Advertisement

Responsive Advertisement

சிறீ ரெலோ உறுப்பினர் நிமோவின் மரணம் கொலை எனச் சந்தேகம்

சிறீ ரெலோ உறுப்பினர் நிமோவின் மரணம் கொலை எனச் சந்தேகம்

இலங்கை அரச துணைக்குழுவான சிறீ ரெலோ இன் உறுப்பினரான நிமோ என்று அழைக்கப்படும் நிர்மலன் முருகுப்பிள்ளை இலங்கையில் மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் கொலை என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இக் குழுவினுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகவே கொலை நடைபெற்றுள்ளதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத் தீவு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிவனேசனின்  நண்பரான நிமோ தேர்தல் காலத்தில் கூட்டமைப்பிற்கு ஆதரவாகச் செயற்பட்டார் என்ற அதிருப்தி துணைக்குழுவின் உள்ளே நிலவியதாகவும் இதனாலேயே இக் கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் ஜேர்மனியிலும் பின்னர் இங்கிலாந்திலும் வசித்த நிமோ முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் இலங்கை சென்று அங்கு சிறீ ரெலோவுடன் இணைந்து வேலைசெய்தார்.
தாமக்குச் சார்பான ஆயுதக் குழுக்களைப் பலவீனப்படுத்தி அடையாளங்களை அழித்து தமது நேரடி உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வது பாசிச அரசுகளின் இயல்பு. இந்த வகையில் இலங்கை அரசு தனது துணைக்குழுக்களின் ஆளுமை செலுத்தக்கூடிய உறுப்பினர்களை அழித்து தம்மோடு இணைத்துக்கொளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

Post a Comment

0 Comments