Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு ஏறாவூரிலுள்ள கடையில் திருட்டு; இருவர் கைது

ஏறாவூர் நகர கடைத்தெருவில் உள்ள கடை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள  பலசரக்குக் கடை ஒன்றிலிருந்து 150,000 ரூபா பெறுமதியான  மீள்நிரப்பு அட்டைகளும் 300,000  ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களும் 100,000 ரூபா பணமும் கடந்த புதன்கிழமை இரவு (25) திருட்டுப் போயுள்ளதாக பொலிஸில் கடை உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.  

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து  திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
தற்போது சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளபோதிலும், இந்தத் திருட்டுச்  சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாக  விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments