மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம்: சம்பந்தர் தெரிவிப்பு
இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான தீர்ப்பு வந்துள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு காணி அதிகாரம் ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறுகிறார்.
வடகிழக்கில் நிலவக் கூடிய இன விகிதாச்சாரத்தை மாற்றக் கூடிய வகையில் அரச காணிகள் பகிர்ந்து அளிப்பதை தடுப்பதற்காகத்தான் தமிழ்-சிங்களத் தரப்பிடையே பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன எனவும் சம்பந்தர் சுட்டிக்காட்டினார்.
0 Comments