மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத மண்ணெண்ணை நிரம்பிய போத்தல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தில் உள்ள சின்னத்துரையர் வீதியில் உள்ள சுரேஸ் என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதே தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணை நிரப்பப்பட்ட போத்தல்களில் திரிகள் வைக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments