பொலிஸாரின் நடவடிக்கை மூலம் தமிழ் யுவதியின் உயிர் பறிக்கப்பட்ட கொடூரம்!
யுவதி ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸாரின் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவமொன்று மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
மாங்குளம் பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் சேர்ந்து இயங்குகின்ற கூட்டு நடவடிக்கை மூலம் தமிழர்களுடைய கலாசாரங்களுக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு சில தமிழ் இளைஞர்களூடாக வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் வீடு, கிணறு மற்றும் அத்தியாவசிய புனர்நிர்மாணம் செய்கின்ற நடவடிக்கைக்கு அனைத்து வகையிலும் தடைகளை ஏற்படுத்துவதும், மணல், கிரவல் போன்றவற்றை பெறமுடியாமல் தடை ஏற்படுத்துவதுமாக இருக்கின்ற வேளையில் சமூக சீரழிவுகளுக்கும் ஊக்குவிப்பதாக அமைகின்றது.
இந்த நிலையில், மாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் யுவதியினை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் பொலிஸாரின் நடவடிக்கையின்மை காரணமாக செல்வி இராஜா துளசி என்ற யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதன் பின்னர்தான் இவ்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஒரு சில நபர்கள் மட்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
0 Comments