Advertisement

Responsive Advertisement

சீன பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 6 பேர் பலி

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் இயங்கிவந்த அனுமதி பெறாத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கிய 6 பேர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் நிகழ்ந்த பட்டாசு ஆலையில் வெடிமருந்து தயாரிப்பு பகுதியில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடிமருந்து தயாரித்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கி உடல்கள் சின்னாபின்னமாக சிதைந்து பலியாகினர். வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வால் ஆலைக்கு அருகில் இருந்த ஒரு வீடு இடிந்து விழுந்து தரை மட்டமானது. இடிபாடுகளில் சிக்கி அந்த வீட்டில் வாழ்ந்த முதியவர் ஒருவரும் இந்த விபத்தில் பரிதாபமாக பலியானதாக அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயனைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி விடாத வகையில் கொழுந்துவிட்டு எரிந்த பெருந்தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். அரசிடம் அனுமதி பெறாமல் இந்த பட்டாசு ஆலையை நடத்திவந்த நபரை கைது செய்த போலீசார், வெடிமருந்து எங்கிருந்து வாங்கப்பட்டது? என அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments