Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் ஜனவரியில் ஆரம்பம்

2012 - 2013 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் ஜனவரி மாத இறுதி வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவப் பீடங்களில் கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஹிக்ஷனிகா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 23 ஆயிரத்து 125 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதியை பெற்றுள்ளனர். தலைமைத்துவ பயிற்சிகளின் பின்னர் படிப்படியாக இந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவார்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு சமூகத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும் உயர்கல்வி அமைச்சு தொடர்ந்தும் இந்த தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments