இலங்கை மனித உரிமை குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – நவீதம்பிள்ளை
இலங்கை மனித உரிமை குறித்த தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பாரதூரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் அமுல்படுத்தப்படாவிட்டால் அடுத்த மார்ச் மாத அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நம்பகமான சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்
0 Comments