்பெரும் பதியான திருப்பழுகாமத்திலே பிறந்து, இலண்டன் மாநகரிலே வசித்து வரும் 'பழந்தமிழ் கலை இணையத்தின் ஸ்தாபகரும், தலைவருமான சுப்பிரமணியப்பாவலன், கிராமியக்கலைஞன் கவிஞர் ஞானமணியம் அவர்களினால் 'பண்டிதர் கண்டுமணி ஆசான் கண்ட செல்வம்' என்னும்
நாமம் தாங்கிய நூலானது எதிர்வரும் 11.01.2014 அன்று காலை 9.30 மணிக்கு பழுகாமம் கண்டுமணி வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்களின் தலைமையில் வெளிவர இருக்கின்றது.

திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் ஸ்தாபகரான பண்டிதர் கண்டுமணி அவர்களின் அவதாரச் சரிதத்தை உள்ளடக்கியதாகவும் இன்னும் பல வரலாறுகளை சான்றுபடுத்தியதாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களும், பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நூலுக்கான நயவுரையினையும், விமர்சனவுரையினையும் முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் தெ.சுப்பிரமணியம் அவர்கள் வழங்கவுள்ளார்கள்.
கவிஞர் ஞானமணியம் அவர்கள் இலண்டன் மாநகரிலே பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் வானொலிக்கலைஞர் ஆகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகவும், சமய,சமூகத் தொண்டராகவும் சுயேச்சை மொழிபெயர்ப்பாளராகவும், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளராகவும் தன்னை தமிழுக்காவும் அர்ப்பணித்து பல சேவைகளை செய்து வரும் இவர் தற்பொழுதும் இலண்டன் மாநகரிலே வசித்து வருகின்றார்.

READ MORE | comments

ஓட்டுநர் இல்லாது பயணித்த ரயில் - காரணம் கண்டுபிடிப்பு

ஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது. விசாரணை அறிக்கையின்படி ரயில் புற இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோரின் தவறே ரயில் தனியே பயணித்தமைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. குறித்த ரயில் என்ஜின் டிசம்பர் 05ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தானியங்கி கல்கிஸ்ஸை வரை சென்று கொண்டிருந்த போது மறித்து நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. எனினும் இதனால் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை.
READ MORE | comments

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் ஜனவரியில் ஆரம்பம்

Sunday, December 29, 2013

2012 - 2013 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் ஜனவரி மாத இறுதி வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவப் பீடங்களில் கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஹிக்ஷனிகா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 23 ஆயிரத்து 125 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதியை பெற்றுள்ளனர். தலைமைத்துவ பயிற்சிகளின் பின்னர் படிப்படியாக இந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவார்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு சமூகத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும் உயர்கல்வி அமைச்சு தொடர்ந்தும் இந்த தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு பெரியகல்லாறில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத மண்ணெண்ணை நிரம்பிய போத்தல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தில் உள்ள சின்னத்துரையர் வீதியில் உள்ள சுரேஸ் என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதே தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணை நிரப்பப்பட்ட போத்தல்களில் திரிகள் வைக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


READ MORE | comments

இலங்கை இராணுவத்தினர் தண்ணீருக்கு பதிலாக பெற்றோலை வைத்தார்கள் - தமிழ் பிரபாகரன் பேட்டி

விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அவர் நேற்றைய தினம் விடுதலையாகி நாடு திரும்பியவுடன் வழங்கிய பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய பேட்டியின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு,
நான் எந்தவொரு ஊடக நிறுவனப் பிரதியாகவோ, பணியாளராகவோ இலங்கைக்கு செல்லவில்லை. விகடனில் புலித்தடம் தேடி... தொடர் கட்டுரை மட்டும் எழுதியிருந்தேன். அவ்வளவுதான். என்னைக் கடற்கரையோரமாக வைத்தே இராணுவத்தினர் கைது செய்தனர். நான் பல காட்சிகளை எனது புகைப்படக் கருவியில் பதிவு செய்திருந்தேன். ஆனால் இராணுவத்தினர் என்னைக் குற்றச்சாட்டுவதற்காக இராணுவ உயர் பாதுகாப்பு பிரதேசங்களையும் முகாம்களையும் மட்டும் படமெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.
என்னைக் கைது செய்த மூன்று நாட்களும் ஆயுதபாணிகள் சகிதம் மிரட்டும் பாணியிலேயே நடத்தினார்கள். நீ சொல்வதை நாம் எழுத முடியாது. நாம் கேட்பதற்கு சாதமான பதிலாகவே நீ சொல்ல வேண்டும் என என்னை வற்புறுத்தினார்கள். நாச்சிக்குடா காவல்துறையில் சாப்பிட்டபின் குடிதண்ணீருக்குப் பதிலாக பெற்றோலை வைத்திருந்தார்கள். அதிலிருந்து எனக்கு அவர்களின் மீது சந்தேகம் வலுத்திருந்தது. விசாரணையின் போது என்னை ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக, ஒரு தமிழராக மட்டும் அவர்கள் நோக்கினார்களே தவிர , சாதாரண மகனாக அவர்கள் விசாரணை செய்யவில்லை.
சுற்றுலா விசாவில் வந்ததாக இராணுவத்தினர் சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளிக்கையில், அதெல்லாம் ஒரு குற்றச்சாட்டு கிடையாது, ஊடகவியலாளர் வீசா பெற்று வந்து யாழ்ப்பாணம் சென்ற சனல்4 நிறுவனத்தினர் உட்பட சர்வதேச செய்தியாளர்களை கடந்த மாதங்களில் வவுனியாவில் வைத்து தடுக்கவில்லையா? இவைகளெல்லாம் வேடிக்கையான குற்றச்சாட்டுக்கள் என்றார். சரி. அப்படியிருந்தாலும் ஏன் என்னை முன்னால் தடுக்கவில்லை. போகவிட்டு பின்னால் வந்து ஏன் தடுத்தார்கள்? தான் இலங்கை அரசின் அராஜகப் போக்குகளை உலகமறியச் செய்வேன் என்றும் தெரிவித்தார்.
READ MORE | comments

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2016ல் நடைபெறமாட்டாது!

2016 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரிட்சையினால் பரிட்சையில் தோற்றும் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்கள் ஒருவித உளத்தாக்கத்திற்கு உள்ளாவதாக அண்மையில் ஆய்வு செய்யப்பட்டு இருந்தது அறிந்ததே.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கல்வியமைச்சின் கீழ் இடம்பெற்றுவரும் செயற்திட்டமான ஆயிரம் பாடசாலை செயற்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டதும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.
READ MORE | comments

சிறுவன் உயிரை பலியெடுத்த குச்சவெளி வெடிப்பு

திருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மாலை வெடிபொருள் ஒன்று வெடித்ததில் 5 வயது சிறுவன் ஒருவன் பலியானதோடு மேலும் இரண்டு சிறார்கள் காயமடைந்துள்ளனர்.
குச்சவெளியில் செந்நூர் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சிறார்களும் உயிரிழந்த சிறுவனின் 10 வயது சகோதரனும் 3 வயது சகோதரியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தமது வீடு அமைந்துள்ள காணிக்குள் இந்தச் சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடைத்த மர்ம பொருளொன்றில் அவர்கள் ஆணி அடித்து பார்த்துள்ளனர். அதன்போதே அந்தப் பொருள் வெடித்துச் சிதறியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறார்கள் மூவரும் திருகோணமலை வைத்தியசாலையில் மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளான். மற்யை இருவரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

யானைக்குட்டி ஒன்றும் இதே கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெடிபொருளை உட்கொள்ள முயன்று காயமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அதேவேளை குச்சவெளி பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னொரு வெடிபொருள் வெடிப்புச் சம்பவத்தில் யானையொன்றும் காயமடைந்துள்ளது.
வெடிபொருளொன்றை உட்கொள்ள முயன்றபோதே யானை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களால் யானை மீட்கப்பட்டு வனஜீவராசிகள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

அம்பாறையுடன் பாரிய நிலப்பரப்பினை இணைக்க முயற்சி – தடுத்து நிறுத்துமாறு இரா.துரைரெட்னம் கோரிக்கை

Saturday, December 28, 2013


மட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட கித்துள் பிரதேச காணியை அம்பாறை உடன் சேர்ப்பதற்கு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு துரைரெட்ணம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  செங்கலடி  பிரதேச  செயலாளர் பிரிவிக்குட்பட்ட  கித்துள்கிராம சேவையாளர் பிரிவில்   உள்ள புளியடிப்பொத்தானை பகுதியில்  நெடியவட்டைக்குளம் அமைந்துள்ளது .

இப்பிரதேசம் பாரிய நிலப்பரப்பை உடையதோடு  மிக நீண்ட காலமாக கால்நடைகளின்; மேய்ச்சல்தரையாகவும்  கால்நடைகளுக்குரிய குடிநீர்க் குளமாகவும் பயனபடுத்தப்பட்டு வருகின்றது .

இதனை கால்நடைகளின் மேய்ச்சல் தரைகுரிய பராமரிப்பு குடி நீர்தேவைகளுக்காக குளத்தைப் புனரமைப்பு செய்வதற்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அப்பிரதேச கால்நடைச் சங்கம் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் பணம் அறவிட்டு ஆரம்ப வேலைகளைச்செய்யத் தொடங்கியுள்ளது .

இச்சந்தர்ப்பத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பும் , கடந்த ஒரு வாரகாலப்பகுதிக்குள்ளும்  அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தம்பிட்டிய பகுதியிலுள்ள பெருன்பான்மை இனத்தைச்சேர்ந்த பாதுகாப்புபடையினரும் பௌத்த பிக்குகள் சிலரும் வந்து இப்பகுதிக் காணிகள் தங்களுடையது  என உரிமைபாராட்டுவதோடு இப்பகுதிக்குள்  நீங்கள் வரக்கூடாது எனவும் இக்காணிகளில்    கரும்புச் செய்கையைத் தாம் ஆரம்பிக்கவுள்ள தாகவும் கூறியதோடு . அப்பகுதியில் நின்றபலரை எச்சரித்துச்சென்றுள்ளனர் .

இப்பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்டபட்ட மேய்ச்சல்தரை காணிகள் அவற்றிற்கான குளமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பரச்சினைகளை அடுத்து மக்கள் என்னிடம் முறையிட்டதற்கமைவாக நேரடியாகச் சென்று பார்வையிட்டு நிலமைகளை அறிந்து கொண்டேன்.இதற்கு அனுமதிவளங்கியது எவ்வாறு? எமதுவளங்களை எம்மக்களே அனுபவிக்கவேண்டும்.

மேலும் இப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியதாகும் . எனவே இப்பகுதியை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு  இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு செங்கலடி பிரதேசசெயலாளரிடம் முறையிட்டுள்ளேன்.

இவைமட்டுமின்றி  இந்தப்பிரதேசத்தினை அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகளை உடனடியாகத்ததடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
are on f
READ MORE | comments

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள சந்திரிக்கா!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 22 ஆம் திகதி மங்கள சமரவீர வீட்டில் நடைபெற்ற இராபோசனத்தின் பின்னர் நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதும் ரணில் மற்றும் சந்திரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் தனியான அறையொன்றில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை நிறுத்தினால் வெற்றிப் பெறும் விதம் குறித்து மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டவர்களாக ரணில் மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியை பொதுவேட்பாளராக நிறுத்தினால் அரசாங்கத்தில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்களின் ஆதரவை பெற முடியும் என மங்கள இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அப்படியான அதிருப்தியாளர்களின் பெயர் விபரங்களையும் மங்கள வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக்கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தேவை ஏற்பட்டால் ஜே.வி.பியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கும் தோல்விக்கு தனது தலையை கொடுக்கக் கூடிய ஒருவரை தேடி வந்த ரணிலுக்கு இது பெறுமதியான சந்தர்ப்பம் என்பதால் அவர் இந்த தீர்மானத்திற்கு தலை அசைத்துள்ளார்.
எனினும் மகிந்த ராஜபக்‌சவை சந்திரிக்காவினால் தோற்கடிக்க முடியும் என மங்கள சமரவீர திட்டவட்டமாக கூறியுள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் (Photos)

மட்டக்களப்பு, ஓட்டமாவடி- காவத்தமுனைக் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஏழு அடி நீளமுள்ள மேற்படி பாம்பானது, ஆட்டு பட்டியொன்றில் நுழைந்து அங்கிருந்த ஆடொன்றை விழுங்கி கொண்டிருந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
பட்டி உரிமையாளர்கள் பாம்பிடமிருந்து ஆட்டை மீட்ட போதும் ஆடு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிடிபட்ட பாம்பினை கிராமத்தவர்கள் கட்டி வைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
p
1(3605)
READ MORE | comments

பிரித்­தா­னி­யாவில் வெள்ள அனர்த்தம் - 100,000க்கும் அதி­க­மான வீடுகள் பாதிப்பு!

பிரித்­தா­னி­யா­வில் இடம்­பெற்று வரும் அடை மழை வீழ்ச்சி கார­ண­மாக 100,000க்கும் அதி­க­மான வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அந் நாட்டு மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசி வரு­வ­துடன் பல பிராந்­தி­யங்­களில் கடும் பனிப்­பொ­ழி இடம்பெறுகின்றது. பிரித்­தா­னிய சுற்­றுச்­சூழல் நிலையம் 150 பிராந்­தி­யங்­களில் வெள்ள அனர்த்த எச்­ச­ரிக்­கை­களையும் இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் மட்டும் 50க்கு மேற்­பட்ட வெள்ள அனர்த்த எச்­ச­ரிக்­கைகளும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
தென்­கி­ழக்கு மற்றும் தென் மேற்கு இங்­கி­லாந்தில் 1200 வீடுகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் சுமார் 7500 வீடுகளுக்கு மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­தி­லி­ருந்து பிறி­தொரு புயல் வீசலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கடு­மை­யான காற்று வீசி வரு­வதால் தென் புகை­யி­ரத சேவை லண்­ட­னுக்கும் சட்­விக்­கு­மி­டை­யி­லான அதிவேக புகை­யி­ரத சேவை என்­பன ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
READ MORE | comments

நித்யானந்தாவின் பிறந்தநாளில் சன்னியாசியான ரஞ்சிதா

நித்யானந்தாவுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா இன்று முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடராகி இருக்கிறார்.
இன்று நித்யானந்தாவின் 37வது பிறந்தநாள் பெங்களூரில் உள்ள பிடரி ஆசிரமத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்து வந்த ரஞ்சிதாவிற்கு நித்யானந்தா இன்று தீட்சை வழங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு ’மா ஆனந்தமாயி’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நித்யானந்தாவிடம் சன்னியாசம் பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில், ”சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன்.
சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். இனிமேல் எப்போதும் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில்தான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா படுக்கையறையில் இருப்பது போன்ற காணொளி ஒளிபரப்பானது. இந்தக் காணொளி ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது.
இதனால் பல சர்ச்சைகள் எழுந்து நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

ஆணி தொண்டையில் சிக்கி நான்கரை வயது சிறுவன் பலி

தொண்டையில் இரும்பு ஆணி சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபச்
சம்பவமொன்று அம்பாறையில் பதிவாகியுள்ளது.
அம்பாறை மிஹதுபுர பிரதேச வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இரும்பு ஆணி ஒன்றை விழுங்கியுள்ளார்.
அது தொண்டையில் சிக்கியதை அடுத்து அவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நான்கரை வயதுடைய தினுல அம்புலுகல என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிற்னர்.
READ MORE | comments

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் கெப் வாகனம் சேதம்....

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தில் 27.12.2013  இடம்பெற்ற விபத்தில் கெப் ரக வாகனம், பிரதான வீதியிலிருந்து விலகி அருகிலிருந்து மரத்துடன் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
READ MORE | comments

பிரதமர் பதவி வேண்டாம், ராகுலுக்கு வழிகாட்டுவேன் - மன்மோகன்சிங் திடீர் அறிவிப்பு!

வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் 15-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. மன்மோகன்சிங் 2 முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் பிரதமர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சி ஏற்கனவே தனது பிரதம வேட்பாளராக குஜராத் முதலர் நரேந்திர மோடியின் பெயரை அறிவித்து விட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 17-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இதில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் வற்புறுத்தி வருகிறார்கள். இதற்காக கூட்டத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரவும் திட்ட மிட்டு உள்ளனர்.
இதற்கிடையே, ராகுல்காந்திக்கு வழி விடும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் ஆக மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், பிரதமர் மன் மோகன்சிங்கும் பங்கேற்றனர்.
அப்போது காங்கிரஸ் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தால் நான் பிரதமர் ஆக மாட்டேன். எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்று சோனியாவிடம் மன்மோகன்சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘10 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடித்து விட்டேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. என்றாலும் கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்துவேன். ராகுல் காந்திக்கு வழிகாட்டியாக செயல்படுவேன்,' என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு மாணவன் உயர்தரப் பரீட்சையில் சாதனை

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாணவர்கள் பல சாதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வசதிகள், பொருளாதாரம் போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் ஒரு மாணவனது சாதனைதான் இது! வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் முத்துவேல் ராசன் என்னும் மாணவன் கலைப் பிரிவில் இரண்டு 'ஏ', ஒரு 'சீ' பெறுபேற்றினை பெற்று பாடசாலை சார்பாக முதலிடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 29வது நிலையினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கேணி எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவன் தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றிருந்தார். இவர் கல்வி கற்கும் காலங்களில் தனது தந்தையை இழந்ததோடு பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து தனது கல்வியை இடை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கிறார்.
இவருடைய தாயார் கடற்கரைக்குச் சென்று கரை வலையில் வரும் மீன்களைத் தெரிந்து கொடுத்து அதன் மூலம் வருகின்ற ஒரு சிறிய வருமானத்தில் தங்களது வாழ்வாதாரத்தை நடாத்தி வந்துள்ளார். இந்த காலங்களில் அந்தப் பணத்தை வைத்து வயிற்றுக் பசியைத் தீர்ப்பதா? அல்லது அறிவுப் பசியைத் தீர்ப்பதா? என்ற கேள்விக்கு மத்தியில் இவரது கல்விப் பயணம் தொடர்ந்திருக்கிறது.
அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறையுள், மின்சாரம் போன்ற விடயங்கள் கூட இல்லாத நிலையில் இவரது கல்வி தொடர்ந்திருக்கின்றது. இத்தனை கஷ்ரங்களுக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சாதாரண தரம் தொடங்கி இருபது வருடங்களின் பின் இந்த மாணவன் மாத்திரம் தான் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று உயர் தரத்திற்கு தகுதியாகியுள்ளார்.
தன்னுடைய உயர்தரக் கற்கைக்காக மிகுந்த பொருளாதார கஷ்டத்துடன் வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் இணைந்து கொண்டதாகவும், தனது கல்வியை தொடர பாதிரியார் சிறிக்காந்த், ஆசிரியர்களான எ.ஜெயரஞ்சித், க.நிதிஹரன், எஸ்.ஸ்ரீகாந் போன்றவர்களின் உதவியுடன் தான் இந்த நிலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது பல்கலைக் கழக அனுமதி கிடைத்திருப்பது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், மறுபக்கம் தம்முடைய இன்றைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று கவலையுடன் தெரிவித்தார். எவ்வளவோ அபிவிருத்திகளை கடந்து போகின்ற இன்றை சூழலில் இவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் இப்படியாக சாதனை என்பது பிரமிப்பான விடயம் தான் எங்களிடம் வளங்கள் இருக்கின்றன.
ஆனால் களங்கள் சரியாக அமையவில்லை என்பதற்கு இவைகள் தான் எடுத்துக் காட்டுகள். இப்படிப்பட்ட இன்னலுக்கு மத்தியிலும் தன் நோக்கத்தில் தளராது சாதித்த மாணவன் ஒரு சிறந்த முன் உதாரணம்.
READ MORE | comments

இருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படுத்தும்


தேசிய நெடுஞ்சாலைக்கு ஏற்றதாக ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியை விஸ்தரிக்கும் பணிகள் ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் ஏறாவூர் நகரில் வீதி விஸ்தரிக்கப்படும் எல்லையை அளந்து அடையாளமிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே விஸ்தரிக்கப்பட்டுள்ள ஏறாவூர் நகர பிரதான வீதி ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. தற்போதுள்ள வீதியில் வருவதும் போவதுமாக ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் மாத்திரமே செல்லக் கூடியதாகவுள்ளது.
இது இனிமேல் தேசிய நெடுஞ்சாலைத் தராதரத்திற்கேற்ப இருவழிப்பாதையாக அதாவது ஏக காலத்தில் வீதியில் வருதற்கும் போவதற்குமாக நான்கு வாகனங்கள் பயணிக்க முடியும்.
அகலமாக்கப்படும் நவீன நெடுஞ்சாலையின் ஒரு மருங்கு 36 அடி அகலமானதானதாக இருக்குமென்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் வீதி விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.
புதிய வீதி விஸ்தரிப்பின் காரணமாக ஏறாவூர் நகர கடைத் தொகுதிகளிலுள்ள பலரது கடைகள் பாதியளவுக்கு உடைக்கப்படவேண்டிய நிலைமை தோன்றியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
READ MORE | comments

குருக்கள்மடம் ‘சுனாமி பேபி’ அபிலாஷ்க்கு 10வயது ......

Friday, December 27, 2013

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை யடுத்து உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்த அபிலாஷ் என்ற குழந்தை இன்று பத்து வயது சிறுவனாக பாடசாலையில் கற்கிறான். பாண்டிருப்பைச் சேர்ந்த இக்குழந்தை சுனாமியையடுத்து சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியிருந்தது.
சுனாமி பேரலைகள் பாண்டிருப்பைத் தாக்கிய போது அபிலாஷ் என்ற இக்குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. சுனாமி அலையானது இக்குழந்தையையும் அள்ளிச் சென்றிருந்தது. பெற்றோர் இக்குழந்தையைத் தேடியலைந்து தங்களது நம்பிக்கையைக் கைவிட்டிருந்த வேளையில் ஒன்றரை நாட்களின் பின்னர் அபிலாஷ் எங்கோ ஓரிடத்தில் சேறு படித்த நிலையில் மீட்கப்பட்டான்.

அபிலாஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்ட போதே சர்ச்சையும் உருவானது. ஒன்பது தாய்மார் அபிலாஷக்கு உரிமை கோரினர். இதனையடுத்து இவ்விடயம் நீதிமன்றத்துக்குச் சென்றது. டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பின்னர் உண்மையான பெற்றோரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். அத்துடன் அவன் உலகப் பிரபல்யம் பெற்றான்.

இச் சர்ச்சை காரணமாக ‘சுனாமி பேபி’ என அழைக்கப்பட்ட இக்குழந்தைக் கும் பெற்றோருக்கும் அமெரிக்கா சென்று வரும் வாய்ப்பும் கிட்டியது. அமெரிக்க தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் அவன் பிரபல்யம் பெற்றான். தற்போது 10 வது சிறுவனாக உள்ள அபிலாஷ் அடுத்த வருடத்தில் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளான்.

READ MORE | comments

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கை வருகிறார் நிஷா தேசாய்

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை வரவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

சட்டங்களை எவ்வாறு மீறுவது என்பதிலேயே அனேகமானோர் கூடியவரையில் முயல்கிறார்கள்

சட்டவாக்கங்கள் மனிதன் தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டாலும், அந்தச் சட்டங்களை எவ்வாறு மீறுவது என்பதிலேயே அனேகமானோர் கூடியவரையில் முயல்கிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்ற,8ஆவது தேசிய பாதுகாப்பு தின மாவட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடரந்து அங்கு உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டமானது பல்வேறு அனர்த்தங்களையும் எதிர் கொள்ளும் மாவட்டமாகும். அனர்த்தங்கள், வறியவர்கள், வசதிபடைத்தவர்கள் என்று பார்ப்பதில்லை. அந்த வகையில் அனர்த்தங்களால் ஏற்படும் அழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். அனர்த்தங்கள் வறிய நாடுகள், வளமுள்ள நாடுகள் என்று பார்ப்பதில்லை. கிறிஸ்மஸ் நாளில் கனடாவில் வீட்டைவிட்டு வெளியில் செல்லமுடியாதளவுக்கு பனிப் பெய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது.
அந்த வகையில் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வததே அவசியமாகும். அனர்த்தங்களிலிருந்து மீட்டல், அதிலிருந்து பாதுகாத்தல், குறைத்தல் தொடர்பான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இதில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் சட்டரீதியாக சம்பந்தப்பட்டவர்கள், அமைப்புக்கள் மனிதனுடைய பாதுகாப்பு ரீதியான விடயங்களை முன்னிறுத்தி செயற்பட வேண்டும்.
மனிதன் தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்வதற்காகக் கட்டமைக்கப்பட்டவையே சட்டவாக்கங்களாகும். இப்போது சட்டத்தை எவ்வாறு மீறுவது என்பதைப்பற்றித்தான் யோசிக்கிறார்கள். கரையோரங்களில் கட்டடங்கள் அமைக்கப்படுதல், சிறிய குளங்களை அழித்து வயல்நிலங்களாக்குதல் எனப் பல விடயங்கள் உதாரணங்களாகக் கூறலாம்.
சட்டங்களின் வரையறைகளையும், அதன் ஒழுங்குகளினையே சுமந்து கொண்டிருக்கும் நாம், உரு வகையில் அந்தவிதமானவற்றுக்கு உதவி புரிபவர்களாக இருக்கிறோம். அந்த வகையில் சமூகத்தின் பாதிப்புக்களுக்கு நாம் ஒரு காரணமாக இருக்கிறோம்.
அனர்த்தங்களின் துன்பங்களிலிருந்து மீள்வதற்கு மக்கள் சுதாரித்துக் கொண்டாலும் அதன் உட் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கே அதிகம் காலம் தேவைப்படுகிறது. பிரதேச செயலாளர்கள், ஏனையவர்களிடமிருந்தும் தற்போது யானைப்பாதிப்பு தொடர்பில் அறிவித்தல்கள் வருகின்றன.
யானைகளில் இருந்து பாதுகாப்புக்காக வேலிகளை அமைத்தோம். அண்மையில் பல பேர் வரை உயிரிழந்தும் உள்ளனர். ஆனால் வனவிலங்குபரிபாலன அதிகாரிகளது தகவல்களின் படி யானைகள் உள்ள கடும் காட்டுப் பகுதிக்குள் செல்வதும், வேலிகளைச் சேதப்படுத்துவதுமே யானைகளால் ஏற்படும் அழிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது.  புல்லுமலையில் நான் பயணம் செய்து கொண்டிருக்கையில் புல் பற்றவைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சேர்ந்து யானைப் பாதுகாப்பு வேலியும் எரிந்து கொண்டிருக்கிறது. நாம் நம்முடைய பாதுகாப்பு, நம்முடைய தேவைக்கான விடங்களில் அக்கறையில்லாதவர்களாக இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
பூகோள ரீதியான மாற்றங்கள் நாடுகளையே இல்லாமல் செய்யும் அளவுக்கான நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. மாலை தீவு அதற்கு உதாரணமாகும். மட்டக்களப்பானது மட்டமான களப்புகளையுடைய பிரதேசமாகும். கடல் மட்டம் உயரும் போது அதிக பாதிப்புக்களை எதிர் கொள்கிறது.
அனர்த்தங்களை நினைவு கூருவதற்காக 10 அல்லது 15 நிதிடங்கள் செலவு செய்வதாக இல்லாமல் இதனை ஞாபகத்தில் வைத்து செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் இலங்கை மக்களைப்பற்றி கூறுகையில் அதிகம் ஞாபக மறதி இல்லாதவர்கள் என்று தெரிவிக்கின்றனர். இவை அபிவிருத்தி, பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கும் தேவையாகும்.
பல்வேறு திட்டங்கள் அனர்த்தப்பாதுகாப்பு, அனர்த்த பாதிப்புக் குறைப்புகளுக்காக செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இவற்றுக்குள் மக்களின் விழிப்புணர்வும் தேவையாக இருக்கிறது.
அனர்த்தங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதல்ல. இலங்கையைப் பொறுத்தவரையில் எரிமலைக்குழுறல் போன்ற பெரிய அனர்த்தங்களை எதிர் கொள்வதல்ல. வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்களையே எதிர் கொள்கிறது, எனவே முழுமையான அனர்த்தம் தொடர்பான அறிவுடனும், ஒத்துழைப்புடனும் செயற்படும் போது அதன் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். அதற்கு உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் மன இசைவுடன் செயற்பட வேண்டும்.
இப்போது நிரந்தர நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் மாவட்டத்தினதும் மக்களதும் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் வகையில் செயற்பட வேண்டும்.

READ MORE | comments

கல்முனையில் இடம்பெற்ற சுனாமி 9 ஆம் ஆண்டு நினைவு தினம்

கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் சுனாமியின் கடலலையின் கோரத்தாண்டவத்தினால் அல்லுண்டு மாண்டு போன தமது உறவுகளைப்பிரிந்த உள்ளங்கள் 9 வருடங்களாயும் அந்த நினைவுனகளோடு இன்றும் கண்ணீர் வடிப்பதனை படங்ளில் காணலாம்


                               


                         
                                         
                           
                                        
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |