Home » » மட்டக்களப்பு திருப்பழுகாமம் பண்டிதர் கண்டுமணி ஆசான் கண்ட செல்வம்' நூல் வெளியீட்டு விழா.

மட்டக்களப்பு திருப்பழுகாமம் பண்டிதர் கண்டுமணி ஆசான் கண்ட செல்வம்' நூல் வெளியீட்டு விழா.

வாவியிலே மீனிசை ஓசையும், செந்நெற் கதிர்கள் குலங்கிச் சிரிக்கும், செந்தமிழ் தவழ்ந்து விளையாடும், கூத்தும் குரவையும், கும்மியும் கோலாட்டமும் நிறைந்திருக்கும், வீரம் விளை நிலமாம் சிங்காரக்கண்டி என்று அழைக்கப்படும் பழம்பெரும் பதியான திருப்பழுகாமத்திலே பிறந்து, இலண்டன் மாநகரிலே வசித்து வரும் 'பழந்தமிழ் கலை இணையத்தின் ஸ்தாபகரும், தலைவருமான சுப்பிரமணியப்பாவலன், கிராமியக்கலைஞன் கவிஞர் ஞானமணியம் அவர்களினால் 'பண்டிதர் கண்டுமணி ஆசான் கண்ட செல்வம்' என்னும்
நாமம் தாங்கிய நூலானது எதிர்வரும் 11.01.2014 அன்று காலை 9.30 மணிக்கு பழுகாமம் கண்டுமணி வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்களின் தலைமையில் வெளிவர இருக்கின்றது.

திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் ஸ்தாபகரான பண்டிதர் கண்டுமணி அவர்களின் அவதாரச் சரிதத்தை உள்ளடக்கியதாகவும் இன்னும் பல வரலாறுகளை சான்றுபடுத்தியதாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களும், பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நூலுக்கான நயவுரையினையும், விமர்சனவுரையினையும் முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் தெ.சுப்பிரமணியம் அவர்கள் வழங்கவுள்ளார்கள்.
கவிஞர் ஞானமணியம் அவர்கள் இலண்டன் மாநகரிலே பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் வானொலிக்கலைஞர் ஆகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகவும், சமய,சமூகத் தொண்டராகவும் சுயேச்சை மொழிபெயர்ப்பாளராகவும், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளராகவும் தன்னை தமிழுக்காவும் அர்ப்பணித்து பல சேவைகளை செய்து வரும் இவர் தற்பொழுதும் இலண்டன் மாநகரிலே வசித்து வருகின்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |