கூட்­ட­மைப்பின் வெற்­றியால் நெருக்­க­டிக்குள் சர்­வ­தேசம்!

Monday, September 30, 2013

கூட்­ட­மைப்பின் வெற்­றியால் நெருக்­க­டிக்குள் சர்­வ­தேசம்!
வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்கள் அளித்­துள்ள பேரா­த­ரவு, உல­கத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது.
உலக ஊட­கங்கள் அனைத்தும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்ற வெற்­றியை பிர­மிப்­போடு பார்க்­கின்­றன.
ஜன­நா­யக ரீதி­யாக தமிழ்­மக்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள அர­சியல் அபி­லா­சை­களை உலக நாடுகள் அதிர்ச்­சி­யோடும் ஆச்­ச­ரி­யத்­தோடும் நோக்­கு­கின்­றன.
ஏனென்றால், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு இந்தத் தேர்தல் முடி­வுகள் முக்­கி­ய­மான செய்­தியை எடுத்துக் கூறி­யுள்­ளது.
சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும், ஊட­கங்­க­ளி­ன தும் முன்­னைய நிலைப்­பா­டு­களை மறு­ப­ரி­சீ­லனை செய்து கொள்­ளவும், சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்­ளவும்- இந்த தேர்தல் முடி­வுகள் அழுத்தம் கொடுத்­துள்­ளன.
தமிழ் மக்­களின் நியா­ய­மான உரிமை கோரிய போராட்­டத்­துக்கு, ஒரு­கட்­டத்தில் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்­ட­தற்குத் தாமும் பொறுப்பு என்ற உள்­ளார்ந்த குற்­ற­வு­ணர்ச்­சியில் உல­கமே கூனிக்­கு­றுக வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.
அந்த ஒரு­த­லைப்­பட்­ச­மான முடிவே, தமி­ழர்­களைப் பேர­ழி­வு­க­ளுக்குள் தள்­ளி­விட்­டது. இந்த வர­லாற்று அவப்­ப­ழியில் இருந்து ஒரு­போதும், சர்­வ­தேச சமூ­கத்­தினால் விடு­பட முடி­யாது.
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, ஐ.நா. பொது ச்­ச­பையில் உரை­யாற்­றிய, ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், இலங்­கையில் போரின் இறு­திக்­கட்­டத்தில் ஐ.நா. தவ­று­களை இழைத்­து­விட்­டது என்று பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொண்­டி­ருந்தார்.
உள்­ளக விசா­ர­ணை­களின் முடிவில் ஐ.நா இந்த முடி­வுக்கு வந்­துள்­ளது.
அது­போ­லவே, போருக்குத் துணை நின்ற நாடுகள், இப்­போது தாம் தவறு செய்து விட்­ட­தாக உணரும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.
தற்­போது தவ­று­களை அவர்கள் உணர்­வதால், முள்­ளி­வாய்க்­காலில் தமி­ழர்கள் இழந்­தவை எதுவும் மீளக் கிடைக்கப் போவ­தில்லை.
அழி­வு­களின் மீதும் இழப்­பு­களின் மீதும் நிமிர்ந்­தெழ வேண்­டிய நிலையில் உள்ள தமிழ்­ மக்கள், இந்தத் தேர்தல் மூலம் சர்­வதே­சத்­துக்கு ஒரு தெளி­வான செய்­தியை அளித்­துள்­ளார்கள்.
தமது தாயகப் பகு­தியில், தம்மைத் தாமே ஆளும் வகையில், சுதந்­தி­ர­மாக, நிம்­ம­தி­யாக வாழ்­வ­தற்­கான எதிர்­பார்ப்பை அவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
தமிழ் மக்கள் இத்­த­கைய முடிவை உல­கிற்கு வெளிப்­ப­டுத்­தி­யது இது தான் முதற்­த­ட­வை­யல்ல.
1977ஆம் ஆண்டு தேர்­தலில் வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னத்தின் மீது ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.
ஆனால், அப்­போது தமிழர் விவ­காரம் சர்­வ­தேச மயப்­பட்­டி­ருக்­க­வில்லை.
2004ஆம் ஆண்டு நாடா­ளு­மன்றத் தேர்­தலில் கூட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து, தமிழ் மக்கள் தமது விருப்­பினை வெளிப்­ப­டுத்­தினர்.
ஆனால், அதனை சர்­வ­தேச சமூகம் வேறு வித­மாகப் பார்த்­தது.
விடு­தலைப் புலி­களின் மூலம் அடை­யப்­பட்ட வெற்­றி­யா­கவே, இலங்கை அரசு பிர­சா­ரப்­ப­டுத்­தி­யது. சர்­வ­தேச சமூகம் அவ்­வாறே தவ­றாக எடை­போட்­டது.
2004 நாடா­ளு­மன்றத் தேர்­தலில் கிளி­நொச்­சியை உள்­ள­டக்­கிய யாழ். மாவட்­டத் தில், 257,320 வாக்­கு­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றி­ருந்­தது.
இப்­போதும், கிளி­நொச்சி, யாழ்.மாவட்­டங்­களில் சுமார் இரண்­டரை இலட்சம் வாக்­கு­க­ளையே கூட்­ட­மைப்பு பெற்­றுள்­ளது.
இவை­யி­ரண்­டுக்கும் இடையில் பெரும் வித்­தி­யாசம் இல்லை.
எனவே, 2004 நாடா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்ற வெற்றி மோச­டி­யா­னது என்ற சர்­வ­தேச சமூ­கத்­தி­னது அப்­போ­தைய முடிவு தவ­றா­னது என்ற உண்மை இப்­போது வெளிப்படையா­கி­யுள்­ளது.
அதா­வது புலி­களால் தான் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்­றது என்ற கருத்து உடைக்­கப்­பட்­டுள்­ளது.
புலி­களின் செல்­வாக்­கிற்கு உட்­பட்­டி­ருந்த காலத்­துக்கும், புலி­களின் ஆதிக்கம் இல்­லாத காலத்­துக்கும் இடையில், தமிழ்­மக்­களின் வாக்­க­ளிப்பு பாரம்­ப­ரி­யத்தில் மாற்றம் நிக­ழ­வில்லை.
அதே­வேளை, தமிழ்­மக்கள் அர­சாங்­கத்தை நிரா­க­ரித்து, அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களை நிரா­க­ரித்து தமக்­கான உரி­மையே முக்­கி­ய­மா­னது என்று தேர்­தலில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
இது, போருக்குப் பிந்­திய சூழலில், அர­சி­யல்­தீர்வு ஒன்றே முக்­கி­ய­மா­னது, முதன்­மை­யா­னது என்­பதை உல­கிற்கு எடுத்துக் காட்­டி­யுள்­ளது.
போர் முடி­வுக்கு வந்­த­வுடன், இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்கள் மத்­தியில் போரி னால் ஏற்­பட்ட காயங்­களை அபி­வி­ருத்தித் திட்­டங்­களின் மூலம் ஆற்­று­வ­தற்கு முற்­பட்­டது.
அதற்கு உலக நாடுகள் பலவும் துணை நிற்­கவும் தவ­ற­வில்லை. எல்லா நாடு­க­ளுமே அதற்கு ஆத­ர­வாக நின்­றன.
பல நாடுகள் அனு­தா­பப்­பட்டு கொடுத்த உத­வி­களை இலங்கை அர­சாங்கம் தனக்குச் சாத­க­மான சூழலை உரு­வாக்­கு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்திக் கொண்­டது.
ஆனால், மாகா­ண­ சபைத் தேர்தல் முடிவு, இந்த நாடு­க­ளுக்கு, உத­வி­க­ளுக்கு முன்னர் உரி­மைகள் தான் முக்­கியம் என்ற உண்­மையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதனால், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு புதிய நெருக்­கடி உரு­வா­கி­யுள்­ளது.
இது­வரை இலங்கை அர­சாங்­கத்தை, மனி­த­ உ­ரி­மைகள் விவ­கா­ரத்தை மட்டும் வைத்துக் கொண்டு அழுத்தம் கொடுத்து வந்த நாடுகள், இறுதித் தீர்­வுக்­கான அழுத்­தத்தை அதி­க­ரிக்க வேண்­டிய நிலைக்கு உள்ளா­கி­யுள்­ளன.
மாகா­ண­ சபைத் தேர்தல் முடிவு வெளி­யா­னதும், இந்­தியா வெளி­யிட்ட அறிக்­கையில், 13வது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும்படியும் அதற்கு அப்பால் செல்லும்படியும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
அமெ­ரிக்­காவும் அர­சியல் தீர்­வுக்கு அழுத்தம் கொடுத்­துள்­ளது.
நவ­நீ­தம்­பிள்­ளையின் அறிக்­கை­யிலும் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்­பு­டனும் வடக்கு மாகா­ண ­ச­பை­யு­டனும், இலங்கை அர­சாங்கம் இணங்கிச் செயற்­பட வேண்டும் என்று எல்லா நாடு­களும் அமைப்­பு­களும் வலி­யு­றுத்திக் கூறி­யுள்­ளன.
மாகா­ண­சபைத் தேர்­தலில் தமிழ்­மக்கள் ஜன­நா­யக ரீதி­யாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்தை, இலங்கை அர­சாங்­கத்­தி­னாலோ சர்­வ­தேச சமு­தா­யத்­தி­னாலோ நிரா­க­ரிக்க முடி­யாது.
இதனால் நிரந்­தர அர­சியல் தீர்வை நோக்கி, இலங்­கையை நகர்த்திச் செல்ல வேண்­டிய நிலை சர்­வ­தேச சமூ­கத்­துக்கு ஏற்­பட்­டுள்­ளது.
போர்க்­குற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வைப்­ப­தையே, போருக்குத் துணை நின்­ற­தற்­காக தாம் செய்ய வேண்­டிய பிரா­யச்­சித்­த­மாகப் பல நாடுகள் கருதிக் கொண்­டி­ருந்­தன.
இப்­போது, அதற்கும் அப்பால், தவ­றான தமது முடி­வு­க­ளுக்­காக நிரந்­தர அர­சியல் தீர்வு ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்­டிய பொறுப்பும் உள்­ளது என்­பது, அந்த நாடு­க­ளுக்கு உணர்த்­தப்­பட்­டுள்­ளது.
இது தமிழர் பிரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்றைப் பெறு­வ­தற்­கான கத­வு­களை அகலத் திறந்து விட்­டுள்­ளது.
ஏனென்றால், இப்­போது தமிழ்­மக்­களின் கருத்தை சர்­வ­தேச சமூகம் நன்­றாக அறிந்து கொண்­டுள்­ளது.
தமிழ் ­மக்­களின் நிலைப்­பா­டு­களின் மீதுள்ள நியா­யத்தைப் புரிந்து கொண்­டுள்­ளது.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு உள்ள சர்­வ­தேச அங்­கீ­கா­ரத்தின் பெறு­மானம் உயர்­வ­டைந்­துள்­ளது.
ஏற்­க­னவே புது­டில்­லியும், வாஷிங்­டனும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இரா­ஜ­தந்­திர அங்­கீ­கா­ரத்தைக் கொடுத்­தி­ருந்த நிலையில், இப்­போ­தைய தேர்தல் வெற்றி அவர்­களை இன்னும் உய­ரத்­துக்குக் கொண்டு சென்­றுள்­ளது.
தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை முன்­னி­றுத்தி சர்­வ­தேச சமூகம் உரை­யாடும் நிலையை தோற்­று­வித்­துள்­ள­துடன், இலங்கை அரசாங்கத்தையும் அவ்வாறே செயற்படும் படியும் அழுத்தங்களையும் கொடுக்கப் போகிறது.
தமிழ் மக்கள் சரியான நேரத்தில், சரியாக எடுத்த முடிவு, நான்கு ஆண்டுகால அரசியல் வெறுமை நிலையில் இருந்து தமிழர்கள் வெளிவரவும் உதவியாக இருக்கப் போகிறது.
இலங்கையில், ஏற்பட்ட அமைதியின் மைக்கு காரணம் பயங்கரவாதப் பிரச்சினை அல்ல, தமிழர்கள் எதிர்கொள்ளும், உரிமைப் பிரச்சினையே என்ற உண்மை, மீண்டும் ஒரு முறை ஜனநாயக ரீதியாக உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொண்டு, தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச்சூழலில், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கத் துணை நிற்பது ஒன்றே, கடந் தகால அவப்பழிகளில் இருந்து உலகம் விடுபடுவதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.
ஹரி­கரன்
READ MORE | comments

இலங்கை மனித உரிமை குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – நவீதம்பிள்ளை

இலங்கை மனித உரிமை குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – நவீதம்பிள்ளை

இலங்கை மனித உரிமை குறித்த தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பாரதூரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் அமுல்படுத்தப்படாவிட்டால் அடுத்த மார்ச் மாத அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நம்பகமான சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்
READ MORE | comments

ஐஸ்வர்யா தனுஸ் குடும்ப சண்டை -கள்ள காதலால் அடிதடி ரகளை (வீடியோ இணைப்பு )

ஐஸ்வர்யா தனுஸ் குடும்ப சண்டை -கள்ள காதலால் அடிதடி ரகளை  (வீடியோ இணைப்பு )


READ MORE | comments

மட்டக்களப்பில் 29 ஆயிரம் விதவைகள்! சமூக சீரழிவுகள் அதிகரிப்பு: மட்டு.அரச அதிபர்

மட்டக்களப்பில் 29 ஆயிரம் விதவைகள்! சமூக சீரழிவுகள் அதிகரிப்பு: மட்டு.அரச அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 ஆயிரம் விதவைகள் உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட ஒன்று கூடல் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 ஆயிரம் விதவைகள் உள்ளனர். அதேபோன்று கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் அதிகளவாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளனர்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் அறிக்கையிடப்படவில்லை. ஏனெனில் சிலர் திருமணம் செய்ததை இவர்கள் பதிவு செய்யாததால் இந்த விபரம் இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டம் அதிகம் மதுபானம் விற்பனை செய்யக் கூடிய மாவட்டமாகவும் உள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறை, குடும்ப வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை செல்லாத சிறுவர்கள் என சமூகச் சீரழிவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன.
இவ்வாறான சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களின் ஊடாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இது தொடர்பாக மாதாந்தம் பிரதேச செயலாளர்களுடன் கூட்டங்களை நடாத்தி இதை கட்டுப்படுத்துவதற்காக பிரதேச மட்டத்திலுள்ள எமது உத்தியோகத்தர்களை கொண்டு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

நுண் கடன் வழங்கும் நிறுவனங்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வழங்கி விட்டு கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம், அந்த நிறுவன அதிகாரிகள் பாலியல் ரீதியாக கடனைத் திரும்பத் தருமாறு கோருவதாகவும் இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் கூட்டம் இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 31 அரச சார்பற்ற நிறவனங்கள் கலந்து கொண்டன.

இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பாலியல் ரீதியாக கடனுக்கு பதிலை தருமாறு கோருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான இந்த நுண் கடன் வழங்கும் நிறுவனங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற பிரதேசங்கள் உட்பட பல பகுதிகளில் பெண்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் இந்த பகுதியிலுள்ள பெண்களுக்கு சுய தொழிலுக்காக கடன்களை அதிக வீத வட்டிக்கு வழங்கி விட்டு தாமதிக்கும் பட்சத்தில் அந்த பெண்களிடம் பாலியல் ரீதியான பதிலை எதிர் பார்ப்பதாகவும் இதனால் கணவன் மனைவிக்கிடையில் குடும்ப வன்முறை ஏற்பட்டு வருவதாகவும் தற்கொலை இடம் பெறுவதற்கும் இது காரணமாக அமைவதாகவும் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
உடனடியா இதனை தடுத்து நிறுத்த அனைவரும் முன் வரவேண்டுமென இதன் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு மீள்குடியேற்றப் பிரதேசங்களில் திட்ட மிட்ட குடியேற்றங்கள் இன உறவை பாதிக்கும் என்பதால் இதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
காணிக்குரித்தானவர்கள் இருக்க வேறு நபர்களை குடியேற்ற சில அமைப்புக்கள் நடவடிக்கை எடுப்பதானது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் காணிக்குரியவர்களை அவர்களின் சொந்த காணிகளில் குடியேற்ற அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுவது என இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வலது குறைந்த விசேட தேவையுடையோர் மற்றும் முதியவர்களுக்கு சமுர்த்தி உதவிகளை வழங்க சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மறுப்புத்தெரிவிப்பதால் அவர்களுக்கு சமுர்த்தி உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்டோரை கேட்பது என இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக வி.கமலதாஸ் மேலும் குறிப்பிட்டார்.
READ MORE | comments

விக்னேஸ்வரன் இன்றைய அன்ரன் பாலசிங்கம்!

விக்னேஸ்வரன் இன்றைய அன்ரன் பாலசிங்கம்!
வடக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இன்றைய அன்ரன் பாலசிங்கம் என அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
புத்திசாலித்தனமான நுணுக்கங்களை கொண்டு தென் பகுதி மக்களை ஏமாற்றி வரும் அவர், வடபகுதி மக்களை ஈழத்தை நோக்கி வழி நடத்தி வருகிறார் என அந்த கட்சியின் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள ஊடகங்களில் ஐக்கியம், நல்லிணக்கத்தை பற்றி பேசும் விக்னேஸ்வரன், தமிழ் ஊடகங்களில் சுயாட்சி, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி பேசி பிரபாகரனை வழிபாடு செய்கிறார்.
விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் இதே வழியையே பின்பற்றினார். அவர் தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு சமாதானம் பற்றி கூறியதுடன் நயினாதீவுக்கு யாத்திரை வருமாறும் குறிப்பிட்டார்.
பாலசிங்கம் சட்டரீதியாக ஈழத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் அதற்கான விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை முன்னெடுத்துச் சென்றார்.
இந்த நிலையில் தென் பகுதி மக்களை ஆழ்ந்த நித்திரையில் வைத்து விட்டு தமது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதே விக்னேஸ்வரனின் திட்டமாகும்.
பிரபாகரன் ஆயுதத்தினால் தனது நோக்கத்தை அடைய முடியும் என நம்பினார். அவரது நோக்கம் அழிக்கப்பட்டது. ஆனால் அழிக்கப்பட்ட அந்த நோக்கத்தை முன்னெடுத்து பிரிவினைக்கான முனைப்புகளை விக்னேஸ்வரன் இன்று மேற்கொண்டு வருகிறார்.
புத்திசாலித்தனமாக வேலை செய்து, மேற்குலம் மற்றும் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தனது சதித்திட்டத்திற்கான நகர்வுகளை விக்னேஸ்வரன் முன்னெடுத்துள்ளார் என்றார்.
READ MORE | comments

விமானத்தை உடைத்தெறியும் பறவைகள் -பயங்கர காட்சி video

விமானத்தை உடைத்தெறியும் பறவைகள் -பயங்கர காட்சி video


plane111


விமானத்தை உடைத்தெறியும் பறவைகள் -பயங்கர காட்சி video


READ MORE | comments

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர்!

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர்!

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
வடக்கு மாகாணசபையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று கோரி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, ஈபிடிபியின் பொதுச்செயலரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வடக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, 7 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எனினும், இதில், ஈபிடிபிக்கு, யாழ்ப்பாணத்தில் ஒன்றும் கிளிநொச்சியில் ஒன்றுமாக இரண்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வவுனியாவில் இரண்டு, யாழ்ப்பாணத்தில் ஒன்று என மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் தலா 1 ஆசனங்களை வென்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அதிக ஆசனங்களை வென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தநிலையில், அங்கஜனை விட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற வகையில், தமது கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

புற்றுநோய்க்கு மருந்தாகும்வெள்ளைப்பூண்டு


புற்றுநோய்க்கு மருந்தாகும்வெள்ளைப்பூண்டு

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருளே மருந்தாக செயல்பட்டு நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. வெள்ளைப் பூண்டு நம்முடைய உணவில் பிரிக்க முடியாத ஒரு பொருள். 

இதில் உள்ள மருத்துவ குணங்கள் அனைவரையும் வியக்கவைக்கிறது. வாரம் இருமுறை வெள்ளைப்பூண்டு சாப்பிடுபவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. புகைப் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.

அவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது வெள்ளைப்பூண்டு சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 30 சதவிகிதம் குறைகிறதாம். சீனாவில்2003ம் ஆண்டு முதல்2010 ஆம் ஆண்டு வரை 1424 நுரையீரல் புற்றுநோயாளிகளிடமும், 4500 ஆரோக்கியமான இளைஞர்களிடமும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைவரிடமும் அவர்களிடம் வாழ்க்கைத்தரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

இதில் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு வெள்ளைப் பூண்டு கொடுக்கப்பட்டது. வெள்ளைப்பூண்டில் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்' ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த ‘அலிசின்' என்ற பொருள் உள்ளது. அலிசின் சிறந்த ஆண்டிஆக்ஸிடென்டாக செயல்பகிறது. இதுதான் நுரையீரல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறதாம்.

காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது. இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது.

மீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது.. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது.

ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது.

பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விஷமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது. அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது.

சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்' சுரப்பது குறையும். வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஆக்ஸிஜனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும். எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
READ MORE | comments

ராஜபக்‌ஷவின் சர்வாதிகார நீதிமன்றங்கள் தமிழர்களை நாடுகடத்த தீர்ப்பெழுதினாலும் ஐயப்படுவதற்கில்லை.‏

ராஜபக்‌ஷவின் சர்வாதிகார நீதிமன்றங்கள் தமிழர்களை நாடுகடத்த தீர்ப்பெழுதினாலும் ஐயப்படுவதற்கில்லை.‏

ஈழத்தமிழர்கள்மீது இலங்கை அரசு நடத்தி முடித்த மோசமான மனித உரிமை மீறல்,  கற்பழிப்பு,  இனப்படுகொலை,  உள்ளிட்ட  அனர்த்தத்துக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு சம்பந்தமான விவகாரங்களை  ஶ்ரீலங்காவின் உள்நாட்டு சட்டத்துக்கமைய ஶ்ரீலங்காவுக்குள்ளேயே தீர்வுகாணவேண்டுமென்று இந்தியாவின் ஆலோசனைக்கேற்ப ஐநா, 

உட்பட பல உலகநாடுகள் இலங்கைக்கு சார்பாக ஒருதலைப்பட்ஷமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.  ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின்போது வரையப்பட்ட அமெரிக்காவின் தீர்மானமும் அதை ஓரளவு வலியுறுத்தியிருக்கிறது. அது சரியான அணுகுமுறைதானா,  அல்லது பிழையான முன்னுதாரணமா எனற தெளிவு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட இன்னும் பலருக்கு புரியப்படவில்லை. 

ஐநா,வையும் அமெரிக்காவையும் இராசதந்திர ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய தலைமத்துவம் இல்லாத பலவீனம் உள்ளதால், ஶ்ரீலங்காவுடன் முரண்பட்டு நிற்பவர்கள் தமது கொள்கை சார்ந்த கருத்தை சர்வதேச மட்டத்தில் வலிமையானதாக்க முடியாதவர்களாக இந்தியா மற்றும் உலகநாடுகளின் தவறான வழிகாட்டுதலில் தொங்கி பயணப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இருந்தும் சர்வதேச மனித உரிமை ஆணையம் மட்டும் சற்று வித்தியாசமான பார்வையுடன் நியாயமான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. 

இந்தியா உட்பட பல உலகநாடுகளின் பிழையான வழிகாட்டுதல் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களை மிக மோசமான சர்வாதிகார போக்கை நோக்கிப்  பயணப்பட வைத்திருக்கிறது. நடத்தி முடிக்கப்பட்ட அனைத்து அநீதிக்கும் குறைந்தபட்ஷ நீதி சார்ந்து முகங்கொடுக்காவிட்டாலும்,  வருங்காலங்களில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை சீர்செய்து மக்கள் மனங்களையும் உலக நாடுகளையும்  திருப்திப்படுத்தும் தன்மைகொண்ட இராசதந்திரத்தை பிரயோகிக்காமல் மீண்டும் மீண்டும் இனப்பகையை நீடிக்கும்வகையிலான தப்பின்மேல் தப்பை செய்து சர்வதேச சட்டத்தின் பொறியில் வீழக்கூடிய செயற்பாடுகளையே கூர்மையடையக்கூடிய செயற்பாடுகளை ஶ்ரீலங்கா கண்மூடித்தனமாக முன்னெடுத்து வருகிறது. 

1987 ல் இந்தியாவால் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் தமிழர் நல்வாழ்வுக்கு ஒன்றும் இல்லையென்றாலும்,  இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட 13, வது திருத்த சட்டமூலம் ஏதோ ஒன்றை பெற்றுத்தரும் என்று சிலரால் நம்பப்படுமளவுக்கு பேசப்பட்டு வந்தது. 13, வது திருத்த சட்டத்தில் குறிப்பிட்ட சரத்துக்களில் வடக்கு கிழக்கு மாகாண ஒன்றிணைப்பு, காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவைகளாக இருந்தன, அவை தவிர கல்வி நிர்வாகம்,  நீதி பரிபாலனங்களும் 13, வது திருத்த சட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக முன்னர்  கூறப்பட்டது.  இருந்தும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு முக்கியம் வாய்ந்ததாக கூறி மக்கள் மன்றத்தில் அரசியல் செய்துவந்தபோது 

வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பானது சட்டவிரோதமான ஒன்றென  ராஜபக்‌ஷவின் கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள நீதிமன்றத்தின் மூலம் தமிழர்கழுக்கு எதிராக சர்வாதிகார தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்குமாறு கோரி ஜே.வி.பி கட்சியினரால் சிங்கள அரசின் பின்னணியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் பின்னரே 16 October 2006.  வடக்கு கிழக்கு இணைப்பு சட்ட விரோதமானது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை- இந்திய  (சர்வதேச) ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1987,ம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. 

2006,ம் ஆண்டு சிங்கள நீதிமன்றத்தின் மூலம் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டபின் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் மீதமுள்ள காணி பொலீஸ் அதிகாரங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்து வந்தனர். அந்த பிரச்சாரத்துக்கும் மரண அடி கொடுப்பதுபோன்ற தீர்ப்பொன்றை ராஜபக்‌ஷ தனது நீதிமன்றம் மூலம் 26, செப்டம்பர் 2013,  வியாழக்கிழமை,  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,  காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே உரித்தானது என சிங்கள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இலங்கை அரசியலமைப்பின்படி  இந்தியா கொண்டுவந்த 13, ஆம் திருத்தச் சட்டத்தின் கூற்றுக்கமைய மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது என, சிங்கள நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. 

இந்திய ஒப்பந்தப் பிரகாரம் மீதம் இருக்கும் பொலீஸ் அதிகாரத்தைப்பற்றி இனிமேல் தமிழ் அரசியல்வாதிகள் பேசுவார்களாக இருந்தால் அடுத்த தீர்ப்பாக பொலிஸ் அதிகாரத்துக்கு அடி விழும் என்பது தமிழ் அரசியல் விற்பன்னர்களுக்கு சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. 

இறுதியாக தமிழர் தரப்பு வாய் திறக்க முடியாதவாறு செய்யும் விதமாக தேர்தல் விஞ்ஞாபனம் சம்பந்தமாக தேச விரோத குற்றம் சாட்டி   தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு 02,ஒக்ரோபர் 2013 அன்று கோர்ட்டில் சமூகமளிக்கும்படி  சிங்கள உயர் நீதிமன்றம் கட்டளை அனுப்பியிருக்கிற்து. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த வடக்கு மாகணசபை தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும்  தமிழ் மக்களுக்கு சுய தீர்மானங்களை எடுக்கும் மாகாண அரசு அவசியம் எனவும் "சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும்"  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு  தேசவிரோத முரண்பாடாக இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்க முயற்சித்தது என  நீதிமன்றத்தில் சிங்கள அரசின் பின்னணியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இவை மட்டுமல்லாது இனி வரும் காலங்களில் ராஜபக்‌ஷ தவிர வேறு எவரும் இலங்கைக்குள் அரசியல் பேசாதிருக்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பெழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

ஆனால் இந்த சர்வாதிகாரப்போக்கே சர்வதேச பொறிக்குள் ராஜபக்‌ஷ அரசை கொண்டு சென்று சேர்க்கும் எழுவாயாக அமையும் வல்லமை கொண்டதாக எண்ணத்தொன்றுகிறது. 
  
READ MORE | comments

ஈழ மக்களுக்கான அரசியலை துணிச்சல் மிக்க கண்ணியமானவர்களும் காலமும்தான் தீர்மானிக்க முடியும்.‏

ஈழ மக்களுக்கான அரசியலை துணிச்சல் மிக்க கண்ணியமானவர்களும் காலமும்தான் தீர்மானிக்க முடியும்.‏

வடக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலில்   அனைவரும் எதிர்பார்த்தவாறு  பெரும்பான்மை பலத்துடன் தமிழர் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது,  

தமிழர் தேசியக்கூட்டமைப்பு தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக சீவி விக்னேஸ்வரன் அவர்களை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக அறிவித்திருக்கிறது.  சபை உறுப்பினர்களுக்கான பிரமாணம் இன்னும் செய்யப்படவில்லை, சபை இயங்குவதற்கான இடமும் இதுவரை திட்டமிடப்படவில்லை,  இருந்தாலும் முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படுவார் என்பது முடிந்த முடிவாகியிருக்கிறது. 

நடைபெற்ற இந்த அரசியல் நகர்த்தல் மேலோட்டமாக ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாக தோற்றப்படுத்தபட்டாலும்,  ஈழ அரசியலின் பட்டுணர்வுத் தன்மையை மனதிற்க்கொண்டு  உணர்ச்சிவசப்பட்டு திருப்திப்படக்கூடிய முடிவான முடிவுக்கு எவரும் வந்துவிட முடியாது என்பது அனைவருக்கும் புரிந்த ஒன்று.  

சர்வதேசத்தையே ஏமாற்றும் தந்திரம் தெரிந்திருந்த ராஜபக்‌ஷவின் கைகளிலேயே அனைத்து அதிகாரங்களும் இருப்பதால் விக்னேஸ்வரன் சம்பந்தன் ஆகியோரின் சலசலப்பு எந்த அளவுக்கு ராஜபக்‌ஷவை மிரட்டும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

ஈழத் தமிழர் வரலாற்றில் இன்று நிகழ்ந்திருக்கும் வடக்கு மாகணசபை என்ற அரசியல் திருப்பம் இன்னும் ஒரு சில மாத, அல்லது வருட பயணப்பாட்டின் பிற்பாடான காலப்பகுதியில் அனைவரது வேஷமும் வெளுத்து மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகும் என்பது தவிர்க்கமுடியாமல் போனாலும்  மாகாணசபை நகர்ந்து செல்லும் ஏற்ற இறக்கங்களையும் மாகாண சபையின் பயணத்தின் பாதை மற்றும் தன்மையையும் பொறுத்து சபையின் விளைச்சல் எப்பேற்பட்ட பலனை தரும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதே பொருத்தமானதாக இருக்கும். 

ஆரம்பத்தில் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு தோற்றப்பாட்டையும்,  மக்களின் மனநிலை வேறொரு தளத்தை நோக்கிய சிந்தனையையும், விக்னேஸ்வரன்,  சம்பந்தன்,  போன்றோரின் அவ்வப்போதான சுய விருப்பான செவ்வி பேச்சுக்கள் வெவ்வேறு ஒரு மாறுபாடான போக்கையும் மக்கள் மத்தியில் ஒரு நிச்சியமற்ற தளம்பல் நிலையை தோற்றுவித்து வந்தது.  இருந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்பது நிச்சியமாக அனைவராலும் உணரக்கூடியதாகவே இருந்தது.  இருந்த பொழுதும் தமிழர் தரப்பின் வெற்றியில் இரு வேறுபட்ட கருத்து எவரிடமும் இருக்கவில்லை.  

ஏனெனில் இது தமிழர்களுக்கான கன்னித்தேர்தல் என்பது ஒரு முக்கிய காரணமாக கொள்ள முடியும்.  உலக வரலாற்றில் கன்னித் தேர்தல்கள் என்றைக்கும் தோல்வியை தழுவியதில்லை. 

தேர்தல் அண்மித்த காலங்களிலும் தேர்தல் முடிவுகள் கிடைத்தபின்னும் புலம்பெயர் தேசங்களிலிருக்கும் தேசியக்கூட்டமைப்பின் ஒரு சில பிரச்சார செய்தி ஊடகங்கள் தனித்தமிழ் ஈழத்தை சிங்களவனிடம் இருந்து பெற்றுவிட்ட உணர்ச்சிப்பெருக்குப்போல புளகாங்கிதத்துடன் செய்திகளையும் தொலைபேசி செவ்விகளையும் விளையாட்டு வர்ணனைபோல பறந்தடித்து வழங்கிக்கொண்டிருக்கின்றன, 

இன்றைய கட்டத்தில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்வரை,    தமக்கான தேசிய அரசியல் உரிமைக்கமைய தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதற்கான உரிமையை பெற்றுக்கொள்ளவேண்டும்,  தமக்கான அடிப்படை தேசிய ஜனநாயகத்தை பெற்றுத்தரக்கூடிய ஒரு ஜனநாயக அரசியல்  வெளியை உலக அரங்கத்துக்கு எடுத்துச்சென்று,  உலக அங்கீகாரம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டு களமிறங்கியிருக்கும் தேசியக்கூட்டமைப்புக்கு முற்று முழுதான ஆதரவை கொடுத்து சிங்கள ஏகாதிபத்திய அரசுக்கு முழு எதிரான மக்கள் மனநிலையை உலக அரங்குக்கு காண்பிக்கவேண்டும்,  தமது ஒற்றுமையை எவ்வாறாவது வெளிக்காட்ட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடே  வடக்கு மாகணசபை தேர்தலில் அதிக ஈடுபாட்டுடன் மக்களை ஒன்று திரள வைத்திருக்கிறது. இதில் சிங்களவனை எதிர்ப்பதற்கான மனநிலை மட்டுமே உணர்வு மயமாக வெளிப்பட்டிருக்கின்றது என்பதில் எவரும் ஐயம் கொள்ளவேண்டியதில்லை. 

இத்தேர்தல் மூலம் மக்கள் கொடுத்த ஆதரவை மிக கவனமாக கையாண்டு சிங்கள அரசுடன் அடுத்த கட்டத்தை நோக்கி போராடவேண்டிய பொறுப்பை ஈழத் தமிழ் அரசியற் தலைமைகளுக்கு மக்கள் வழங்கியிருக்கின்றனர். தவிர மாகாணசபை ஒன்றின் ஊடாக ஒற்றை இலங்கைக்குள் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான உரிமையை பகிர்ந்து கொடுத்துவிடுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் எந்த இடத்திலும் காணப்படவில்லை.  அதற்கான் கள நிலையை நிச்சியமாக மாகாணசபை நிவர்த்தி செய்யும் என்று ஒருபோதும் நம்பமுடியாது என்பதும் அனைவரும் புரிந்து அறிந்த உண்மையாகும். 

முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் விக்னேஸ்வரன் அவர்கள் மிகச் சாதாரணமாக சொல்லுவதுபோல  (இலங்கையின்)  சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனைத்தையும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து மாகாணசபை மூலம் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருப்பது  நெருக்கடிகளை சந்தித்து சுதந்திரக்காற்றை சுவாசிக்க துடிக்கும் சாதாரணமான ஒரு ஈழத் தமிழனால் நம்பக்கூடியதாக இல்லை.   சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் நாடுகளுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய நெறியை பின்பற்றும் அரசுகளுக்கும் அந்த விதிமுறை பொருந்தக்கூடியதாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.  

விக்கினேஸ்வரன் அவர்கள் நீதித்துறையின் உச்ச பதவியில் ஒரு சில வருட காலங்கள் பணியாற்றியவர் என்ற முறையில் சட்டத்தைப்பற்றி அவர் பேசும்போது இடை மறித்து நியாயம் கற்பிக்கும் தகுதி நமக்கில்லாவிட்டாலும்,  இலங்கையில் இதுவரை வாழ்ந்து வந்த சட்டம்,  நீதி நியாயம்,  என்னவிலைக்கு போகிறதென்பது நீதித்துறை போன்ற உயர் பதவியிலிருப்பவர்களை விடவும் கீழ் மட்டத்திலிருக்கும் பாமரனுக்கே அதிகம் அனுபவத்துடன் புரிதலுக்கு அவ்வப்போது கிடைத்திருக்கிறது. 

கடந்த கால அனுபவங்கள் அந்தகைய நம்பிக்கையீனத்தைத்தான் மக்கள் முன் விதைத்து  பெருத்த அறுவடையாக முள்ளிவாய்க்கால்வரை இலவசமாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். அவை மட்டுமல்லாது சர்வதேச சட்டங்களின் விலையையும் ஐநா மன்றம்வரை நாம் பெற்றுக்கொண்ட அனுபவமும் உண்டு. 

தமிழீழம் தான் இறுதியான முடிவு என்ற நிலைக்கு ஈழத்தமிழினம் இன்றைக்கு அல்ல தந்தை செல்வநாயகம் அவர்களின் காலத்திலேயே தள்ளப்பட்டுவிட்டது. அதற்கான காரணங்கள் ஒன்று இரண்டு, ஒன்பது அல்ல பல பல்லாயிரம் முறை விரிவாக அதுபற்றி விளக்கப்பட்டுமிருக்கிறது. தமிழீழம் வேண்டாமென்று ஒருவன் சொல்லுவானாக இருந்தால் அவன் ஒன்று ஶ்ரீலங்கா அரசாங்கத்தில் துணைப்படையின் உறுப்பினராக இருக்கவேண்டும் அல்லது சிங்கள ஆட்சியாளர்களின் கைக்கூலியாக இருக்க வேண்டும். அவைகளை தாண்டி ஒருவன் சொல்லுவானாக இருந்தால் அவன் சாதாரண சிங்களவனாக இல்லாமல் கடும்போக்கு கொண்ட  காடை சிங்களவனாக மட்டுமே இருக்க முடியும். 

ஈழத்தமிழர்களுக்கான எதிர்கால வாழ்க்கைக்கான அரசியல் ஒருபக்கமிருக்க,   ஈழத்தமிழர்கள் சந்தித்த மிகக்கடுமையான கடந்தகால வாழ்க்கை சம்பந்தமான மிக முக்கியம் வாய்ந்த (இனப்படுகொலை) அரசியல் ஒன்றும் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் ஈழத்தமிழர்கள் கடந்தகாலங்களில் அணுவணுவாக  அனுபவித்த வாழ்க்கை அனர்த்தங்களை கழித்துக்கொண்டு அரசியல் வங்குரோத்து நிலையில் மீண்டும் சிங்களவர்களுடன் சமரச அரசியலுக்குள் வீழ்ந்துவிட்டதாகவே ஐக்கிய இலங்கை தீர்வுத்திட்டம் என்ற கோசம் அச்சப்பட வைக்கிறது 

இலங்கை அரசியல் சட்டதிட்டங்களுக்கமைய சட்டப்படி தமிழர்களுக்கான உரிமையை பெற்றெடுக்க இருப்பதாகவும்,  தமிழ் ஈழம் என்ற கோட்பாடு தமது கொள்கை இல்லை,  ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய சபை மூலம் தமிழர்களுக்கான உரிமையை வென்றெடுக்கலாம் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்திருப்பது 1970, களுக்கு முன்னைய அரசியல் அரிச்சுவடிக்கு அவர்கள் திரும்பியிருப்பதை உணர்த்துகிறது.  இருந்தும் காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் புரிந்து கொள்ளும் காலம் வரும்.  சில காலங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். 
  

READ MORE | comments

பொலிஸாரின் நடவடிக்கை மூலம் தமிழ் யுவதியின் உயிர் பறிக்கப்பட்ட கொடூரம்!

பொலிஸாரின் நடவடிக்கை மூலம் தமிழ் யுவதியின் உயிர் பறிக்கப்பட்ட கொடூரம்!

யுவதி ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸாரின் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவமொன்று மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
மாங்குளம் பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் சேர்ந்து இயங்குகின்ற கூட்டு நடவடிக்கை மூலம் தமிழர்களுடைய கலாசாரங்களுக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு சில தமிழ் இளைஞர்களூடாக வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் வீடு, கிணறு மற்றும் அத்தியாவசிய புனர்நிர்மாணம் செய்கின்ற நடவடிக்கைக்கு அனைத்து வகையிலும் தடைகளை ஏற்படுத்துவதும், மணல், கிரவல் போன்றவற்றை பெறமுடியாமல் தடை ஏற்படுத்துவதுமாக இருக்கின்ற வேளையில் சமூக சீரழிவுகளுக்கும் ஊக்குவிப்பதாக அமைகின்றது.
இந்த நிலையில், மாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் யுவதியினை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் பொலிஸாரின் நடவடிக்கையின்மை காரணமாக செல்வி இராஜா துளசி என்ற யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதன் பின்னர்தான் இவ்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஒரு சில நபர்கள் மட்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
READ MORE | comments

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம்: சம்பந்தர் தெரிவிப்பு

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம்: சம்பந்தர் தெரிவிப்பு


இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான தீர்ப்பு வந்துள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தர்  தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு காணி அதிகாரம் ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறுகிறார்.
வடகிழக்கில் நிலவக் கூடிய இன விகிதாச்சாரத்தை மாற்றக் கூடிய வகையில் அரச காணிகள் பகிர்ந்து அளிப்பதை தடுப்பதற்காகத்தான் தமிழ்-சிங்களத் தரப்பிடையே பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன எனவும் சம்பந்தர் சுட்டிக்காட்டினார்.
READ MORE | comments

பாம்பைத் தாக்கும் அணில் வீடியோ இணைப்பு

பாம்பைத் தாக்கும் அணில் வீடியோ இணைப்பு



தன்னை விட உருவத்தில் பெரிய பாம்புடன் அணில் ஒன்று மோதுவது ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது.

இச்சம்பவமானது இலங்கையிலுள்ள தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் இடம்பெற்றுள்ளது.



READ MORE | comments

சிறீ ரெலோ உறுப்பினர் நிமோவின் மரணம் கொலை எனச் சந்தேகம்

சிறீ ரெலோ உறுப்பினர் நிமோவின் மரணம் கொலை எனச் சந்தேகம்

இலங்கை அரச துணைக்குழுவான சிறீ ரெலோ இன் உறுப்பினரான நிமோ என்று அழைக்கப்படும் நிர்மலன் முருகுப்பிள்ளை இலங்கையில் மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் கொலை என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இக் குழுவினுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகவே கொலை நடைபெற்றுள்ளதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத் தீவு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிவனேசனின்  நண்பரான நிமோ தேர்தல் காலத்தில் கூட்டமைப்பிற்கு ஆதரவாகச் செயற்பட்டார் என்ற அதிருப்தி துணைக்குழுவின் உள்ளே நிலவியதாகவும் இதனாலேயே இக் கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் ஜேர்மனியிலும் பின்னர் இங்கிலாந்திலும் வசித்த நிமோ முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் இலங்கை சென்று அங்கு சிறீ ரெலோவுடன் இணைந்து வேலைசெய்தார்.
தாமக்குச் சார்பான ஆயுதக் குழுக்களைப் பலவீனப்படுத்தி அடையாளங்களை அழித்து தமது நேரடி உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வது பாசிச அரசுகளின் இயல்பு. இந்த வகையில் இலங்கை அரசு தனது துணைக்குழுக்களின் ஆளுமை செலுத்தக்கூடிய உறுப்பினர்களை அழித்து தம்மோடு இணைத்துக்கொளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
READ MORE | comments

உங்கள் சருமங்களில் ஏற்படும் நிறக்குறைபாட்டை போக்க எளிய வீட்டு மருத்துவங்கள்!

Sunday, September 29, 2013


உங்கள் சருமங்களில் ஏற்படும் நிறக்குறைபாட்டை போக்க எளிய வீட்டு மருத்துவங்கள்!

வைரங்களூம், வைடூரியங்களும், தங்க நகைகளும் தான் பெண்களுக்குப் பிடித்தவை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மீண்டும் ஒருமுறை நன்றாக எண்ணிப் பாருங்கள். 

மாசு மருவில்லாத மென்மையான சருமமும், தெளிவான மேனி நிறமும் தான் அவர்கள் மிகவும் விரும்புவது. ஆனால் ஒரு சில நேரங்களில், சருமத்தில் ஒரு சில இடங்களில் திட்டு திட்டாக வெள்ளைப் புள்ளிகளும், சரும வண்ணத்தில் மாறுபாடான நிலைகளும் காணப்படும். இத்தகைய சரும வண்ண மாறுபாட்டிற்கு ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. கடைகளில் விற்பனை செய்யப்படும் வேதிப்பொருட்கள் கலந்த மருந்துகளை உபயோகிக்கத் தொடங்கும் முன், நாங்கள் சொல்லும் சில எளிய வீட்டு மூலிகை மருத்துவங்களை முயற்சி செய்து பாருங்கள். அழகுநிலையம் சென்று அழகுபடுத்திக் கொண்டது போன்ற அழகு மிளிர்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள்.

சரும நிற இழப்பு ஏற்பட காரணம் சருமத்தில் வெள்ளை வண்ணத் திட்டுக்கள் ஏற்படக் காரணம் என்னவென்றால், சருமத்தின் அடியில் உள்ள மெலோனின் என்னும் வண்ணம் தரும் பொருளின் குறைபாட்டால், அவ்விடத்தில் நிறம் இழப்பது தான். இதன் காரணமாக சருமத்தில் சமமற்ற நிறம் நிலவுகிறது. இது பரம்பரை குறைபாடாகவும் இருக்கலாம். சூரிய ஒளியில் அதிக நேரம் நிற்பது, மன அழுத்தம், பருக்களால் வந்த காயங்கள், தழும்புகள், ஹார்மோன் அளவில் மாறுபாடுகள், சுற்றுப்புறச் சூழல் மாசு ஆகியவைகள் காரணமாகக் கூட, இந்த நிற இழப்பு ஏற்படலாம்.

என்ன செய்ய வேண்டும்?


- அதிக நேரம் வெயில் படுமாறு நிற்காதீர்கள்.

- குறைந்தபட்சம் SPF 30 உள்ள வெயில் தடுப்பு க்ரீம்களை தினமும் பூசிக் கொள்ளுங்கள்.

என்ன செய்ய வேண்டும்?

- அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சன் ஸ்க்ரீன் க்ரீம்களை பூசிக் கொள்ளுங்கள்.

- இரவுகளில் ட்ரெடினாய்ன் (tretinoin) அல்லது கோஜிக் (kojic) போன்ற அமிலங்களைக் கொண்ட க்ரீம்களைப் பூசிக் கொள்ளத் தவறாதீர்கள்.

கேரட்

கேரட்டை நன்கு அரைத்து பேஸ்ட் போலாக்கி, அதனுடன் சிறிது முல்தானி மெட்டி சேர்த்து பசை போலாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு வைட்டமின் சி மாத்திரையைப் பொடியாக்கி கலந்து கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் தடவிக் கொண்டு இருபது நிமிடங்கள் வைத்திருங்கள். இறுதியில் நல்ல தண்ணீரால் அலசுங்கள். இம்முறையை வாரந்தோறும் செய்து வாருங்கள்.

பால் பவுடர்

4 தேக்கரண்டி பால் பவுடரை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடு விட்டு பசையாக்குங்கள். அத்துடன் சிறிது கிளிசரினும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நிறமிழந்த பகுதிகளில் பூசிக் கொள்ளுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். ஹைட்ரஜன் பெராக்ஸைடும், கிளிசரினும் கடைத் தெருவில் எளிதாகக் கிடைக்கும் பொருட்கள் தான்.

உருளைக்கிழங்கு

ஒரு உருளைக்கிழங்கினை எடுத்துக் கொண்டு, அதன் தோலை உரித்துக் கொள்ளுங்கள். அதன் மீது சிறிது தண்ணீர் தெளித்து, அதனை முகத்தில் தேயுங்கள். நிறமிழந்த பகுதிகளின் மீது அழுத்தித் தேயுங்கள். இதனால் சருமத்தில் உள்ள நிறமிழந்த பகுதிகளை மறையச் செய்யும் தன்மை உருளைக்கிழங்கிற்கு உண்டு.

ஓட்ஸ்

சிறிது ஓட்ஸை எடுத்துக் கொண்டு, நன்கு தூளாக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் தக்காளிச் சாறு சேர்த்து, இக்கலவையை வாரமொரு முறை பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவி வாருங்கள். வெண்புள்ளிகள் மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

துளசி

துளசி இலைகளையும், எலுமிச்சை சாற்றினையும் கலந்து, பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவி வாருங்கள்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெயில் சிறிது சர்க்கரை சேர்த்து, இதனை பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தேயுங்கள். சர்க்கரை கரையும் வரை தேயுங்கள். அதிலும் இதனை கைகள், கால்கள், கழுத்து என்று பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேய்க்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு, தேன், பாதாம் எண்ணெய் ஆகியவற்றினை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து கொள்ளுங்கள். இக்கலவையைக் கொண்டு 15 நிமிடங்கள் முகத்தினை மசாஜ் செய்யுங்கள். இதனால் பொலிவான முகம் உங்களுடையதாகும்.

தண்ணீர் குடிக்கவும்

தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் நீங்கி, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும்.

பப்பாளி

பப்பாளிக் காயை பச்சைப் பாலுடன் கலந்து, முகத்தில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வாருங்கள். முகத்தில் உள்ள வெண்புள்ளி மற்றும் கரும்புள்ளிகளை இது நீக்கும்.

மோர்

தினமும் மோரினால் முகத்தைக் கழுவுவது கூட, முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்கும். மேற்கூறிய எளிய வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள். உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள கருமைகள் மற்றும் வெண்தழும்புகள் குறையும். முறையான சருமப் பராமரிப்பு, சமச்சீரான ஆரோக்கியமான உணவு மற்றும் சிறிது முன்னெச்சரிக்கை ஆகியவை சருமமானது பளபளப்புடனும், பொலிவுடனும் திகழ உதவும்.
READ MORE | comments

ஆனந்தி எழிலன் தொடர்பாகவும் செய்தி வெளியிட்ட அவுஸ்திரேலிய தொலைக்காட்சி மறைந்து வாழவேண்டிய நிலை. (வீடியோ இணைப்பு)

ஆனந்தி எழிலன் தொடர்பாகவும் செய்தி வெளியிட்ட அவுஸ்திரேலிய தொலைக்காட்சி மறைந்து வாழவேண்டிய நிலை. (வீடியோ இணைப்பு)

நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ஆனந்தி எழிலன் தொடர்பாகவும், மற்றும் யாழில் உள்ள பெண்கள் தொடர்பாகவும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 
சமீபத்தில் மைக்கேல் எட்வாட் என்னும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் நிருபர் யாழ் சென்றிருந்தார். அவர் அங்குள்ள நிலையை ஆராய்ந்து 4.00 நிமிடமாக ஒரு வீடியோவை தொகுத்து வழங்கியுள்ளார். அதில் வெள்ளை வான் கடத்தல், ஆனந்தி எழிலன் பேட்டி மற்றும் மறைந்து வாழும் சில யாழ் பெண்கள் தொடர்பாக அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். 
இதனையே நேற்றைய தின ஏ.பி.சி தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டுள்ளது. அதனை வன்னிமீடியா வாசகர்களுக்காக நாம் இங்கே இணைத்துள்ளோம்.




READ MORE | comments

அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் பைலட் மாரடைப்பால் சாவு 161 பயணிகள் உயிர் தப்பினர்


அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் பைலட் மாரடைப்பால் சாவு 161 பயணிகள் உயிர் தப்பினர்


நடுவானில் பறந்த போது விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு பைலட் இறந்தார். மற்றொரு பைலட் சாமர்த்தியமாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 161 பயணிகளும் உயிர் தப்பினர். அமெரிக்காவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் இருந்து வாஷிங்டன் ஷீட்டல் கடற்கரை நகருக்கு போயிங் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. அதில் 161 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்த போது பைலட்டுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து விமானத்தை ஓட்டி செல்ல முடியவில்லை. விவரம் அறிந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடன் இருந்த மற்றொரு பைலட் விமானத்தை சாமர்த்தியமாக ஓட்டி, போயிஸ் டார்மாக் ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கினர்.

அங்கு மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பைலட்டை மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். எனினும் செயின்ட் அல்போன்ஸ் மண்டல மருத்துவ மையத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மாரடைப்பால் இறந்த பைலட் டெக்சாசை சேர்ந்த ஹென்றி ஸ்லம் (63) என்பது தெரிய வந்தது. அமெரிக்க விமானத்தில் 26 ஆண்டுகள் பைலட்டாக பணியாற்றி உள்ளார். விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்த பயணிகள் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

READ MORE | comments

மற்றைய மாகாணங்கள் போன்று வடக்குக்கும் நிதி ஒதுக்கப்படுமா?!- ராஜபக்சவிடம் பான் கீ மூன் கேள்வி

மற்றைய மாகாணங்கள் போன்று வடக்குக்கும் நிதி ஒதுக்கப்படுமா?!- ராஜபக்சவிடம் பான் கீ மூன் கேள்வி
8ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வினவியுள்ளார் என்று அரச உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் 68 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­ உள்ளிட்ட அரச தூதுக்குழுவினருடன், கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே பான் கீ மூன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளதாக அறியமுடிகிறது.
ஐ.நா. செயலாளரின் கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­, போர் முடிவடைந்த 4 வருட காலப்பகுதிக்குள் வட மாகாண அபிவிருத்திக்காக 300 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அறிய முடிகின்றது.
இதற்கமைய எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்றே வடக்கு மாகாணத்துக்கும் ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனத் தெரிய வருகின்றது.
இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் தான், அனைத்து மாகாண சபைகளுக்கும் சம அளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூனிடம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
READ MORE | comments

மகிந்த ராஜபக்ச முன்பாக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கமாட்டார் ?


மகிந்த ராஜபக்ச முன்பாக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கமாட்டார் ?


வராக தெரிவு செய்யப்பட்டுள்ள,சி.வி.விக்னேஸ்வரன்மகிந்த ராஜபக்ச முன்பாக பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொள்ளமாட்டார் என்றுதகவல்கள்தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்முன்னிலையிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார்என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள்தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவில் இதுவரை பெரும்பாலான மாகாணமுதல்வர்கள் சிறிலங்கா அதிபர் முன்னிலையிலேயேபதவியேற்று வந்துள்ளனர்.
எனினும்மாகாண முதலமைச்சர்கள்சிறிலங்கா அதிபரின்முன்னிலையிலேயே பதவியேற்க வேண்டும் என்றசட்டரீதியான கட்டாயம் இல்லாத நிலையில்மகிந்தராஜபக்ச முன்னிலையில்பதவியேற்பதைதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தெரியவருகிறது


ஏற்கனவேகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும்கிழக்குமாகாண ஆளுனர் முன்பாக பதவியேற்கவில்லை.இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர்கள்பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |